சரியாகவும் தெளிவாகவும் கையெழுத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்.
நொத்தாரிசு அனுமதிப் பத்திரத்தின் அசல் பிரதி.
ஆகக்குறைந்தது ஒரு உறுதிச்சீட்டையேனும் எழுதி அத்தாட்சிப்படுத்தியிருப்பின், நீதிமன்ற வலயத்தை மாற்றுவது தொடர்பான காணிப் பதிவாளரின் பரிந்துரை.
ஒரு உறுதிச்சீட்டையேனும் எழுதி அத்தாட்சிப்படுத்தாத சந்தர்ப்பங்களில் நொத்தாரிசுவினால் வழங்கப்படும் சத்தியக்கடதாசி.
விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் ஆண்டிற்குரிய, மேல் நீதிமன்றத்திலிருந்து (High Court) பெற்றுக்கொள்ளப்பட்ட வருடாந்த அனுமதிப்பத்திரத்தின் நிழற்படப் பிரதி (Photocopy).
ஒவ்வொரு மொழிக்கும் தலா ரூபா. 3,000/- வீதம் திணைக்களத்தின் காசாளரிடம் (Shroff) செலுத்தியதற்கான ரசீது, அல்லது இலங்கை வங்கி (Bank of Ceylon) கணக்கு இலக்கம் 7039827 இற்கு வைப்புச் செய்யப்பட்ட பணத்திற்கான பச்சை நிற ரசீது.
மேற்குறித்த ஆவணங்களை சமர்ப்பித்ததன் பின்னர், உரிய அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்படும்.