Accessibility Tools

Information Icon

பிறப்புச் சான்றிதழ்களின் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளல்

இணையவழி விண்ணப்பங்கள்

https://online.ebmd.rgd.gov.lk என்ற இணையதளத்தின் ஊடாக சான்றிதழ் பிரதிகளை ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியும். மேலும் தகவல்களுக்கு பார்வையிடவும்.


பிறப்புச் சான்றிதழின் பிரதிகளை, பிறப்புப் பதிவு செய்யப்பட்ட இடத்திற்குரிய பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும். பிறப்பச் சான்றிதழ்களின் பிரதிகள் பிறப்பு இடம்பெற்ற இடத்திற்குரிய  பிரதேச சேயலகத்திலிருந்து. பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். அத்துடன், பத்தரமுல்ல "சுஷுறு பாய" வளாகத்தில் அமைந்துள்ள 'சேவை பியச'.(Seva Piyasa) மூலமாக eBMD தரவுத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள எந்தவொரு பிறப்புச் சான்றிதலுனதும்  பிரதிகளை நேரடியாகப் பெற்றுக்கொள்வதற்கான விசேட வசதியும் பொதுமக்களுக்கு வருங்கப்பட்டுள்ளது. 

  • குறித்த சான்றிதழ் கணனித் தரவுக்கட்டமைப்பில் (Database) இருந்தால், உங்களுக்கு அருகிலுள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலிருந்தும் அதன் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • 1960.01.01 ஆம் திகதி முதல் 2023.12.31 ஆம் திகதி வரையிலான சான்றிதழ்களின் பிரதிகளைத் தரவுக்கட்டமைப்பு முறைமை மூலம் பெற்றுக்கொள்ளலாம். (தரவுக்கட்டமைப்பில் உள்ளதா என்பதை உங்களுக்கு அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.)

இதற்கான விண்ணப்பப் படிவத்தை எந்தவொரு பிரதேச செயலகத்தின் மாவட்டப் பதிவாளர் பிரிவிலோ அல்லது திணைக்கள இணையதளத்திலோ பெற்றுக்கொள்ளலாம்.

அறவிடப்படும் கட்டணங்கள்:

  • பிறப்புச் சான்றிதழ் இலக்கம் மற்றும் பதிவு செய்த திகதி தெரிந்திருப்பின்: ஒரு பிரதிக்கான கட்டணம் ரூ. 120.00
  • பிறப்புச் சான்றிதழ் இலக்கம் மற்றும் திகதி தெரியாதிருப்பின்: (இரண்டு வருட காலப்பகுதிக்குள் தேடிப் பார்க்க வேண்டியிருப்பதால்) முதல் பிரதிக்கான கட்டணம் ரூ. 250.00. அதன் பின்னர் மேலதிகமாகத் தேவைப்படும் ஒவ்வொரு பிரதிக்கும் ரூ. 120.00 வீதம் அறவிடப்படும்.

இக்கட்டணத்தை பிரதேச செயலகத்தில் அல்லது பதிவாளர் நாயகத்தின் இலங்கை வங்கி (பத்தரமுல்லை கிளை) கணக்கு இலக்கம் 7039827 இல் செலுத்தலாம். பணம் செலுத்திய வங்கிப் பற்றுச்சீட்டின் (Bank Slip) மூலப்பிரதி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.ATM இயந்திரம் மூலமாகவோ அல்லது Online Transfer மூலமாகவோ பணம் செலுத்த முடியாது.

சான்றிதழைத் தபாலில் பெற்றுக்கொள்ள வேண்டுமானால், முகவரி எழுதப்பட்டு முத்திரை ஒட்டப்பட்ட கடித உறை, விண்ணப்பம் மற்றும் வங்கிப் பற்றுச்சீட்டு ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பிறப்புப் பதிவு செய்யப்பட்டிருப்பின், நீங்கள் செலுத்திய கட்டணத்திற்கு ஏற்ப பிரதிகள் வழங்கப்படும். பதிவு செய்யப்படாத பட்சத்தில், அது பற்றி B38 படிவம் மூலம் உங்களுக்கு அறியத்தரப்படும்.

TopWeb Badge