திருமணச் சான்றிதழ்களின் மொழிபெயர்ப்புப் பிரதிகளை பெற்றுக்கொள்ளுதல்
இந்தச் சேவையை பெற்றுக்கொள்ளக்கூடிய மொழிபெயர்ப்பாளர்கள் கடமையாற்றும் திணைக்களத்தின் கிளை அலுவலகங்கள் பற்றிய விபரங்களை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும். மொழிபெயர்ப்பாளர்கள் கடமையாற்றும் அலுவலகங்கள்.
பெற்றுக்கொள்ளக்கூடிய மொழிபெயர்ப்புகள்:
- சிங்களம் – ஆங்கிலம்
- ஆங்கிலம் – சிங்களம்
- தமிழ் – ஆங்கிலம்
- ஆங்கிலம் – தமிழ்
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள்:
- வாரநாட்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை.
- சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் திறந்திருக்காது.
விண்ணப்பப் படிவங்களை மொழிபெயர்ப்பாளர்கள் கடமையாற்றும் அலுவலகங்களில் அல்லது இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். ![]()
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
- சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்.
- மொழிபெயர்க்கப்பட வேண்டிய ஆவணத்தின் மூலப்பிரதி அல்லது பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட சான்றிதழ் பிரதி.
- தபால் மூலம் பெற்றுக்கொள்வதாயின், மேலே குறிப்பிட்டவற்றுடன் மேலதிகமாக பெறுநரின் முகவரி எழுதப்பட்டு முத்திரை ஒட்டப்பட்ட கடித உறை.
மொழிபெயர்ப்புக் கட்டணங்கள்:
- ஒரு மொழிபெயர்ப்பு பிரதிக்கு ரூ. 600.00 ஆகும்.
- எத்தனை மொழிபெயர்ப்புப் பிரதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
காலம்: 03 அலுவலக நாட்கள்.
தற்போதைக்கு ஒரு நாள் சேவை இல்லை.