சாதாரண திருமணச் சான்றிதழில் உள்ள பிழை திருத்தம்
திருமணத்தை பதிவு செய்யும் போது ஏற்பட்ட பிழையை திருத்திக் கொள்வதற்கு குறித்த திருமணத்தின் தரப்பினர்களால் உரிய கோரிக்கையை பொருத்தமான அதிகாரம்பெற்ற மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.
தேவையான ஆவணங்கள்,
- திருமணச் சான்றிதழ்.
- நீதிமன்றத்தினால் கோரப்படும் ஆவணங்கள்.
வழக்கறிஞர் ஒருவர் ஊடாக, உரிய தரப்பினரால் உரிய அதிகார வரம்புள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
எழுத்துப் பிழையாயின்: அது தொடர்பாக, திருமணம் நடைபெற்ற இடத்திற்குரிய பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளருக்குத் தெரியப்படுத்துவதன் மூலம், திருமணப் பதிவேட்டின் இரண்டாம் பிரதியில் விபரம் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள முடியும்.
கண்டியத் திருமணச் சான்றிதழில் உள்ள பிழை திருத்தம்
திருமணத்தைப் பதிவு செய்யும்போது ஏற்பட்டுள்ள பிழையைத் திருத்திக் கொள்வதற்கான கோரிக்கையை, திருமணம் பதிவு செய்யப்பட்ட இடத்திற்குரிய பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
- திருமணச் சான்றிதழ்.
- ஏற்பட்டுள்ள பிழை மற்றும் சரியான தகவல்கள் அடங்கிய சத்தியக்கடதாசி.
- விடயங்களை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஏனைய ஆவணங்கள்.
முஸ்லிம் திருமணச் சான்றிதழில் உள்ள பிழை திருத்தம்
திருமணத்தைப் பதிவு செய்யும்போது ஏற்பட்டுள்ள பிழையைத் திருத்திக் கொள்வதற்கான கோரிக்கையை, திருமணம் பதிவு செய்யப்பட்ட இடத்திற்குரிய பிரதேச செயலகத்தின் மாவட்டப் பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
- திருமணச் சான்றிதழ்.
- ஏற்பட்டுள்ள பிழை மற்றும் சரியான தகவல்கள் அடங்கிய சத்தியக்கடதாசி.
- விடயங்களை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஏனைய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னர், மாவட்டப் பதிவாளரினால் முறையான விசாரணை நடத்தப்பட்டு, அதற்கான கட்டளையைப் பிறப்பிக்க முடியும்.