Accessibility Tools

Information Icon

திணைக்களத்தின் சேவைகள் மற்றும் தகவல்களைப் பொதுமக்கள் எளிதாகப் பெற்றுக்கொள்வதை மேம்படுத்தும் நோக்கில், பதிவுத் திணைக்களம் (Registrar General’s Department) தனது 1930 அழைப்பு மையம் மற்றும் www.rgd.gov.lk எனும் புதிய இணையதளத்தை 2026 ஏப்ரல் 07 அன்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தது.

இந்நிகழ்வில் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கௌரவ அமைச்சர் திரு. ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, பிரதி அமைச்சர் திரு. ருவன் செனரத், அமைச்சின் செயலாளர் திரு. ஆலோக பண்டார, பதிவாளர் நாயகம் திருமதி எஸ். ஜலதீபன் மற்றும் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

1930 அழைப்பு மையமானது திணைக்களத்தின் சேவைகள் குறித்த பொதுமக்களின் விசாரணைகளுக்குத் தீர்வுகளை வழங்குகிறது. அதேவேளை, புதிய இணையதளமானது திணைக்களம் சார்ந்த தகவல்கள் மற்றும் சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை வழங்குகின்றது.