காணி ஆவணத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளை வழங்கும் பணி நாடு முழுவதும் உள்ள 50 காணிப் பதிவு அலுவலகங்களினால் மேற்கொள்ளப்படுகின்றது. காணி அமைந்துள்ள பிரதேசத்திற்குரிய காணிப் பதிவு அலுவலகத்திற்கு விண்ணப்பப் படிவமொன்றைச் சமர்ப்பிப்பதன் மூலம் இச்சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
கடமை நேரங்கள்
வாரநாட்களில் மு.ப. 8.30 முதல் பி.ப. 3.45 வரை (பணக் கருமபீடங்கள் பி.ப. 3.00 மணி வரை மாத்திரமே திறந்திருக்கும்). சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசாங்க விடுமுறை தினங்களில் அலுவலகங்கள் திறக்கப்படமாட்டாது.
கோரிக்கையைச் சமர்ப்பிக்கும் நடைமுறை
காணி அமைந்துள்ள பிரதேசத்திற்குரிய காணிப் பதிவு அலுவலகத்திற்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பின்வரும் முறைகளில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்:
- அ. தபால் மூலம்
- ஆ.அலுவலகத்திற்கு நேரில் வந்து ஒப்படைப்பதன் மூலம்
விண்ணப்பப் படிவம்
குறிப்பிட்ட அச்சிடப்பட்ட விண்ணப்பப்படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப்படிவத்தின் இலக்கம் ‘A32(A)’ ஆகும். விண்ணப்பப்படிவத்தை இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம் A32(A) விண்ணப்ப்ப்படிவம்
விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க உரிமையுள்ள நபர்கள்
- அ. சொத்து உரிமையாளர்
- ஆ. ஆர்வமுள்ள ஒருவரின் பிரதிநிதி
விண்ணப்பமானது ஒரு பிரதிநிதியால் சமர்ப்பிக்கப்படுவதாயின், அதிகாரமளிக்கும் கடிதம் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
கட்டணங்கள்
கட்டணங்களை பணமாகவோ அல்லது பதிவாளர் நாயகத்தின் இலங்கை வங்கியின் கணக்கு இலக்கம் 7041650 இற்கு வரவு வைக்கப்படும் வகையில் ஏதேனும் ஒரு இலங்கை வங்கி கிளையில் செலுத்த முடியும். வங்கி பற்றுச்சீட்டை இணைத்து அனுப்ப வேண்டும்.
ஏதேனும் ஒரு காணிக்குரிய ஏதேனும் ஒரு பத்திரு அல்லது பத்திருகளின் பிரதிகள் அல்லது ஆவணப் பிரதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு:
- ஒரு பத்திருவிற்கான விரைவான சேவைக்கட்டணம் - ரூ. 120.00
- ஒரு பத்திருவிற்கான சாதாரண சேவைக்கட்டணம்- ரூ. 200.00
விசாரணைகள்
தொடர்புடைய காணிப் பதிவாளரிடம் விசாரணைகளை மேற்கொள்ளலாம். தயவுசெய்து விசாரணை விபரங்களைப் பார்க்கவும். ![]()