Accessibility Tools

Information Icon

மரணச் சான்றிதழ்களின் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளுதல்

இணையவழி விண்ணப்பங்கள

https://online.ebmd.rgd.gov.lk எனும் இணையதளத்திற்குப் பிரவேசிப்பதன் மூலம் ஒன்லைன் முறைமையின் ஊடாகச் சான்றிதழ் பிரதிகளைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியும்.மேலும் தகவல்களுக்கு பார்வையிடவும்.


மரணச் சான்றிதழின் பிரதிகளை மரணம் நிகழ்ந்த இடத்திற்குரிய பிரதேச செயலகத்திலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். உரிய சான்றிதழ் தரவுக்கட்டமைப்பில் காணப்படுமாயின், உங்களுக்கு மிக அருகிலுள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலிருந்தும் அதன் சான்றளிக்கப்பட்ட பிரதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். 1960.01.01 ஆம் திகதி முதல் 2020.12.31 ஆம் திகதி வரையிலான சான்றிதழ்களின் பிரதிகளை தரவுக்கட்டமைப்பின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும். (உரிய சான்றிதழ் தரவுக்கட்டமைப்பில் உள்ளதா என்பதை அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் வினவி உறுதிப்படுத்திக்கொள்ளலாம்).

இதற்கான விண்ணப்பப் படிவத்தை ஏதேனும் ஒரு பிரதேச செயலகத்தின் (Divisional Secretariat) மாவட்டப் பதிவாளர் பிரிவிலிருந்தோ அல்லது இணையதளத்திலிருந்தோ பெற்றுக்கொள்ள முடியும்.

அறவிடப்படும் கட்டணம்,

  • இறப்புச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவு செய்யப்பட்ட திகதி தெரிந்திருப்பின்  ஒரு பிரதிக்கான கட்டணம் ரூ.120.00 ஆகும். 
  • இறப்புச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவு செய்யப்பட்ட திகதி தெரியவில்லை எனின்,  ஒரு பிரதிக்கான கட்டணம் ரூ.250.00 ஆகும் (இரண்டு ஆண்டுகளுக்கு மிகைப்படாமல்  ஆவணங்களைத் தேட வேண்டியுள்ளதால்)  

இதற்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்தில் நேரடியாகச் செலுத்தலாம் அல்லது பத்தரமுல்லையிலுள்ள இலங்கை வங்கியின் (Bank of Ceylon) 7039827 எனும் பதிவாளர் நாயகத்தின் (Registrar General) கணக்கு இலக்கத்தில் வைப்புச் செய்யலாம். அவ்வாறு வைப்புச் செய்ததற்கான வங்கிப் பற்றுச்சீட்டுடன் (Bank Slip), முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தையும் இணைத்து, சான்றளிக்கப்பட்ட நகல்களைப் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்க முடியும். தானியங்கி வங்கி இயந்திரங்கள் (ATM) அல்லது இணையவழி (Online) ஊடாகச் செலுத்தப்படும் கொடுப்பனவுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மரணச் சான்றிதழைத் தபால் மூலம் பெற வேண்டுமாயின், மேற் குறிப்பிட்டவாறு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் கட்டணம் செலுத்திய பற்றுச்சீட்டுடன் (Receipt), முகவரி எழுதப்பட்ட முத்திரை ஒட்டப்பட்ட கடித உறையையும் சமர்ப்பிக்க வேண்டும்.

மரணம் பதிவு செய்யப்பட்டிருப்பின், செலுத்தப்பட்ட கட்டணத்திற்கு ஏற்பக் கோரப்பட்ட எண்ணிக்கையிலான இறப்புச் சான்றிதழ் நகல்கள் வழங்கப்படும். மரணம் பதிவு செய்யப்படாத பட்சத்தில், அது குறித்து 'படிவம் பி 38' (Form B 38) ஊடாக அறிவிக்கப்படும்.