Accessibility Tools

Information Icon

பிறப்புச் சான்றிதழ்களின் மொழிபெயர்ப்புப் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளுதல்

இந்தச் சேவையைப் பெற்றுக்கொள்ளக்கூடிய, மொழிபெயர்ப்பாளர்கள் கடமையாற்றும் திணைக்களத்தின் கிளை அலுவலகங்கள் பற்றிய விபரங்களை இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும். மொழிபெயர்ப்பாளர்கள் கடமையாற்றும் அலுவலகங்கள்.

பெற்றுக்கொள்ளக்கூடிய மொழிபெயர்ப்புகள்:

  • சிங்களம் – ஆங்கிலம்
  • ஆங்கிலம் – சிங்களம்
  • தமிழ் – ஆங்கிலம்
  • ஆங்கிலம் – தமிழ்

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள்:

  • வாரநாட்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை.
  • சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் திறந்திருக்காது.

விண்ணப்பப் படிவங்களை மொழிபெயர்ப்பாளர்கள் கடமையாற்றும் அலுவலகங்களில் அல்லது இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும். document-download

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்.
  • மொழிபெயர்க்கப்பட வேண்டிய ஆவணத்தின் மூலப்பிரதி அல்லது பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட சான்றிதழ் பிரதி.
  • தபால் மூலம் பெற்றுக்கொள்வதாயின், மேலதிகத் தேவைகளுடன் மேலதிகமாக, பெறுநரின் முகவரி எழுதப்பட்ட முத்திரை ஒட்டப்பட்ட கடித உறை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மொழிபெயர்ப்புக் கட்டணங்கள்:

  • ஒரு மொழிபெயர்ப்புப் பிரதிக்கு ரூ. 600.00 ஆகும்.
  • எத்தனை மொழிபெயர்ப்புப் பிரதிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

எடுக்கும் காலம்: 03 அலுவலக நாட்கள்.