Accessibility Tools

Information Icon

திருமண (சாதாரண) பதிவு

இரு தரப்பினருமே முஸ்லிம் அல்லாத, வேறு எந்த இனத்தைச் சேர்ந்தவர்களும் அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களும் திருமண (சாதாரண) பதிவுச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளலாம்.

திருமண அறிவித்தல்  இரண்டு பிரதிகளில் எழுதப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டு, அந்தப் பிரிவின் திருமணப் பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். (பெயர் மற்றும் பிறந்த திகதியை உறுதிப்படுத்துவதற்குப் பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டையின் பிரதி சமர்ப்பிக்கப்பட வேண்டும்)

அறிவித்தலை உறுதிப்படுத்த அதிகாரம் உள்ளவர்கள்:

  • அந்தப் பிரிவின் திருமணப் பதிவாளர்
  • சமாதான நீதவான் (JP)
  • பிரசித்த நொத்தாரிசு
  • போதகர் / குருவானவர்

திருமண அறிவித்தல் ஒன்றை ஒப்படைப்பதற்குப் பூர்த்தி செய்ய வேண்டிய தேவைகள்

  • உரிய தரப்பினர் சம்பந்தப்பட்ட பிரிவில் வசிப்பது தொடர்பான தேவையைப் பூர்த்தி செய்தல்
    • திருமண அறிவித்தலை ஒப்படைப்பதற்கு முன்னைய 10 நாட்களுக்குள், குறித்த தரப்பினர் அந்தப் பிரிவில் வசித்திருத்தல்.
    • திருமண அறிவித்தலை ஒப்படைப்பதற்கு முன்னைய 10 நாட்களுக்குள் அத்தரப்பினர் ஒரே பிரிவில் அல்லாமல் வெவ்வேறு பிரிவுகளில் வசித்திருத்தல். 
    • உரிய தரப்பினரில் ஒருவர் திருமண அறிவித்தலை ஒப்படைப்பதற்கு முன்னைய 10 நாட்களுக்குள் இலங்கையில் வசித்திருத்தல், இலங்கையில் வசித்திருக்கவில்லை எனின், மற்றைய தரப்பினர் 10 நாட்கள் இலங்கையில் வசித்திருத்தல்.
    • இருவரில் ஒருவரேனும் திருமண அறிவித்தலை ஒப்படைப்பதற்கு முன்னைய 10 நாட்களுக்குள் இலங்கையில் வசித்திருக்கவில்லை எனின், ஒரு தரப்பினர் 04 நாட்கள் இலங்கையில் வசித்திருத்தல்.
  • இரு தரப்பினரும் கடந்த பிறந்ததினத்திற்கு 18 வயது பூர்த்தியடைந்திருத்தல். 
  • அவர்கள் திருமணம் செய்வதற்கு உறவினர்கள் தடையில்லை என்பது.
  • அந்த நேரத்தில் செல்லுபடியாகும் வேறொரு திருமணம் இல்லை என்பது.

திருமண (சாதாரண) பதிவுக்காக திருமண அறிவித்தலை உரிய பதிவாளரிடம் ஒப்படைத்து 14 நாட்கள் கடந்திருக்க வேண்டும்.

அவ்வாறு 14 நாட்கள் கடப்பதற்கு முன்னர் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டுமாயின், விசேட அனுமதிப்பத்திரத்தின் கீழ் பதிவு செய்வதற்காக பதிவாளரிடம் கோரிக்கை விடுக்க முடியும்.

இரண்டு பிரிவுகளின் திருமணப் பதிவாளர்களிடம் திருமண அறிவித்தல்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கும் போது, அறிவித்தல்கள் பரிமாறப்பட்டு பதிவாளரின் சான்றிதழ் வழங்கப்பட்டதன் பின்னர் திருமணத்தைப் பதிவு செய்ய முடியும்.

திருமணப் பதிவாளரின் அலுவலகத்திற்கு வெளியிலுள்ள ஓரிடத்தில் திருமணத்தை பதிவு செய்ய வேண்டுமாயின், அதற்காக விசேட அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன், அதற்காக உரிய கட்டணம் செலுத்தப்பட்ட விண்ணப்பப்பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

** மேற்குறிப்பிட்ட விடயங்கள் பூர்த்தியடைந்த பின்னர், இரண்டு சாட்சிகள் முன்னிலையில் பதிவாளர் திருமணத்தைப் பதிவு செய்வதுடன், திருமணச் சான்றிதழின் மூன்றாவது பிரதி மணமகளிடம் ஒப்படைக்கப்படும்.

திருமணப் பதிவின் போது மேலதிக மாவட்டப் பதிவாளருக்கு/ பதிவாளருக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள்:

இல.

விடயம்

யாருக்குச் செலுத்தப்பட வேண்டும்?

யாரால் செலுத்தப் பட வேண்டும்

கட்டணம் (ரூ.)

கட்டணம் செலுத்தும் முறை

1

பதிவாளரின் அலுவலகத்தில் அல்லது வேறு ஏதேனும் ஒரு இடத்தில் திருமண அறிவித்தல் ஒன்றைச் சமர்ப்பித்தல்.

பதிவாளர்

விண்ணப் பதாரர்

120.00

பணமாகச் செலுத்தப்பட வேண்டும்

2

மேலதிக மாவட்டப் பதிவாளரின் அல்லது மாவட்டப் பதிவாளரின் அலுவலகத்தில் அல்லது வேறு ஏதேனும் ஒரு இடத்தில் திருமண அறிவித்தல் ஒன்றைச் சமர்ப்பித்தல்.

மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர்

விண்ணப் பதாரர்

120.00

பணமாக அரசாங்கத்திற்குச் செலுத்தப்பட வேண்டும்

3

திருமண அறிவித்தல் தொடர்பான பதிவாளரின் சான்றிதழை வெளியிடுதல்.

பதிவாளர்

திருமண தரப்பினர்

120.00

பணமாகச் செலுத்தப்பட வேண்டும்

4

திருமண அறிவித்தல் தொடர்பான மேலதிக மாவட்டப் பதிவாளரின் அல்லது மாவட்டப் பதிவாளரின் சான்றிதழை வெளியிடுதல்.

மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர்

திருமண தரப்பினர்

120.00

பணமாகச் செலுத்தப்பட வேண்டும்

5

பதிவாளரின் அலுவலகத்தில் திருமணத்தை நடாத்துதல்

பதிவாளர்

திருமண தரப்பினர்

900.00

பணமாகச் செலுத்தப்பட வேண்டும்

6

மேலதிக மாவட்டப் பதிவாளரின் அல்லது மாவட்டப் பதிவாளரின் அலுவலகத்தில் திருமணத்தை நடாத்துதல்.

மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர்

திருமண தரப்பினர்

900.00

பணமாக அரசாங்கத்திற்குச் செலுத்துதல் வேண்டும்

7

38(1) அல்லது 38(2) பிரிவுகளின் கீழ் பதிவாளரின் அலுவலகத்திற்கு வெளியிலுள்ள ஓரிடத்தில் திருமணத்தை நடாத்துதல்.

பதிவாளர்

திருமண தரப்பினர்

900.00

பணமாகச் செலுத்தப்பட வேண்டும்

-----

-----

-----

 

8

38(1) அல்லது 38(2) பிரிவுகளின் கீழ் மேலதிக மாவட்டப் பதிவாளரின் அல்லது மாவட்டப் பதிவாளரின் அலுவலகத்திற்கு வெளியிலுள்ள ஓரிடத்தில் திருமணத்தை நடாத்துதல் 

மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர்

திருமண தரப்பினர்

900.00

பணமாக அரசாங்கத்திற்குச் செலுத்தப்பட வேண்டும்

9

27(3) பிரிவின் கீழ் விசேட அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளுதல்.

அரசாங்கத்திற்கு

திருமண தரப்பினர்

120.00

பணமாகச் செலுத்தப்பட வேண்டும்

10

பதிவு செய்யப்பட்ட ஒரு வழிபாட்டுத் தலத்தில் நடாத்தப்பட்ட திருமணத்தைப் பதிவு செய்தல்.

மாவட்ட பதிவாளர்

திருமண தரப்பினர்

900.00

பணமாக அரசாங்கத்திற்குச் செலுத்தப்பட வேண்டும்

11

38(1), (2) பிரிவுகளின் கீழ் பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே திருமணத்தைப் பதிவு செய்வதற்கான இல்ல அனுமதிப்பத்திரத்தை வெளியிடுதல்.

அரசாங்கத்திற்கு

திருமண தரப்பினர்

60.00

பணமாகச் செலுத்தப்பட வேண்டும்