Accessibility Tools

Information Icon

மேலதிக மொழிக்கான அனுமதிப் பத்திரத்திற்கு விண்ணப்பிக்கும் போது, குறித்த மொழியில் க.பொ.த. (சா.தர) பரீட்சையில் திறமைச் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்,
  • தெளிவான கையெழுத்தில் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்.
  • அசல் அனுமதிப்பத்திரத்தின் பிரதியொன்று
  • உரிய மொழிக்காக திறமைச் சித்தி கொண்ட க.பொ.த. (சா.தர) பரீட்சைச் சான்றிதழின் மூலப்பிரதி மற்றும் நிழற்பிரதி. (இந்த நிழற்பிரதியானது பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் உத்தியோகத்தர் ஒருவரினால் அல்லது காணிப் பதிவாளரினால் உண்மைப் பிரதி என உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.)
  • சிங்கள மொழிமூலத்திற்கு விண்ணப்பிப்பதாயின், பரீட்சைத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட மஞ்சள் நிறப் பரீட்சை சான்றிதழ் மற்றும் அதன் ஒரு பிரதி.
  • தேசிய அடையாள அட்டையின் நிழற்பிரதி.
  • பரீட்சை சான்றிதழ் மற்றும் நொத்தாரிசு அனுமதிப்பத்திரத்தில் உள்ள பெயர்களுக்கிடையில் வேறுபாடுகள் இருப்பின், அது தொடர்பான அனுமதிப்பத்திரம். 
  • முதல் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியிலிருந்து புதிய முகவரி வேறுபட்டிருந்தால் அதனை உள்ளிடுவதற்கான கோரிக்கை கடிதம்.
  • விண்ணப்பிக்கப்பட்ட ஒவ்வொரு மொழிக்கும் தலா ரூபா. 3,000/- வீதம் திணைக்களத்தின் காசாளரிடம் (Shroff) செலுத்தியதற்கான ரசீது, அல்லது இலங்கை வங்கி (Bank of Ceylon) கிளையொன்றில் பதிவாளர் நாயகத்தின் பெயரிலுள்ள கணக்கு இலக்கம் 7039827 இற்கு வைப்புச் செய்யப்பட்ட பணத்திற்கான பச்சை நிற ரசீது.
மேற்குறித்த ஆவணங்களை சமர்ப்பித்ததன் பின்னர், உரிய அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்படும்.