Accessibility Tools

Information Icon

அற்றோணி அதிகாரப் பத்திரமொன்றை இரத்துச் செய்வதற்கு, அதிகாரத்தை வழங்குபவர் அல்லது அற்றோணி அதிகாரத்தைப் பெற்றவர் எண்ணும் போது, ​​அந்த நோக்கத்தை மற்றைய தரப்பினருக்கு தெரிவித்தல் வேண்டும். இரத்துச் செய்வதற்கு எண்ணும் தரப்பினரின் கருத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரசித்த நொத்தாரிசு ஒருவரினால் எழுதி சான்றுப்படுத்தப்பட்ட ஆவணமொன்றை, அற்றோணி அதிகாரப் பத்திரம் பதிவுசெய்யப்பட்டுள்ள அலுவலகத்தில் சமர்ப்பித்தல் வேண்டும். (2022 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க அற்றோணி அதிகாரப்பத்திர திருத்தச் சட்டத்தின் பிரகாரம்)

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

  • பகிரங்க நொத்தாரிசு ஒருவரினால் எழுதி அத்தாட்சிப்படுத்தப்பட்ட ரத்துச் செய்யும் ஆவணத்தின் மூலப் பிரதி.
  • அட்டோர்னி வழங்குபவர் மற்றும் அதனைப் பெறுபவர் ஆகியோரின் முழுப் பெயர், முகவரி மற்றும் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரத்தின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதி.
  • பகிரங்க நொத்தாரிசு ஒருவரினால் உண்மைப் பிரதி என அத்தாட்சிப்படுத்தப்பட்ட ரத்துச் செய்யும் ஆவணத்தின் ஒரு பிரதி (மூலப் பிரதியுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்)
  • பதிவு செய்யப்பட்ட அட்டோர்னி அதிகாரப் பத்திரத்தின் மூலப் பிரதி அல்லது பதிவு செய்யப்பட்ட அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொண்ட அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதி. 

ஓர் அட்டோர்னி அதிகாரப் பத்திரத்தை வழங்குபவர் அதனை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்துச் செய்ய விரும்பும் போது, ரத்துச் செய்யும் ஆவணத்தைச் சமர்ப்பிக்கும் வரை, அட்டோர்னி அதிகாரப் பத்திரத்தை ரத்துச் செய்ய உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கும் அறிவித்தலொன்றைப் பதிவுக்காகப் பதிவாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்க முடியும்.