பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட மின்னணு சனத்தொகை (e-population) திட்டத்தின் கீழ், "Digital Access to the Heritage" எனும் டிஜிட்டல் முறைமையின் ஊடாக தேசிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கை கேகாலை பிரிவில் ஆரம்பமானது. இச்சான்றிதழை சிங்களம் மற்றும் ஆங்கிலம் அல்லது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதால், பிறப்புச் சான்றிதழைத் தனியாக மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
‘பாரம்பரிய டிஜிட்டல் அணுகல்’ எனும் மின்னணு முறையின் கீழ், தேசிய பிறப்பு சான்றிதழ்கள் வழங்கல் கேகாலை பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.