திருமணங்களை (பொதுவான).பதிவு செய்தல்

 • இருதரப்பினரும்முஸ்லிம்கள்அல்லாதவேறுஎந்தவொருஇனத்தை அல்லதுமதத்தைச்சேர்ந்தவர்களாயின், திருமண (பொதுவான) பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளலாம்.
 • திருமண அறிவிப்பு இரண்டு பிரதிகளில் எழுதப்பட்டு சான்றுப்படுத்தப்பட்டு, பிரிவின் திருமணப் பதிவாளரிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும். (பெயர் மற்றும் பிறந்த திகதி என்பவற்றை சான்றுப்படுத்துவதற்கு பிறப்புச் சான்றிதழ் அல்லது ஏனைய ஆவணமொன்று)
 • அறிவித்தலை சான்றுப்படுத்துவதற்கு அதிகாரம் பெற்றவர்கள்
  • பிரிவின் திருமணப் பதிவாளர்
  • சமாதான நீதவான்
  • பிரசித்த நொத்தாரிசு
  • அருட்தந்தை
 • திருமண அறிவித்தலொன்றை வழங்குவதற்காக பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள்
  • தரப்பினர்கள் சம்பந்தப்பட்ட பிரிவில் வதிவிடம் தொடர்பான தேவையை பூர்த்தி செய்தல்
   • திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்கள் தரப்பினர் குறித்த பிரிவில் வசித்திருத்தல்.
   • திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்கள் தரப்பினர் ஒரே பிரிவில் அல்லாமல் தனித்தனி பிரிவுகளில் வசித்திருத்தல்.
   • தரப்பினர்களில் ஒரு தரப்பினர் திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்கள் இலங்கையில் வசித்திருக்கவில்லை எனின், மற்றைய தரப்பினர் 10 நாட்கள் இலங்கையில் வசித்திருத்தல்.
 • திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்களில் எந்தவொரு தரப்பினரும் இலங்கையில் வசித்திருக்கவில்லை என்றால், ஒரு தரப்பினர் 04 நாட்கள் இலங்கையில் வசித்திருத்தல்.
 • இரு தரப்பினரும் கடைசி பிறந்த திகதியில் 18 வயதை பூர்த்தி செய்திருத்தல்.
 • அவர்கள் திருமணம் செய்ய தடை செய்யப்பட்ட உறவு முறையினர்கள் அல்லாதவர்களாயிருத்தல்,
 • ஏற்கனவே செல்லுபடியாகும் திருமணமொன்றை செய்து கொள்ளாதவர்களாயிருத்தல்
 • திருமணத்தை (பொதுவான) பதிவு செய்வதற்காக திருமண அறிவித்தலை உரிய பதிவாளரிடம் கையளித்து 14 நாட்கள் கழிதல் வேண்டும்.
 • அவ்வாறு 14 நாட்கள் கழிவதற்கு முன்னர் திருமணத்தை பதிவு செய்ய விரும்பினால், வி​ஷேட அனுமதிப்பத்திரத்தின் அடிப்படையில் பதிவு செய்வதற்கு பதிவாளரிடம் கோரலாம்.
 • இரண்டு பிரிவுகளின் திருமணப் பதிவாளர்களுக்கு திருமண அறிவித்தல்கள் ஒப்படைக்கப்பட்டிருப்பின், அறிவித்தல் பரிமாற்றம் மற்றும் பதிவாளரின் சான்றிதழை வழங்கியதன் பின்னர் திருமணத்தைப் பதிவு செய்து கொள்ளலாம்.
 • திருமணப் பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள இடமொன்றில் திருமணத்தைப் பதிவு செய்து கொள்ள வேண்டுமெனின், அதற்கான விஷேட அனுமதியைப் பெற்றுக் கொள்ள​ வேண்டுமென்பதோடு, அதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

** மேற்கூறிய தேவைப்பாடுகளை பூர்த்தி செய்ததன் பின்னர், இரண்டு சாட்சிகள் முன்னிலையில் பதிவாளரினால் திருமணம் பதிவு செய்யப்படுவதோடு, திருமணச் சான்றிதழின் மூன்றாவது பிரதி​ மணமகளிடம் ஒப்படைக்கப்படும்.

 • திருமணத்தைபதிவுசெய்யும்போதுபதிவாளருக்குசெலுத்தவேண்டியகட்டணம்

  இல.

  விடயம்

  யாருக்கு செலுத்தப்பட   வேண்டும்

  யாரால் செலுத்தப் பட வேண்டும்

  தொ​கை (ரூ)

  பணம் செலுத்தும் முறை

  1

  பதிவாளர் அலுவலகத்திலோ அல்லது வேறு எந்த இடத்திலோ திருமண அறிவித்த​லை உள்ளிடுதல்

  பதிவாளர்

  விண்ணப் பதாரர்

  120.00

  பணமாக செலுத்துதல் வேண்டும்

  2

  மேலதிக மாவட்ட பதிவாளரின் அல்லது மாவட்ட பதிவாளரின் அலுவலகத்தில் அல்லது வேறு எந்த இடத்திலும் திருமண அறிவித்த​லை உள்ளிடுதல்

  மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர்

  விண்ணப் பதாரர்

  120.00

  பணமாக செலுத்துதல் வேண்டும்

  3

  திருமண அறிவித்தல் தொடர்பாக பதிவாளரின் சான்றிதழை வழங்குதல்

  பதிவாளர்

  திருமண தரப்பினர்

  120.00

  பணமாக செலுத்துதல் வேண்டும்

  4

  திருமண அறிவித்தல் தொடர்பாக மேலதிக மாவட்ட பதிவாளரின் அல்லது மாவட்ட பதிவாளரின் சான்றிதழை வழங்குதல்

  மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர்

  திருமண தரப்பினர்

  120.00

  பணமாக செலுத்துதல் வேண்டும்

  5

  பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் இடம்பெறுதல்

  பதிவாளர்

  திருமண தரப்பினர்

  900.00

  பணமாக செலுத்துதல் வேண்டும்

  6

  மேலதிக மாவட்டப் பதிவாளரின் அல்லது மாவட்டப் பதிவாளரின் அலுவலகத்தில் திருமணம் இடம்பெறுதல்

  மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர்

  திருமண தரப்பினர்

  900.00

  பணமாக செலுத்துதல் வேண்டும்

  7

  பிரிவு 38(1) அல்லது 38(2) இன் கீழ் பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே திருமணம் இடம்பெறுதல்

  பதிவாளர்

  திருமண தரப்பினர்

  900.00

  பணமாக செலுத்துதல் வேண்டும்

  -----

  -----

  -----

   

  8

  பிரிவு 38(1) அல்லது 38(2) இன் கீழ் மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே திருமணம் இடம்பெறுதல்

  மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர்

  திருமண தரப்பினர்

  900.00

  பணமாக செலுத்துதல் வேண்டும்

  9

  பிரிவு 27(3) இன் கீழ் விஷேட அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளல்

  அரசாங்கத்திற்கு

  திருமண தரப்பினர்

  120.00

  பணமாக செலுத்துதல் வேண்டும்

  10

  பதிவு செய்யப்பட்ட வணக்கஸ்தலத்தில் நடைபெறும் திருமணத்தைப் பதிவு செய்தல்

  மாவட்ட பதிவாளர்

  திருமண தரப்பினர்

  900.00

  பணமாக செலுத்துதல் வேண்டும்

  11

  பிரிவு 38 1,2 இன் கீழ் பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே திருமணத்தை பதிவு செய்வதற்கான வீட்டு அனுமதிப்பத்திரத்தை வழங்குதல்

  அரசாங்கத்திற்கு

  திருமண தரப்பினர்

  60.00

  பணமாக செலுத்துதல் வேண்டும்

திருமணங்களை (பொதுவான).பதிவு செய்தல்

 • கிறிஸ்தவ சமயத்தினர்கள்தங்கள்சொந்ததேவாலயங்களில்திருமணம்செய்துகொள்ளஅனுமதிக்கப்படுகிறார்கள்.
 • திருமண அறிவித்தலை இரண்டு பிரதிகளில் எழுதி சான்றுப்படுத்தி, பிரிவின் திருமணப் பதிவாளரிடம் ஒப்படைத்தல் வேண்டும். (பெயர் மற்றும் பிறந்த திகதியை நிரூபிப்பதற்கு பிறப்புச் சான்றிதழ் அல்லது வேறு ஆவணமொன்று)
 • அறிவித்தல்களை சான்றுப்படுத்துவதற்கு அதிகாரம் பெற்றவர்கள்
  • பிரிவின் திருமணப் பதிவாளர்
  • சமாதான நீதவான்
  • பிரசித்த நொத்தாரிசு
  • அருட்தந்தை
 • திருமண அறிவித்தலொன்றை வழங்குவதற்காக பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள்
  • தரப்பினர்கள், குறித்த பிரிவில் வதிவிடம் தொடர்பான தேவையை பூர்த்தி செய்தல், அதாவது,
   • திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்கள் தரப்பினர் குறித்த பிரிவில் வசித்திருத்தல்.
   • திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்கள் தரப்பினர் ஒரே பிரிவில் அல்லாமல் தனித்தனி பிரிவுகளில் வசித்திருத்தல்.
   • தரப்பினர்களில் ஒரு தரப்பினர் திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்கள் இலங்கையில் வசித்திருக்கவில்லை எனின், மற்றைய தரப்பினர் 10 நாட்கள் இலங்கையில் வசித்திருத்தல்.
   • திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்களில் எந்தவொரு தரப்பினரும் இலங்கையில் வசித்திருக்கவில்லை என்றால், ஒரு தரப்பினர் 04 நாட்கள் இலங்கையில் வசித்திருத்தல்.
  • இரு தரப்பினரும் கடைசி பிறந்த திகதியில் 18 வயதை பூர்த்தி செய்திருத்தல்.
  • அவர்கள் திருமணம் செய்ய தடை செய்யப்பட்ட உறவு முறையினர்கள் அல்லாதவர்களாயிருத்தல்,
  • ஏற்கனவே செல்லுபடியாகும் திருமணம் செய்து கொள்ளாதவர்களாயிருத்தல்
  • விவாகரத்து பெற்றவர்கள் எனின், முற்றான கட்டளையின் பிரதியை சமர்ப்பித்தல் வேண்டும்.
  • இலங்கையின் திருமண (பொதுவான) சட்டத்தின் கீழ் திருமணம் செய்து, பின்னர் வெளிநாடொன்றில் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் விவாகரத்து பெற்றிருப்பின். இலங்கையில் உள்ள குறிப்பிட்ட அதிகார வரம்பில் உள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து விவாகரத்து தொடர்பான கட்டளையைப் பெற்றிருத்தல் அவசியமாகும்.
 • பதிவு செய்தல் கட்டணம் ரூ. 900.00. ஆகும்.
 • பதிவாளர் அல்லது மேலதிக மாவட்ட பதிவாளரிடம் இருந்து பதிவாளர் சான்றிதழ்” (பதிவுசெய்தல் B103 படிவம்) பெறப்பட வேண்டும்.
 • குறித்த பதிவாளர் சான்றிதழை திருமணத்தை பதிவு செய்ய வேண்டிய தேவாலயத்தின் அருட்தந்தையிடம் சமர்ப்பிப்பதன் மூலம் தேவாலய திருமணத்தை நடத்தலாம்.
 • அதன் பின்னர் அருட்தந்தை வழங்கிய அருட்தந்தை சான்றிதழை (B

இலங்கையர் ஒருவர் மற்றும் வெளிநாட்டவர் ஒருவர் இடையேயான திருமணத்தை பதிவு செய்யும் நடைமுறை

ஆண்/பெண்இருபாலர் சம்பந்தமான பின்வரும் விடயங்கள் தொடர்பான ஆவணங்கள்பதிவாளரிடம்சமர்ப்பிக்கப்படல்வேண்டும்.

 • திருமணஅறிவித்தல் (2 பிரதிகளுடன்எழுதப்பட்டுசான்றுப்படுத்தப்பட்ட)
 • வெளிநாட்டவர் இலங்கைக்குள் நுழைவதற்கு தேவையான விசா, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு மற்றும் அதன் பிரதி
 • தனது நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட குடியியல் நிலையை உறுதிப்படுத்தும் ஆவணத்தின் அசல் பிரதி மற்றும் விவாகரத்து/ விதவையின் விடயத்தில் அதனை உறுதிப்படுத்தும் சட்டரீதியான ஆவணங்கள்.
 • வெளிநாட்டவரின் உடல்நிலையை சான்றுப்படுத்துவதற்கான ஒரு சுய பிரகடனம் (Health Declaration)
 • பிறப்புச் சான்றிதழ்கள் (பெயர் மற்றும் வயதைஉறுதிப்படுத்துவதற்கு தேவைப்படின்) மற்றும் அதன் பிரதி
 • பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரம்.

பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்படும் அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறை

வெளிநாட்டவர் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் அல்லது பின்னர், பின்வரும் ஆவணங்கள் தொடர்புடைய தரப்பினரால் (திருமணம் முடிக்கும் இருவரினால் அல்லது அவர்களது நெருங்கிய உறவினர்களால் மாத்திரம்) திணைக்களத்தின் சிவில் பதிவுப் பிரிவில் சமர்ப்பித்தல் வேண்டும்.

 1. விண்ணப்பப் படிவம்
 2. இலங்கைப் பிரசையின் தேசிய அடையாள அட்டையின் புகைப்படப் பிரதி
 3. வெளிநாட்டுப் பிரசையின் கடவுச் சீட்டின் புகைப்படப் பிரதி
 4. வெளிநாட்டுப் பிரசையின், குற்றச் செயலொன்றுக்கு குற்றவாளியாக்கப்படவில்லை எனும் பொலிஸ் சான்றிதழ் (6 மாதங்களுக்குள் பெறப்பட்ட)
 5. வெளிநாட்டவரின் சிவில் அந்தஸ்து பற்றிய சான்றிதழ் (06 மாதங்களுக்குள் பெறப்பட்ட) இதற்கு முன்னர் திருமணம் முடித்த நபரொருவர் எனின், விவாகரத்து சான்றிதழ் மற்றும் சிவில் நிலை தொடர்பான சான்றிதழ்).
 • மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு ஆவணத்தினதும் 4 பிரதிகள் விகிதம் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்
 • சிவில் அந்தஸ்து தொடர்பான சான்றிதழை உரிய நாட்டின் அரச நிறுவனமொன்றினால் வழங்கப்படுதல் வேண்டுமென்பதோடு, உரிய நாட்டின் அரச நிறுவனத்தினால் சிவில் அந்தஸ்து தொடர்பான சான்றிதழ் சமர்ப்பிக்கப்படாத பட்சத்தில் மாத்திரமே சத்தியக் கடதாசி சமர்ப்பிக்க முடியும். சத்தியக் கடதாசியை குறித்த நாட்டின் அரச அலுவலகமொன்றினால் சான்றுப்படுத்தப்படுதல் வேண்டும்.
 • இங்கு, வெளிநாட்டவர் வெளிநாட்டில் திருமணம் செய்து, வெளிநாட்டில் விவாகரத்து பெற்றிருந்தால், வெளிநாட்டு விவாகரத்து கட்டளை அல்லது இலங்கையில் திருமணம் செய்து, வெளிநாட்டில் விவாகரத்து செய்திருந்தால், வெளிநாட்டு விவாகரத்து கட்டளை மற்றும் இலங்கை விவாகரத்து கட்டளை என்பவற்றை சமர்ப்பித்தல் வேண்டும்.
 • திருமணப் பதிவை பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளர் அல்லது சம்மந்தப்பட்ட பிரிவின் திருமணப் பதிவாளரின் மூலம் மேற்கொள்ளல் வேண்டும் என்பதோடு திருமணப் பதிவாளரின் மூலம் திருமணம் நடாத்தப்பட்டால், குறித்த பதிவாளர் மற்றும் உரிய பிரதேச செயலகத்தின் பெயரை விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடல் வேண்டும்.
 • விண்ணப்ப்ப் படிவத்தில், திருமணம் இடம்பெறும் திகதி, இடம் மற்றும் உரிய மாவட்டம் ஆகியவற்றைக் குறிப்பிடல் வேண்டும்.
 • ஆவணங்களை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பித்த நாளிலிருந்து இசைவு அறிக்கையைப் பெறுவதற்கு 14 வேலை நாட்கள் எடுக்கும்.
 • பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரம், வழங்கப்பட்ட நாளிலிருந்து 03 மாதங்கள் செல்லுபடியாகும்.
 • இந்த அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கு கட்டணம் ஏதும் அறவிடப்பட மாட்டாது.
 • திருமண அறிவித்தலைச் சமர்ப்பிக்கும் போது மேற்குறிப்பிட்ட ஆவணங்களை உரிய மேலதிக மாவட்டப் பதிவாளர்/ பிரிவின் திருமணப் பதிவாளரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
 • இது தொடர்பான இல. 18/2021 மற்றும் 2021.10.18ம் திகதிய சுற்றறிக்கை 2022.01.01ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு, அதன் திருத்தப்பட்ட 18/2021(1)ம் இலக்க சுற்றறிக்கை 2022.08.01ம் திகதி முதல் செயற்பாட்டில் உள்ளது.

கண்டிய சட்டத்தின் கீழ் திருமணங்களை பதிவு செய்தல்

 • கண்டியசட்டத்தின்கீழ் திருமணம் செய்து கொள்ள முடியமாயிருப்பது, கண்டிய சட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் சிங்களவர்களுக்கு மாத்திரமேயாகும்.
 • கண்டிய திருமணச் சட்டத்திற்கு உட்பட்ட பகுதிகள்
  • மத்திய மாகாணம்
  • வட மத்திய மாகாணம்
  • ஊவா மாகாணம்
  • சப்ரகாமுவ மாகாணம்
  • வட மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் கிழக்கு மற்றும் மேற்கு வவுனியாவின் செட்டிக்குளம் கோறளை மற்றும் தெற்கு கிழக்குமலை கோறளை
  • கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிந்தென்ன பற்று, வேகம்பற்று மற்றும் பானம பற்று மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் கடுக்குளம் பற்று.
  • வடமேல் மாகாணத்தின் குருணாகல் மாவட்டம் மற்றும் புத்தளம் மாவட்டத்தின் தமிழ் ஹத்பத்துவ.
 • கண்டிய சட்டத்தின் கீழ் திருமணங்களை பதிவு செய்வதற்கான அதிகாரம் மேற்குறித்த பகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட திருமணப் பதிவாளர்களுக்கு மாத்திரமே உள்ளது.
 • இந்த சட்டத்தின் கீழ் திருமணத்தை பதிவு செய்வதற்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள்
  • சம்பந்தப்பட்ட பிரிவில் இரு தரப்பினரின் வசிப்பிடம் தொடர்பான தேவைப்பாடு
   • திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்கள் தரப்பினர் குறித்த பிரிவில் வசித்திருத்தல்.
   • திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்கள் தரப்பினர் ஒரே பிரிவில் அல்லாமல் தனித்தனி பிரிவுகளில் வசித்திருத்தல்.
   • தரப்பினர்களில் ஒரு தரப்பினர் திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்கள் இலங்கையில் வசித்திருக்கவில்லை எனின், மற்றைய தரப்பினர் 10 நாட்கள் இலங்கையில் வசித்திருத்தல்.
   • திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்களில் எந்தவொரு தரப்பினரும் இலங்கையில் வசித்திருக்கவில்லை என்றால், ஒரு தரப்பினர் 04 நாட்கள் இலங்கையில் வசித்திருத்தல்.
  • இரு தரப்பினரும் கடைசி பிறந்த திகதியில் 18 வயதை பூர்த்தி செய்திருத்தல்.
  • இரு தரப்பினரும் திருமணம் செய்வதற்கு தடைசெய்யப்பட்ட உறவு முறையினர்கள் அல்ல என (1952ம் ஆண்டின் 44ம் இலக்க கண்டிய விவாகரத்துச் சட்டத்திற்கு அமைய)
  • ஏற்கனவே செல்லுபடியாகும் திருமணம் செய்துகொள்ளவில்லை என
 • மேற்கூறிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டால், முறையாக பூர்த்தி செய்யப்பட்டு சான்றுப்படுத்தப்பட்ட திருமண அறிவித்தலை இரண்டு பிரதிகளில் பிரதேச திருமணப் பதிவாளரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
 • திருமண அறிவித்தலை சான்றுப்படுத்துவதற்குரிய அதிகாரம் குறித்த பிரிவின் திருமணப் பதிவாளருக்கே உண்டு. (பெயர் மற்றும் வயதை நிரூபிப்பதற்கு பிறப்புச் சான்றிதழ் அல்லது வேறு ஆவண​மொன்று)
 • திருமண அறிவித்தல் கிடைத்த 14 நாட்களின் பின்னர் திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
  • திருமண அறிவித்தலை கையளித்து 14 நாட்களுக்கு முன்னர் திருமணத்தை பதிவு செய்ய வேண்டுமெனின், உரிய கட்டணத்தைச் செலுத்தி விஷேட அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
 • இரண்டு பிரிவுகளின் திருமணப் பதிவாளர்களுக்கு திருமண அறிவித்தல்கள் ஒப்படைக்கப்பட்டிருப்பின், அறிவித்தல் பரிமாற்றம் செய்துகொள்ளப் பட்டதன் பின்னர் மற்றும் பதிவாளரின் சான்றிதழை வழங்கியதன் பின்னர் திருமணத்தைப் பதிவு செய்து கொள்ளலாம்.
 • திருமணப் பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள இடமொன்றில் திருமணத்தைப் பதிவு செய்து கொள்ள வேண்டுமெனின், அதற்கான விஷேட அனுமதியைப் பெற்றுக் கொள்ள​ வேண்டுமென்பதோடு, அதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

** மேற்கூறிய விடயங்களை பூர்த்தி செய்ததன் பின்னர், இரண்டு சாட்சிகள் முன்னிலையில் பதிவாளரினால் திருமணம் பதிவுசெய்யப்படுவதோடு, திருமணச் சான்றிதழின் மூன்றாவது பிரதி​ மணமகளிடம் ஒப்படைக்கப்படும்.

கண்டிய திருமணங்களை பதிவு செய்வதற்கு பதிவாளர்களினால் அறவிடப்படும் கட்டணம்

இல.

விடயம்

யாருக்கு செலுத்தப்பட   வேண்டும்

யாரால் செலுத்தப் பட வேண்டும்

தொ​கை (ரூ)

பணம் செலுத்தும் முறை

1

பதிவாளர் அலுவலகத்திலோ அல்லது வேறு எந்த இடத்திலோ திருமண அறிவித்த​லை உள்ளிடுதல்

பதிவாளர்

விண்ணப் பதாரர்

120.00

பணமாக செலுத்துதல் வேண்டும்

2

மேலதிக மாவட்ட பதிவாளரின் அல்லது மாவட்ட பதிவாளரின் அலுவலகத்தில் அல்லது வேறு எந்த இடத்திலும் திருமண அறிவித்த​லை உள்ளிடுதல்

மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர்

விண்ணப் பதாரர்

120.00

பணமாக செலுத்துதல் வேண்டும்

3

திருமண அறிவித்தல் தொடர்பாக பதிவாளரின் சான்றிதழை வழங்குதல்

பதிவாளர்

திருமண தரப்பினர்

120.00

பணமாக செலுத்துதல் வேண்டும்

4

திருமண அறிவித்தல் தொடர்பாக மேலதிக மாவட்ட பதிவாளரின் அல்லது மாவட்ட பதிவாளரின் சான்றிதழை வழங்குதல்

மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர்

திருமண தரப்பினர்

120.00

பணமாக செலுத்துதல் வேண்டும்

5

பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் இடம்பெறுதல்

பதிவாளர்

திருமண தரப்பினர்

900.00

பணமாக செலுத்துதல் வேண்டும்

6

மேலதிக மாவட்டப் பதிவாளரின் அல்லது மாவட்டப் பதிவாளரின் அலுவலகத்தில் திருமணம் இடம்பெறுதல்

மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர்

திருமண தரப்பினர்

900.00

பணமாக செலுத்துதல் வேண்டும்

7

பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே திருமணம் இடம்பெறுதல்

பதிவாளர்

திருமண தரப்பினர்

900.00

பணமாக செலுத்துதல் வேண்டும்

-----

-----

-----

 

8

மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே திருமணம் இடம்பெறுதல்

மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர்

திருமண தரப்பினர்

900.00

பணமாக செலுத்துதல் வேண்டும்

9

19 வது பிரிவின் கீழ் அறிவித்தல் தொடர்பாக விஷேட அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் விண்ணப்பம்

பதிவாளர்

விண்ணப்பதாரர்

120.00

பணமாக செலுத்துதல் வேண்டும்

10

19 வது பிரிவின் கீழ் திருமண அறிவித்தல் தொடர்பாக விஷேட அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் விண்ணப்பம்

மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர்

விண்ணப்பதாரர்

120.00

பணமாக செலுத்துதல் வேண்டும்

11

24 வது பிரிவின் கீழ் பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே திருமணத்தை பதிவு செய்வதற்கான வீட்டு அனுமதிப்பத்திரத்தை வழங்குதல்

அரசாங்கத்திற்கு

திருமண தரப்பினர்

60.00

பணமாக செலுத்துதல் வேண்டும்

முஸ்லிம் திருமணங்களை பதிவு செய்தல்

 • முஸ்லிம்திருமணம்மற்றும்விவாகரத்துசட்டத்தின்கீழ், இலங்கையில் இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாம்.
 • இத்திருமணங்களைப் பதிவு செய்வதற்காக திணைக்களத்தால் முஸ்லிம் திருமணப் பதிவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 • திருமணம் பதிவு செய்யப்படுவதற்கு முன்னர் நிக்காஹ் சடங்குகள் செய்யப்படுகின்றன.
 • நிக்காஹ் சடங்குகளின் பின்னர், நிக்காஹ் சடங்குகளை நடாத்திய மௌலவியினால், மணமகளின் வலி, மணமகன் மற்றும் இரண்டு ஆண் சாட்சிகள் சகிதம் முஸ்லிம் திருமணப் பதிவாளரைச் சந்தித்து திருமணத்தைப் பதிவு செய்து கொள்ளல் வேண்டும்.
 • எனினும், அந்த நேரத்தில் திருமணத்தை பதிவு செய்ய முடியாவிட்டால், தாமதமான முஸ்லிம் திருமணமாக மீள்பதிவு செய்வதற்கு உரிய முஸ்லிம் பதிவாளருக்கு உத்தரவிடுவதற்கு உரிய பிரதேச செயலகத்தில் உள்ள மாவட்ட பதிவாளர் (பிரதேச செயலாளர்) அவர்களுக்கு அதிகாரம் உண்டு.

வெளிநாட்டு திருமணங்களை பதிவு செய்தல் (திருமண பதிவுகள் இலங்கை தூதரகங்கள் அல்லது இலங்கை உயர்ஸ்தானிகர் காரியாலயங்களில் மேற்கொள்ளப்படும் எனின்)

 • தூதரககடமைகள்சட்டத்தின்கீழ், தூதுவர்/ உயர்ஸ்தானிகர் அல்லது தூதரக அதிகாரிக்கு வெளிநாட்டில் திருமணத்தை பதிவு செய்வதற்கு அதிகாரம் உள்ளது.
 • இங்கு குறைந்தபட்சம் ஒரு தரப்பினராவது இலங்கையராக இருத்தல் வேண்டும்.
 • குறித்த திருமணத்தை சிங்களம், ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் பதிவு செய்து கொள்ளலாம்.
 • திருமணத்தை பொதுவான திருமண சட்டத்தின் கீழ் அல்லது கண்டிய திருமண விவாகரத்து சட்டத்தின் கீழ் அல்லது முஸ்லிம் சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ளலாம். (முஸ்லிம் சட்டத்தின் கீழ் ஒரு திருமணத்தை பதிவு செய்வதற்கு முஸ்லிம் பதிவாளரொருவர் இருத்தல் அவசியமாகும்.)

சான்றிதழில் உள்ள பிழைகளை திருத்தியமைத்தல்

பொதுவான திருமண சான்றிதழில் உள்ள பிழையை திருத்தம் செய்தல்

 • திருமணத்தைபதிவுசெய்யும் போது ஏற்பட்ட பிழையை திருத்திக் கொள்வதற்கு குறித்த திருமணத்தின் தரப்பினர்களால் உரிய கோரிக்கையை பொருத்தமான அதிகாரம்பெற்ற  மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.
 • தேவையான ஆவணங்கள்,
  • திருமணச் சான்றிதழ்
  • நீதிமன்றத்தால் கோரப்படும் ஆவணங்கள்
 • தரப்பினர் சட்டத்தரணியொருவர் மூலம் உரிய அதிகாரம்பெற்ற மாவட்ட நீதிமன்றத்தில் கோரிக்கையை சமர்ப்பித்தல் வேண்டும்.
 • குறித்த ஆவணத்தில் பிழைகள் இருப்பின், அது தொடர்பாக திருமணம் நடைபெற்ற பகுதிக்குரிய பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளருக்கு அறிவிப்பதன் மூலம் திருமண பதிவு ஆவணத்தின் இரண்டாவது பிரதி சரியாக உள்ளதா என்பதைத் பரீட்சித்துக் கொள்ளலாம்.

கண்டிய திருமண சான்றிதழில் உள்ள பிழையை திருத்தம் செய்தல்

 • திருமணத்தைபதிவுசெய்யும் போது ஏற்பட்ட பிழையை திருத்திக் கொள்வதற்கு உரிய கோரிக்கையை திருமணத்தைப் பதிவு செய்த பகுதிக்குரிய பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளருக்கு முன்வைத்தல் வேண்டும்.
 • தேவையான ஆவணங்கள்,
  • திருமணச் சான்றிதழ்
  • விடப்பட்டுள்ள பிழை மற்றும் சரியான தகவல்​களை உள்ளடக்கிய சத்தியக் கடதாசி
  • இவ்விடயத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஏனைய ஆவணங்கள்

முஸ்லிம் திருமண சான்றிதழில் உள்ள பிழையை திருத்தம் செய்தல்

 • திருமணத்தைபதிவுசெய்யும் சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட பிழையை திருத்திக் கொள்வதற்கு உரிய கோரிக்கையை திருமணத்தைப் பதிவுசெய்த பகுதிக்குரிய பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளருக்கு முன்வைத்தல் வேண்டும்.
 • தேவையான ஆவணங்கள்,
  • திருமணச் சான்றிதழ்
  • விடப்பட்டுள்ள பிழை மற்றும் சரியான தகவல்​களை உள்ளடக்கிய சத்தியக் கடதாசி
  • இவ்விடயத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஏனைய ஆவணங்கள் ஆகியவற்றை சமர்ப்பித்ததன் பின்னர் மாவட்டப் பதிவாளரினால் முறையான விசாரணையொன்றை மேற்கொண்டதன் பின்னர் உத்தரவை பிறப்பிக்கலாம்..

விவாகரத்தைப் பெற்றுக் கொள்ளல்

பொதுவான திருமண சட்டத்தின் கீழ் திருமணமொன்றை விவாகரத்து செய்தல்

 • இந்த விடயம் முற்றிலும் நீதிமன்ற நடவடிக்கையாகும். சட்டத்தரணி ஒருவரை அணுகி தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வது பொருத்தமானது.

கண்டிய திருமணமொன்றை விவாகரத்து செய்தல்

 • விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிக்க வேண்டியது,
  • விண்ணப்பதாரர் கண்டிய பகுதியில் வசிப்பவராக இருந்தால், வசிப்பிடத்திற்குரிய  பிரதேச செயலகத்தின் மாவட்டப் பதிவாளரிடம்,
  • விண்ணப்பதாரர் கண்டிய பகுயியில் வசிக்காத பட்சத்தில், பிரதிவாதி கண்டிய பகுயியில் வசிப்பவராக இருந்தால், குறித்த பிரிவின் பிரதேச செயலகத்தின் மாவட்டப் பதிவாளரிடம் அல்லது திருமணம் பதிவு செய்யப்பட்ட பிரிவின் பிரதேச  செயலக பிரிவின் மாவட்டப் பதிவாளரிடம்,
  • இரு தரப்பினரும் கண்டிய பகுதிக்கு வெளியே வசிப்பவராக இருந்தால், திருமணம் பதிவு செய்யப்பட்ட பிரிவிற்குரிய பிரதேச செயலகத்தின் மாவட்டப் பதிவாளரிடம்.
 • விவாகரத்திற்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப்படிவத்தை மாவட்டப் பதிவாளரிடம் பெற்றுக் கொள்ளலாம்.
 • சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்,
  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
  • கண்டிய திருமணச் சான்றிதழ்
  • முறைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஆவணங்கள்
 • மாவட்ட பதிவாளரினால் இரு தரப்பினரும் விசாரணைக்கு அழைக்கப்படுவர்.
 • விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் உறுதி செய்யப்பட்டால், மாவட்டப் பதிவாளர் விவாகரத்துக்கான கட்டளையை வெளியிடுவார். இல்லையெனில், விவாகரத்து நிராகரிக்கப்படும்.
  • மாவட்டப் பதிவாளரினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை ஏற்றுக்கொள்ளாவிடின், அதிருப்தியடைந்த தரப்பினர் 30 நாட்களுக்குள் மாவட்டப் பதிவாளரிடம் மேன்முறையீடு செய்யலாம்.
 • மாவட்ட பதிவாளரினால் குறித்த மேன்முறையீடு மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதோடு நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

முஸ்லிம் திருமணமொன்றை விவாகரத்து செய்தல்

 • முஸ்லிம்திருமணம்மற்றும்விவாகரத்துச்சட்டத்தின்கீழ்இடம்பெற்ற திருமணமொன்றை விவாகரத்து செய்வதற்கு, கணவன் அல்லது மனைவி தங்கள் அதிகார வரம்பிற்காக நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்ட காதியிடம் கோரிக்கையை சமர்ப்பித்தல் வேண்டும். (1951ம் ஆண்டின் 13ம் இலக்க முஸ்லிம் திருமண விவாகரத்துச் சட்டம் 115 ம் அதிகாரத்தைப் பார்வையிடவும்)

விவாகரத்துசான்றிதழைப் பெற்றுக் கொள்ளல்

கண்டிய திருமண விவாகரத்துச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளல்

 • மாவட்டப்பதிவாளரால்வழங்கப்பட்டவிவாகரத்து தீர்ப்பு தொடர்பாக மேன்முறையீடுசெய்யப்படவில்லைஎன்றால் (தீர்ப்பு வழங்கப்பட்டு 30 நாட்களுக்குள்), மேன்முறையீட்டு காலத்தின் முடிவில் விவாகரத்து சான்றிதழை பெண் தரப்பினருக்கு வழங்கப்படும்.
 • விவாகரத்து தொடர்பான மாவட்டப் பதிவாளரின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யும் பட்சத்தில், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விவாகரத்துச் சான்றிதழ் சம்பந்தப்பட்ட மாவட்டப் பதிவாளரால் வழங்கப்படும்.

முஸ்லிம் திருமண விவாகரத்துச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளல்

 • திருமணத்தை விவாகரத்து செய்யும் போது, ​​சம்பந்தப்பட்ட பெண் தரப்பினருக்கு காதியினால் இலவசமாக பிரதியொன்று வழங்கப்படும் என்பதோடு, மேலதிக பிரதிகள் தேவைப்பட்டால், காதியின் அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேச செயலகத்திற்கு விண்ணப்பப் படிவத்தை முன்வைத்து சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளைப் பெற்றுக்கொள்ளலாம். 

திருமணச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகள் மற்றும் மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளைப் பெற்றுக் கொள்ளல்

திருமணச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியைப் பெற்றுக் கொள்ளல்

 • திருமணச் சான்றிதழின் பிரதிகளை பெற்றுக்கொள்ள வேண்டியது திருமணம் நடைபெற்ற பகுதிக்குரிய பிரதேச செயலகத்திலேயாகும்.
 • குறித்த சான்றிதழ் தரவு அமைப்பில் சேமிக்கப்பட்டு இருந்தால், அருகிலுள்ள ஏதேனுமொரு பிரதேச செயலகத்திலிருந்தும் சான்றிதழின் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
  • 1960.01.01 ம் திகதி முதல் 2020.01.01 ம் திகதி வரையிலான சான்றிதழ்களின் பிரதிகளை தரவு அமைப்பிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். (தரவு அமைப்பில் உள்ளதா என்பதை உங்கள் அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் பரீட்சித்து உறுதிப்படுத்திக் கொள்ளம்.)
 • தேவையான விண்ணப்பப் படிவத்தை ஏதேனும் ஒரு பிரதேச செயலகத்தின் மாவட்ட பதிவாளர் பிரிவிலிருந்து அல்லது இத்திணைக்களத்தின் இணையதளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
 • அறவிடப்படும் கட்டணம்,
  • திருமணச் சான்றிதழின் இலக்கம், பதிவு செய்யப்பட்ட பிரிவு மற்றும் பதிவு செய்யப்பட்ட திகதி ஆகியன தெரிந்திருந்தால் - ஒரு பிரதிக்கான கட்டணம் ரூ.120.00 ஆகும்.
  • திருமணச்சான்றிதழின்இலக்கம்மற்றும்பதிவு செய்த திகதி ஆகியன தெரியவில்லைஎன்றால் (இரண்டுவருடங்களுக்கு மேற்படாத ஆவணத்தேடல் அவசியம் என்பதால்) - ரு பிரதிக்கான கட்டணம் ரூ.250.00. ஆகும்.
 • உரிய கட்டணத்தை பிரதேச செயலகத்தில் அல்லது பதிவாளர் நாயகத்தின் இலங்கை​ வங்கியின்  (புறக்கோட்டை கிளை) கணக்கு இலக்கம் 7039827 இற்கு செலுத்தியதன் பின்னர் வங்கிச் சீட்டு (Bank Slip) மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை உரிய பிரதேச செயலகத்தில் சமர்ப்பித்து சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
 • திருமணச் சான்றிதழைத் தபால் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டுமானால், விண்ணப்பப் படிவம் மற்றும் மேலே குறிப்பிட்டவாறு பணம் செலுத்திய பற்றுச் சீட்டுடன் சுயமுகவரியிடப்பட்ட முத்திரை ஒட்டப்பட்ட தபாலுறையையும் சேர்த்து சமர்ப்பித்தல் வேண்டும்.
 • திருமணம் பதிவு செய்யப்பட்டிருந்தால், செலுத்தப்பட்ட தொகைக்கு ஏற்ப தொடர்புடைய திருமணச் சான்றிதழின் கோரப்பட்ட பிரதிகளின் எண்ணிக்கை வழங்கப்படும் என்பதோடு திருமணம் பதிவு செய்யப்பட்டிருக்காவிடின், அது தொடர்பாக படிவம் B38 மூலம் அறிவிக்கப்படும்.

** அத்தோடு https://online.ebmd.rgd.gov.lk இற்கு பிரவேசிப்பதன் மூலம் Onlineமுறையின் மூலம் சான்றிதழ்களின் பிரதிகளைக் கோரவும் முடியும்.

திருமணச்சான்றிதழ்களின்மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளைப்பெற்றுக் கொள்ளல்

 • இந்தச்சேவையைப் பெற்றுக்கொள்ள முடியுமான மொழிபெயர்ப்பாளர்கள் பணியாற்றும் திணைக்களத்தின் கிளை அலுவலகங்கள் தொடர்பான விபரங்களை இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.. மொழிபெயர்ப்பாளர்கள் பணியாற்றும் அலுவலகங்கள்
 • பெற்றுக்கொள்ள முடியுமான மொழிபெயர்ப்புகள்
  • சிங்களம் – ஆங்கிலம்
  • ஆங்கிலம் – சிங்களம்
  • தமிழ் – ஆங்கிலம்
  • ஆங்கிலம் – தமிழ்
 • விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் நேரம் :
  • வாரத்தின் அலுவலக நாட்களில் மு.ப. 9.00 மணி. – பி.ப. 2.30
  • சனி, ஞாயிறு மற்றும் அரச விடுமுறை நாட்களில் திறக்கப்படாது.
 • விண்ணப்பப் படிவத்தை மொழிபெயர்ப்பாளர்கள் பணிபுரியும் அலுவலகங்களிலிருந்தோ அல்லது இணையதளத்திலிருந்தோ பெற்றுக் கொள்ளலாம்.
 • சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்,
  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
  • மொழிபெயர்க்கப்பட வேண்டிய ஆவணத்தின் அசல் பிரதி அல்லது பிரதேச செயலகத்திலிருந்து பெறப்பட்ட சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
  • தபால் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டுமெனின், மேற்குறித்த தேவைப்பாடுகளுக்கு மேலதிகமாக சுய முகவரியிடப்பட்ட முத்திரையிடப்பட்ட கடித உறை
 • மொழிபெயர்ப்பு கட்டணம்
  • ஒரு மொழிபெயர்ப்புப் பிரதிக்கு ரூ. 600.00.
  • எத்தனை மொழிபெயர்ப்புப் பிரதிகளையும் பெற்றுக்கொள்ளலாம்
 • கால எல்லை : 05 அலுவலக நாட்கள்.

தற்போது ஒரு நாள் சேவை இல்லை

முகவரி

தலைமை பதிவாளர் திணைக்களம்

234/A3,
டென்சில் கொப்பேகடுவ மாவத்தை,
பத்தரமுல்ல,
இலங்கை.

தொடர்புகளுக்கு
+94 112 889 488 - 489

மின்னஞ்சல்
info@rgd.gov.lk