பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புப் பதிவாளர்களை நியமித்தல், கண்காணித்தல் மற்றும் நிர்வகித்தல்.
பிரதேச செயலகங்களின் மாவட்டப் பதிவுப் பிரிவுகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்தல் மற்றும் நிர்வகித்தல்.
பிரிவுப் பதிவாளர்களின் (Division Registrars) அலுவலகங்களைக் கண்காணித்தல் மற்றும் நிர்வகித்தல்.
ஆவணக்காப்பக நடவடிக்கைகளைக் கண்காணித்தல்.
பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்தல், அவற்றின் பிரதிகளை வழங்கல் மற்றும் பாதுகாத்தல்.
தத்தெடுத்தல் தொடர்பான நீதிமன்றக் கட்டளைகளைப் பதிவு செய்து தத்தெடுப்புச் சான்றிதழ்களை வழங்கல் மற்றும் அத்தகைய பிறப்புப் பதிவுகளுக்கான விண்ணப்பங்களைப் பெற்று அனுமதி வழங்கிய பின்னர், அக்கட்டளைகளை உரிய பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைத்தல்.
மாவட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்படும் விவாகரத்துத் தீர்ப்புக்கமைய, குறித்த விவாகச் சான்றிதழில் அதனைப் பதிவு செய்வதற்குப் பிரதேச செயலகங்களின் மாவட்டப் பதிவுப் பிரிவுகளுக்குக் கட்டளை பிறப்பித்தல்.
இலங்கையர் ஒருவருக்கும் வெளிநாட்டவர் ஒருவருக்கும் இடையிலான திருமண பதிவிற்கான அனுமதியை வழங்கல்.
திருமணங்களைப் பதிவு செய்வதற்காக தேவாலயங்களைப் பதிவு செய்தல்.
பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் மொழிபெயர்ப்புப் பிரதிகளை வழங்கல்.
கடமையின் போது உயிரிழந்த முப்படைகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் மரணங்களைப் பதிவு செய்தல், திருத்தங்களை மேற்கொள்ளல் மற்றும் சான்றிதழ் பிரதிகளை வழங்கல்.
சிதைவடைந்த பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு ஆவணங்களை மீளமைத்தல்.