Accessibility Tools

Information Icon

திருமணச் சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளைப் பெறுதல்

இணையவழி விண்ணப்பங்கள்

அதேபோல் https://online.ebmd.rgd.gov.lk என்ற இணையதளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம், Online முறையூடாக சான்றிதழ் பிரதிகளை விண்ணப்பிக்கும் வசதி காணப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு பார்வையிடவும்.


அருகிலுள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலிருந்தும் அதன் சான்றிதழ் பிரதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

குறித்த சான்றிதழ் தரவு அமைப்பில் சேமிக்கப்பட்டு இருந்தால், அருகிலுள்ள ஏதேனுமொரு பிரதேச செயலகத்திலிருந்தும் சான்றிதழின் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளலாம். 

  • 1960.01.01 முதல் 2023.12.31 வரையிலான காலப்பகுதிக்குரிய சான்றிதழ்களின் பிரதிகளை கணினி முறைமை ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும். (தரவுத் தொகுப்பில் விபரங்கள் உள்ளனவா என்பதை உங்களுக்கு மிக அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.)

தேவையான விண்ணப்பப்பத்திரத்தை எந்தவொரு பிரதேச செயலகத்தின் மாவட்டப் பதிவாளர் பிரிவிலோ அல்லது இத்திணைக்களத்தின் இணையதளத்திலிருந்தோ பெற்றுக்கொள்ள முடியும்.  document-download

அறவிடப்படும் கட்டணங்கள்:

  • திருமணச் சான்றிதழ் இலக்கம், பதிவு செய்யப்பட்ட பிரிவு மற்றும் பதிவு செய்த திகதி தெரிந்திருப்பின் - ஒரு பிரதிக்குக் கட்டணம் ரூ. 120.00. 
  • திருமணச் சான்றிதழ் இலக்கம் மற்றும் பதிவு செய்த திகதி தெரியாதெனின் (இரண்டு வருடங்களுக்கு மிகாத காலப்பகுதிக்குள் ஆவணங்களைத் தேட வேண்டியிருப்பதால்) - ஒரு பிரதிக்குக் கட்டணம் ரூ. 250.00. மேலதிக பிரதி ஒவ்வொன்றுக்கும் ரூ. 120.00.

உரிய கட்டணத்தைப் பிரதேச செயலகத்திலோ அல்லது பதிவாளர் நாயகத்தின் இலங்கை வங்கி (பத்தரமுல்லை கிளை) கணக்கு இலக்கம் 7039827 இல் செலுத்தி, அங்கு வழங்கப்படும் வங்கி ரசீதுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்பத்திரத்தைச் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்தில் சமர்ப்பித்துச் சான்றிதழ் பிரதிகளைக் கோரலாம். தானியங்கி பணப்பரிமாற்ற இயந்திரம் (ATM) ஊடாகச் செய்யப்படும் கொடுப்பனவுகள் அல்லது Online கொடுப்பனவுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

திருமணச் சான்றிதழை தபால் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டுமெனின், முகவரி எழுதப்பட்ட முத்திரை ஒட்டப்பட்ட கடித உறையை விண்ணப்பப்பத்திரம் மற்றும் மேலே குறிப்பிட்டவாறு பணம் செலுத்திய பற்றுச்சீட்டுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

திருமணம் பதிவு செய்யப்பட்டிருப்பின், கோரப்பட்ட சான்றிதழ் பிரதிகள் செலுத்தப்பட்ட பணத்திற்கு ஏற்ப வழங்கப்படும். திருமணம் பதிவு செய்யப்படவில்லை எனின், அது தொடர்பாக B38 படிவம் மூலம் அறிவிக்கப்படும்.