Accessibility Tools

Information Icon

காலந்தாழ்ந்த பிறப்புப் பதிவு

பிறப்பு நிகழ்ந்து மூன்று மாதங்களுக்குள் பதிவு செய்யப்படாத சந்தர்ப்பத்தில், அத்தகைய பிறப்பைக் காலந்தாழ்ந்த பிறப்பாகப் பதிவு செய்து கொள்ள முடியும்.(சுற்றறிக்கை 8/2008-ஐப் பார்க்கவும்)

இதற்காகப் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டத்தின் 24 ஆம் பிரிவின் கீழான ஒரு பிரகடனப் படிவத்தைப் பிறப்பு நிகழ்ந்த இடத்திற்குரிய பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். (மூன்று மாதங்கள் முதல் ஒரு வருட காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்கப்படும் பிரகடனப் படிவத்திற்கு, பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளர் அனுமதி வழங்க முடியும்.)

பிரகடனப் பத்திரத்தை சமர்ப்பிக்கத் தகுதியானவர்கள்,

  •  பெற்றோரில் ஒருவர்
  •  குழந்தையின் பாதுகாவலர்
  •  அக்கறையுள்ள எவரேனும் ஒருவர்

பிரகடனப் படிவத்திற்கான கட்டணம் ரூ. 60.00 ஆகும்.

பிறந்த ஒரு வருடத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் பிரகடனப் பத்திரத்துடன் பின்வரும் ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

  • பெற்றோர் திருமணமானவர்கள் எனின், அவர்களின் திருமண சான்றிதழின் பிரதேச செயலகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி.
  •  சம்பந்தப்பட்ட நபரின் (பிறப்புக்குரியவர்) பிறந்த திகதி மற்றும் இடத்தை உறுதிப்படுத்தும் பின்வரும் ஆவணங்களில் ஒன்று:
    • வைத்தியசாலைப் பிறப்பு அறிக்கை அல்லது அதன் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி.
    • கிராம அலுவலரின் அறிக்கை அல்லது அதன் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி (B23.)
    • தோட்டப் பிறப்பு அறிக்கை அல்லது அதன் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி.
    • குடும்ப நலச் சேவை உத்தியோகத்தரின் சான்றிதழ்.

மேற்கூறப்பட்ட ஆவணங்கள் எவையுமில்லாத பட்சத்தில், அவற்றுக்குப் பதிலாகப் பின்வரும் ஆவணங்களில் ஒன்று:

  • சுகாதார மேம்பாட்டு அட்டை.
  • ஞானஸ்நானச் சான்றிதழ்.
  • பாடசாலை சேர்க்கை பதிவேட்டின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி / மாணவர் தரவுப் புத்தகம். 
  • தோட்ட நலன்புரி அதிகாரியின் அறிக்கை.
  • பிறந்த திகதிக்கு அண்மித்த காலத்தில் கணிக்கப்பட்ட ஜாதகக் குறிப்பு.

இந்த ஆவணங்கள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாதெனில், தெரிந்த விபரங்களை உள்ளடக்கிய பிரகடனப் படிவம் மற்றும் ஒரு சத்தியக்கடதாசி.

பிறப்பு நிகழ்ந்து ஒரு வருடம் கடந்த பின்னர் சமர்ப்பிக்கப்படும் பிரகடனப் படிவத்துடன் பின்வரும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்:

  •  பிறப்பு பதிவு செய்யப்படவில்லை என்பதற்கான சான்றிதழ் (வெற்று சான்றிதழ்)
  •  பெற்றோர் திருமணமானவர்கள் எனின், அவர்களின் திருமண சான்றிதழின் பிரதேச செயலகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
  • சம்பந்தப்பட்ட நபரின் (பிறப்புக்குரியவர்) பிறந்த திகதி மற்றும் இடத்தை உறுதிப்படுத்தும் பின்வரும் ஆவணங்களில் ஒன்று:
    • வைத்தியசாலைப் பிறப்பு அறிக்கை அல்லது அதன் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி. 
    • கிராம அலுவலரின் அறிக்கை அல்லது அதன் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி (B23). 
    • தோட்டப் பிறப்பு அறிக்கை அல்லது அதன் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி. 
    • குடும்ப நலச் சேவை உத்தியோகத்தரின் சான்றிதழ்.

மேற்கூறப்பட்ட ஆவணங்கள் எவையுமில்லாத பட்சத்தில், அவற்றுக்குப் பதிலாகப் பின்வரும் ஆவணங்களில் ஒன்று:

  • சுகாதார மேம்பாட்டு அட்டை.
  •  ஞானஸ்நானச் சான்றிதழ்.
  • பாடசாலை சேர்க்கை பதிவேட்டின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி / மாணவர் தரவுப் புத்தகம். 
  • தோட்ட நலன்புரி அதிகாரியின் அறிக்கை.
  • பிறந்த திகதிக்கு அண்மித்த காலத்தில் கணிக்கப்பட்ட ஜாதகக் குறிப்பு.

இந்த ஆவணங்கள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாதெனின், தெரிந்த விபரங்களை உள்ளடக்கிய பிரகடனப் படிவம் மற்றும் ஒரு சத்தியக்கடதாசி.