உறுதிப்பத்திரச் சான்றிதழ்கள் தொடர்பான பின்னரான கொடுக்கல் வாங்கல்களைப் பதிவு செய்தல்
- உறுதிப்பத்திரத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட காணி தொடர்பாக, பின்னரான கொடுக்கல் வாங்கல்கள், அதாவது விற்பனை செய்தல், நன்கொடை அளித்தல், அடகு வைத்தல், குத்தகைக்கு விடுதல் போன்ற கொடுக்கல் வாங்கல்களைப் பதிவிற்காகச் சமர்ப்பிக்கும் போது, 2022.12.01 திகதியிடப்பட்ட 2308/27 ஆம் இலக்க வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள படிவங்களுக்கு அமையச் சமர்ப்பிக்கவும்.
- இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட யாதேனும் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டால் அன்றி, அந்த உறுதிப்பத்திரத்திற்கு அல்லது தொடர்பிற்கு உரிமை கிடைக்காது. (1998 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க உறுதிப்பத்திரப் பதிவுச் சட்டத்தின் 38 ஆம் பிரிவின் படி).
- ஆவணமொன்றைத் தயாரிக்கும் போது / பதிவிற்காகச் சமர்ப்பிக்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள்:
- உறுதிப்பத்திர சான்றிதழை ஆவணத்துடன் சமர்ப்பிக்கவும்.
- ஆவணத்தை A4 அளவிலான நீடித்து நிலைக்கக்கூடிய வெள்ளை நிற அல்லது வெள்ளை நிறத்திற்கு நெருக்கமான காகிதத்தில் தயாரிக்கவும். இணைப்புகள் ஏதேனும் இருப்பின், அவையும் A4 அளவிலான காகிதத்தில் தயாரிக்கப்பட வேண்டும்.
- உறுதிப்பத்திர இலக்கத்திற்கு ஏற்ப, உரிய பெறுமதிக்கு முத்திரை வரி செலுத்தி, முத்திரை வரி செலுத்திய பற்றுச்சீட்டின் மூலப்பிரதியை ஆவணத்துடன் இணைத்துச் சமர்ப்பிக்கவும்.
- விற்பனை, நன்கொடை, கைமாற்றம் அல்லது பரிமாற்ற ஆவணம் எனின், அதனை இரண்டு பிரதிகளில் தயாரித்து, ஒரு பிரதியில் கடவுச்சீட்டு அளவிலான புகைப்படங்களை ஒட்டவும்.
- உட்பிரிவு அல்லது ஒன்றிணைப்பு ஆவணம் எனின், அந்த ஆவணத்துடன் நில அளவை வரைபடத்தின் வன் பிரதியை (Hard copy) சமர்ப்பிக்கவும்.
- விற்பனை ஆவணத்துடன் எவ்விதமான நிபந்தனைகளையும் அல்லது ஆயுட்கால அனுபவ உரிமையையும் உட்படுத்த முடியாது.
- நன்கொடை ஆவணமொன்றின் ஆயுட்கால அனுபவ உரிமையை மாற்றுவதைத் தவிர வேறு எந்த நிபந்தனையையும் உட்படுத்த முடியாது.
- அதிகாரப் பத்திரத்தின் (Power of Attorney) மூலம் சொத்து மாற்றம் செய்யும் போது, அந்த அதிகாரப் பத்திரத்தின் மூலம் குறித்த கொடுக்கல் வாங்கலைச் செய்வதற்கு அதிகாரம் இருத்தல் வேண்டும். அத்துடன் அதிகாரப் பத்திரத்தில் உறுதிப்பத்திரச் சான்றிதழில் குறிப்பிட்டுள்ள காணி பற்றிய விபரங்களை உள்ளடக்கவும்.
- இணை உரிமையாளர்கள் உள்ள உறுதிப்பத்திரச் சான்றிதழ் ஒன்றை மாற்றும் போது, அந்த உரிமையாளர்கள் தனித்தனியாக உறுதிப்பத்திர ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- கூட்டுரிமைச் சொத்தாக மாற்றுவதற்கான ஆவணத்துடன், தற்காலிக, பகுதி அல்லது முழுமையான கூட்டுரிமைப் பிரகடன உறுதிப்பத்திரம், கூட்டுரிமை நில அளவை வரைபடம் மற்றும் கூட்டுரிமைச் சொத்தாக மாற்றுவதற்குத் தேவையான ஏனைய அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- உட்பிரிவு அல்லது ஒன்றிணைப்பு ஆவணம் அல்லது கூட்டுரிமைச் சொத்தாக மாற்றுவதற்கான ஆவணம் ஒன்றைப் பதிவு செய்வதற்கு முன்னர், நிலுவையிலுள்ள செல்லுபடியாகும் அனைத்து விற்பனை உடன்படிக்கைகளையும் ரத்துச் செய்யவும்.
- குறிப்பிட்ட ஆவண வடிவம் அறிமுகப்படுத்தப்படாத கொடுக்கல் வாங்கல்களின் போது மாத்திரம், ஏதேனும் ஒரு சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஆவணத்தை ஒரு உறுதிப்பத்திர ஆவணமாகச் சமர்ப்பிக்க முடியும். அதில் உறுதிப்பத்திரச் சான்றிதழின் விபரங்களைக் குறிப்பிட வேண்டும்.
- ஒவ்வொரு ஆவணத்தையும் அத்தாட்சிப்படுத்தும் போது, 1998 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க உறுதிப்பத்திரப் பதிவுச் சட்டத்தின் 44 ஆம் பிரிவு மற்றும் அத்தாட்சிப்படுத்தல் தொடர்பான ஏனைய அனைத்து சட்ட விதிகளையும் பின்பற்ற வேண்டும்.
- பதிவுக் கட்டணங்களை நாளாந்த பதிவுக் கவுண்டரில் பணமாகச் செலுத்தவும்.
- ஆவணங்கள் அத்தாட்சிப்படுத்தப்பட்ட திகதியிலிருந்து ஏழு வேலை நாட்களுக்குள் பதிவிற்காகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- புதிய உறுதிப்பத்திரச் சான்றிதழ் கோரும் விண்ணப்பப் படிவத்தை (உ.ப. 31) காணி உரிமையாளர் அல்லது நோத்தாரிசு மூலம் பூரணப்படுத்தி நாளாந்தப் பதிவுக் கவுண்டரில் ஒப்படைக்கவும்.
கடமை நேரங்கள்
வார நாட்களில் மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை நேரடியாகக் கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரச விடுமுறை தினங்களில் அலுவலகங்கள் திறக்கப்பட மாட்டாது.
உறுதிப்பத்திரப் பதிவிற்காக சமர்ப்பிக்கத் தகுதியுள்ள நபர்கள்
- அதன்கீழ் ஏதேனும் ஒரு தொடர்பை அல்லது நன்மையை எதிர்பார்க்கும் எவரேனும் ஒருவர்.
- அதன் மூலம் பாதிக்கப்படும் சொத்தின் மீது ஏதேனும் தொடர்பைக் கொண்டுள்ள அல்லது அதன் மீது உரிமை கோரக்கூடிய எவரேனும் ஒருவர்.
- அந்த உறுதிப்பத்திர ஆவணத்தை அத்தாட்சிப்படுத்திய எவரேனும் ஒரு நபர். (1998 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, நில உரித்துப்பதிவுச் சட்டத்தின் 40 ஆம் பிரிவின் இணங்க...)
(1998 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க உறுதிப்பத்திரப் பதிவுச் சட்டத்தின் 40 ஆம் பிரிவின் படி)
பதிவிற்காகச் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
- இதற்காகப் பயன்படுத்தப்படும் ஆவணப் படிவ இலக்கங்கள் 2022.12.01 திகதியிடப்பட்ட 2308/27 ஆம் இலக்க வர்த்தமானியில் No. குறிப்பிடப்பட்டுள்ளன.
- உரிமையாளரின் பெயரில் வழங்கப்பட்ட உறுதிப்பத்திரச் சான்றிதழ்.
- இலக்கம் 2308/27 மற்றும் 2022.12.01 திகதியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைய, நொத்தாரிசு ஒருவரால் தயாரிக்கப்பட்டு அத்தாட்சிப்படுத்தப்பட்ட உரிய ஆவணம் (விற்பனை/கைமாற்றம், நன்கொடை அல்லது பரிமாற்ற ஆவணம் எனின் 2 பிரதிகளில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்).
- முத்திரை வரி செலுத்திய பற்றுச்சீட்டின் மூலப்பிரதி.
- விற்பனை மற்றும் நன்கொடை ஆவணங்களுக்காக மாகாண வருமானவரி ஆணையாளருக்கும், அடகு மற்றும் குத்தகை ஆவணங்களுக்காக உள்நாட்டு இறைவரி ஆணையாளருக்கும் முத்திரை வரி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
- முத்திரை வரி செலுத்திய பற்றுச்சீட்டில், உறுதிப்பத்திர இலக்கத்தைக் குறிப்பிட வேண்டிய இடத்தில் உறுதிப்பத்திர சான்றிதழ் இலக்கத்தைப் பயன்படுத்தவும்.
- கைமாற்றல் தொடர்பான ஆவணம் எனின், புதிய உறுதிப்பத்திர சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவம் ( உ.ப. 31 விண்ணப்பம் )சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- உரிய தரப்பினரின் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தின் சான்றளிக்கப்பட்ட பிரதி ஒன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- கவுண்டரில் மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 3.00 மணிக்குள் ஒப்படைக்கப்பட வேண்டும்.
ஆவணங்களைப் பதிவு செய்துகொள்ளக்கூடிய முறைகள்:
இந்தச் சேவைகளை விரைவுச் சேவை மற்றும் சாதாரண சேவை ஆகிய இரு முறைகளிலும் பெற்றுக்கொள்ள முடியும்.
விரைவுச் சேவை
காணிப் பதிவு அலுவலகங்கள் மூலம் விரைவுச் சேவையின் கீழ் பதிவு செய்யக்கூடிய ஆவணங்கள்:
- விற்பனை ஆவணம்
- நன்கொடை
- கைமாற்றம்
- விற்பனை உடன்படிக்கைகள்
- விற்பனை உடன்படிக்கைகளை ரத்துச் செய்தல்
- அடகு ஆவணங்கள்
- முகவரி
- அடகுச் சட்டத்தின் 47 ஆம் பிரிவின் கீழான பிரகடனம்
- அடகினை ரத்துச் செய்தல்
- குத்தகை
- குத்தகையை ரத்துச் செய்தல்
- முன்னுரிமை அறிவித்தல்கள்
- ஆயுட்கால அனுபவ உரிமையை ரத்துச் செய்தல்
- அரசாங்கத்தின் ரத்துச் செய்ய முடியாத அட்டோர்னி அதிகாரப் பத்திரங்கள்
உறுதிப்பத்திரத்திற்குப் பின்னரான கொடுக்கல் வாங்கல்களைப் பதிவு செய்வதற்குரிய பதிவுக் கட்டணங்களை மாத்திரம், காணி அமைந்துள்ள பிரதேசத்திலுள்ள உறுதிப்பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு வருகை தந்து, நாளாந்தப் பதிவுக் கவுண்டரில் ஒப்படைக்க வேண்டும்.
உறுதிப்பத்திர பதிவேட்டின் சாராம்ச பிரதிகளை வழங்குதல்
உறுதிப்பத்திர பதிவேட்டின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை வழங்கும் பணிகள் நாடு முழுவதும் உள்ள 30 உறுதிப்பத்திர பதிவு அலுவலகங்களினால் மேற்கொள்ளப்படுகின்றன. காணி அமைந்துள்ள பிரதேசத்திற்குரிய உறுதிப்பத்திரப் பதிவு அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்து, உரிய கட்டணங்களைச் செலுத்தி இச்சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
கடமை நேரங்கள்
வார நாட்களில் மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 4.15 மணி வரை ஆகும். ஆவணங்களைப் பதிவிற்காகச் சமர்ப்பிக்கும் போது மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை நேரடியாகக் கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரச விடுமுறை தினங்களில் அலுவலகங்கள் திறக்கப்பட மாட்டாது.
கோரிக்கையை சமர்ப்பிக்கும் நடைமுறை
காணி அமைந்துள்ள பிரதேசத்திற்குரிய காணிப் பதிவு அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பித்து, உரிய கட்டணங்களை செலுத்தி இச்சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
விண்ணப்பப் படிவம்
நிர்ணயிக்கப்பட்ட அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தின் இலக்கம் உ.ப. 30 ஆகும். விண்ணப்பப் படிவத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். ( (உ.ப. 30 விண்ணப்பம்) )
விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கத் தகுதியுள்ள நபர்கள்
- சொத்தின் உரிமையாளர்
- ஒரு பகிரங்க நொத்தாரிசு அல்லது அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதி
விண்ணப்பத்தைப் பிரதிநிதி ஒருவர் சமர்ப்பிப்பதாயின், அதிகாரமளிக்கும் கடிதமொன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
கட்டணங்கள்
உரிய அலுவலகத்திற்கு வருகை தந்து கொடுப்பனவுகளை மேற்கொள்ள வேண்டும்.
- 2308/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரத்திற்கு இணங்க கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
விசாரணைகள்
உரிய உறுதிப்பத்திர பதிவாளரிடம் விசாரணைகளை மேற்கொள்ள முடியும். தயவுசெய்து விசாரணை விபரங்களைப் பார்க்கவும்.![]()
உறுதிப்பத்திர ஆவணத்தின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளைப் பெற்றுக்கொள்ளுதல்
உறுதிப்பத்திர ஆவணத்தின் பிரதிகளை வழங்கும் பணிகள் நாடு முழுவதும் உள்ள 30 உறுதிப்பத்திரப் பதிவு அலுவலகங்களினால் மேற்கொள்ளப்படுகின்றன. உரிய நோத்தாரிசு மூலம் உறுதிப்பத்திரச் சான்றிதழ் தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் பதிவு செய்யப்பட்ட, உறுதிப்பத்திரப் பதிவு அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம் இச்சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
கடமை நேரங்கள்
வார நாட்களில் மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 4.15 மணி வரை ஆகும். பிரதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிக்கும் போது மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை நேரடியாகக் கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரச விடுமுறை தினங்களில் அலுவலகங்கள் திறக்கப்பட மாட்டாது.
கோரிக்கையை சமர்ப்பிக்கும் நடைமுறை
காணி அமைந்துள்ள பிரதேசத்திற்குரிய காணிப் பதிவு அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பித்து, உரிய கட்டணங்களை செலுத்தி இச்சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
விண்ணப்பப் படிவம்
நிர்ணயிக்கப்பட்ட அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தின் இலக்கம் உ.ப. 30 ஆகும். விண்ணப்பப் படிவத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். ( உ.ப. 30 விண்ணப்பம் )
விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கத் தகுதியுள்ள நபர்கள்
- சொத்தின் உரிமையாளர்
- ஒரு பகிரங்க நோத்தாரிசு அல்லது அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதி
விண்ணப்பத்தைப் பிரதிநிதி ஒருவர் சமர்ப்பிப்பதாயின், அதிகாரமளிக்கும் கடிதமொன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
கட்டணங்கள்
உரிய அலுவலகத்திற்கு வருகை தந்து கொடுப்பனவுகளை மேற்கொள்ள வேண்டும்.
- 2308/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரத்திற்கு இணங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்படும். the
விசாரணைகள்
உரிய உறுதிப்பத்திரப் பதிவாளரிடம் விசாரணைகளை மேற்கொள்ள முடியும். தயவுசெய்து விசாரணை விபரங்களைப் பார்க்கவும்.![]()
ஆவணப் பரிசோதனை
காணி ஒன்றிற்குரிய உறுதிப்பத்திர பதிவேட்டைப் (பத்திரு) பரிசோதிப்பதற்கு, அந்தக் காணி அமைந்துள்ள பிரதேசத்திலுள்ள உறுதிப்பத்திரப் பதிவு அலுவலகத்தில் அதனை மேற்கொள்ள முடியும்.
உறுதிப்பத்திர ஆவணம் ஒன்றைப் பரிசோதிப்பதற்கும் அதன் சான்றளிக்கப்பட்ட பிரதிகளைப் பெற்றுக்கொள்வதற்கும், குறித்த காணி பதிவு செய்யப்பட்டுள்ள உறுதிப்பத்திர பதிவு அலுவலகத்தில் அதனை மேற்கொள்ள முடியும்.
விண்ணப்பிக்கும் முறை
காணி உரிமையாளர், ஒரு நொத்தாரிசு அல்லது அவரது அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதி விண்ணப்பிக்க முடியும்.
தேடுதல் விண்ணப்பப்படிவம்
- நிர்ணயிக்கப்பட்ட அச்சிடப்பட்ட விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
- உறுதிப்பத்திர ஆவணப் பரிசோதனை விண்ணப்பப்படிவ மாதிரி (உ.ப. 05)ஆகும்.
- விண்ணப்பப்படிவம் நொத்தாரிசு ஒருவரினால் கையொப்பமிடப்பட்டு அவரது உத்தியோகபூர்வ முத்திரை இடப்பட்டிருத்தல் வேண்டும்
- பிரதிநிதி ஒருவர் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதாயின், நொத்தாரிசு ஒருவரால் வழங்கப்பட்ட அதிகாரமளிக்கும் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
கட்டணங்கள்
- உரிய அலுவலகத்திற்கு வருகை தந்து கொடுப்பனவுகளை மேற்கொள்ள வேண்டும்.
- இலக்கம் 2308/27 மற்றும் 2022.12.01 திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி பத்திரத்திற்கு இணங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.