விவாகம்
பிறப்பு, திருமண மற்றும் இறப்புச் சான்றிதழ்களைப் பதிவு செய்தலும் பிரதிகள் வழங்குதலும்
நாடு முழுவதும் அமைந்துள்ள 341 பிரதேச செயலகங்களின் கீழ் உள்ள ஒவ்வொரு பதிவாளர் பிரிவுகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள பிறப்பு, திருமண மற்றும் இறப்புப் பதிவாளர்களால் இந்த ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
சான்றிதழ் பிரதிகள் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்படுகின்றன.
பிரதேச செயலகங்களில் அமைந்துள்ள மாவட்டப் பதிவுப் பிரிவு, வாரநாட்களில் மு.ப. 8.30 முதல் பி.ப. 4.15 வரை திறந்திருக்கும். (பணக் கருமபீடங்கள் பி.ப. 3.00 மணி வரை மாத்திரமே திறந்திருக்கும்.)
- சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சாதாரண கடமைகளுக்காக அலுவலகங்கள் திறக்கப்பட மாட்டாது.
பிரிவுப் பதிவாளர்களின் அலுவலக நேரங்கள் வாரத்தின் 5 வேலைநாட்கள் மற்றும் சனிக்கிழமைகளில் மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 2.00 மணி வரை ஆகும்.