Accessibility Tools

Information Icon

வீட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்

மரணம் நிகழ்ந்த 05 நாட்களுக்குள் கிராம உத்தியோகத்தருக்கு தெரிவித்தல் வேண்டும்.

ஒவ்வொரு மரணத்தையும் தொடர்பாகவும், அந்த மரணத்திற்குரிய B24 படிவத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றை, மரணம் நிகழ்ந்த இடத்திற்குரிய பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளருக்கு கிராம உத்தியோகத்தர் அனுப்பி வைக்க வேண்டும்.

மரணம் நிகழ்ந்த இடத்திற்குரிய பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளரினால் மரணம் பதிவு செய்யப்படும்..

இறப்பு பதிவு படிவம் CR02 பதிவாளரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். 

மரணத்தை அறிவிப்பதற்குத் தகுதியுள்ள நபர்கள்,

  • மரணம் நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் அருகிலிருந்த நெருங்கிய உறவினர்
  • இறுதியாக நோயுற்றிருந்த போது பணிவிடை செய்த நெருங்கிய உறவினர்
  • அவ்வாறான உறவினர் இல்லாத நிலையில்,
    • இறந்தவர் வசித்த பதிவாளர் பிரிவில் வசிக்கும் இறந்தவரின் உறவினர்
  • அவ்வாறான உறவினர் இல்லாத நிலையில், 
    • இறக்கும் போது அருகிலிருந்த ஒருவர் 
    • மரணம் நிகழ்ந்த கட்டிடத்தில் வசிப்பவர்
  • மேற்குறித்த நபர்கள் இல்லாத சந்தர்ப்பத்தில், 
    • சடலத்தை அடக்கம் செய்ய, தகனம் செய்ய அல்லது வேறு ஏதேனும் வகையில் இறுதிக்கிரியைகளை முன்னெடுக்கும் நபர். 

இறப்பு நிகழ்ந்த 03 மாதங்களுக்குள் மரணத்தை இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம்.

இறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குப் பின்னரும் மரணத்தைப் பதிவு செய்துகொள்ளும் வசதி உள்ளதுடன், அதற்காக "தாமதமான மரணப் பதிவு செய்தல்" தொடர்பான விபரங்களைப் பார்வையிடவும்.

அறிவிப்பவருக்கு மரணச் சான்றிதழ் ஒன்று இலவசமாக வழங்கப்படும்.  

** நீங்கள் குறித்த இறப்புச் சான்றிதழைப் பெற்றவுடன், அதை வாசித்து பார்த்த பின்னர் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். 

(1951 ஆம் ஆண்டின் 17ம் இலக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.)