கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக அரசாங்க சேவையினை  பொதுவாக மேற்கொள்வதற்கு இயலாமையும், சுகாதார பாதுகாப்பு முறைமையினை கடைப்பிடிப்பதற்கு  வேண்டியேற்படலும், பொதுவாக மக்கள் வாழ்க்கையினை  கொண்டு நடாத்துவதற்கு இயலாத விதம் ஏற்பட்டுள்ள பயணத்தடை காரணமாக திணைக்களத்தின் பிரதான கடமையான பிறப்பு, விவாகம், இறப்புச் சான்றிதழ் பிரதிகளினை வழங்கும் நடவடிக்கைகளில் திணைக்களத்தின் அலுவலர்களினைப்​ போலவே பொதுமக்களும் ஏற்பட்ட சிரமத்திற்கு தீர்வாக எந்தவொரு அவசர நிலைமை காரணமாகவும் தடையின்றி வினைத்திறனான, விரைவான மற்றும்  தொடர்ச்சியான பிறப்பு, விவாகம, இறப்புச் சான்றிதழ்களின் பிரதிகளினை வழங்குவதற்காக திணைக்களத்தினால்  முன்னேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நிகழ்நிலை (Online) முறைமையினை விரைவாக மக்கள் மயப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பொதுமக்கள் தங்கள் மொபைல் போன்கள் அல்லது கணனி ஊடாக சான்றிதழ் நகல்களைக் கோர பின்வரும் இணைப்பைப் பயன்படுத்தலாம். மாஸ்டர் / விசா அட்டைகளைப் பயன்படுத்தி தொடர்புடைய பணத்தினை செலுத்திக்கொள்ள முடியும்.

  • நிகழ்நிலை சான்றிதழ்கள் கோர இங்கே கிளிக் செய்க. click
  • மேலும் உதவிக்கு பயனர் கையேட்டைப் பார்க்கவும். click
  • மேலும் விவரங்களுக்கு மாவட்ட செயலகத்தின் ADR கிளையை தொடர்பு கொள்ளவும். தொடர்பு எண்கள் இங்கே கிடைக்கின்றன. click

 

முகவரி

தலைமை பதிவாளர் திணைக்களம்

234/A3,
டென்சில் கொப்பேகடுவ மாவத்தை,
பத்தரமுல்ல,
இலங்கை.

தொடர்புகளுக்கு
+94 112 889 488 - 489

மின்னஞ்சல்
info@rgd.gov.lk