அற்றோனி தத்துவத்தைப் பதிவுசெய்தல்
- விண்ணப்பதாரரின் சார்பில் முகவராக (சட்ட) செயற்படுவதற்கு இலங்கையில் வதிகின்ற இன்னொரு நபருக்கு அனுமதியளிப்பதற்கு ஒரு நபர் அற்றோனி தத்துவத்திற்குப் பதிவுசெய்துகொள்ள முடியும்.
- அனைத்து ஆவணங்களும் தலைமை அலுவலகத்திற்கு அல்லது வலய அலுவலகத்திற்கு சமர்பிக்க வேண்டும்.
- வலய அலுவலகம் - பெறுகின்றவர் வலய அலுவலக பிரதேசத்தில் குடியிருப்பவராக இருந்தால் வலய அலுவலகம் பதிவுசெய்யும்.
- தலைமை அலுவலகம் - பெறுகின்றவர் நாட்டின் எப்பகுதியில் குடியிருந்தாலும் தலைமை அலுவலகம் பதிவுசெய்யும்.
- சரியான தகவல்களுடன் ஆவணத்தை தனிப்பட்டமுறையில் அல்லது பிரசித்த நொத்தாரிசு ஊடாக சமர்ப்பிக்க வேண்டும்.
- சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்,
- அற்றோனி தத்துவம்
- அற்றோனி தத்துவத்திடமிருந்து சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
- சமாதான நீதவான் சான்றுப்படுத்திய சத்தியகடதாசி
- கட்டணம் பின்வருமாறு அறவிடப்படும்.
விபரம் | விலை(ரூ) |
அற்றோனி தத்துவத்தைப் பதிவுசெய்தல் | 1500.00 |
அற்றோனி தத்துவம் சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பரிசோதித்தல் | 500.00 |
அற்றோனி தத்துவத்தின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியைப் பெற்றுக்கொள்ளுதல் | 500.00 |
இருமடியில் பிரித்ததெடுக்கப்பட்டதை சான்றுப்படுத்தி வழங்குதல் | 500.00 |
அற்றோனி தத்துவத்தை இரத்துச்செய்தல்
- அற்றோனி தத்துவம் பதிவுசெய்யப்பட்ட அலுவலகத்திற்கு விண்ணப்பதாரர் கோரிக்கை விடுக்க வேண்டும்.
- சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
- அற்றோனி தத்துவத்தின் மூலப்பிரதி
- விண்ணப்பதாரரால் வழங்கப்பட்ட சத்தியகடதாசி
- இலங்கை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட விளம்பரத்தின் சிங்கள, தமிழ், ஆங்கில பிரதிகள்.
- அற்றோனி தத்துவத்தின் பதிவை இரத்துச்செய்வதற்கான கட்டணம் ரூபா 1500.00
ஆவணங்களைப் பதிவுசெய்தல்
- ஒரு காணியைப் பதிவுசெய்வதற்கு அந்த காணி அமைந்துள்ள பிரதேசத்தின் காணி பதிவு அலுவலகத்திற்கு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- பிரசித்த நொத்தாரிசினால் எழுதப்பட்டு சான்றுப்படுத்தப்பட்ட ஆவணங்கள் பதிவுக்காக ஏற்றுக்கொள்ளப்படும்.
- பதிவுக்காக ஆவணங்களை எப்படி சமர்ப்பிப்பது,
- தபால் மூலம்
- சென்று ஒப்படைப்பதுமூலம்
- ஆவணத்தின் நிலைகேற்ப பதிவுக் கட்டணம் அறவிடப்படும்
- அசையும் சொத்துக்கள் ரூ. - 22.50
- அசையும் சொத்துக்கள் ரூ. - 30.00 (மேலதிக காணியைப் பதிவுசெய்ய மேலதிக கட்டுணம் ரூ.10.00)
பதிவுசெய்த ஆவணத்தை சரிபார்த்தல்
- காணி பதிவு அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்ட ஆவணங்கள் பிழையாக எழுதப்பட்டிருந்தால் அவற்றைச் சரிபார்க்க விண்ணப்பிக்க முடியும்.
- ஆவணங்கள் பதிவுசெய்யப்பட்ட காணி பதிவு அலுவலகத்தின் காணி பதிவாளருக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் விண்ணப்பிக்கும் கடிதத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்,
- பிழையாக பதிவுசெய்யப்பட்ட இருமடியின் பிரதிகள்
- எவ்வாறு திருத்தம் செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கும் சத்தியகடதாசி
- பிழையாக பதிவுசெய்யப்பட்டுள்ள உறுதியின் மூலப்பிரதி
- காணிப்பதிவு அலுவலகம் திருத்தங்களை மேற்கொண்டு விண்ணப்பதாரருக்கு அறிவிக்கும்.
காணி பதிவு அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்ட ஆவணத்தின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியைப் பெற்றுக்கொள்ளுதல்
- குறித்த காணி பதிவு அலுவலகத்திற்கு தனிப்பட்ட முறையில் அல்லது தபால்மூலம் விண்ணப்பிக்க முடியும்.
- காணி பதிவு அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
- காணி பதிவு அலுவலகத்திலிருந்து சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளைப் பெற்றுக்கொள்ளுவதற்கு பின்வருமாறு கட்டணங்கள் அறவிடப்படும்.
விபரம் | விலை(ரூ) |
காணி பதிவேட்டைப் பரிசோதித்தல், சுட்டெண்,காணி உறுதி அல்லது காணியுடன் சம்பந்தப்பட்ட ஆவணம் | 500.00 |
இருமடிப்பில் பிரித்தெடுக்கப்பட்ட பிரதியை வழங்குதல் | 500.00 |
காணி உறுதியின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியை வழங்குதல் | 500.00 |
ஆட்சேர்ப்பிற்கான கிளார்க்ஸ் கட்டுரை
Every person who intends to apply to sit for the competitive examination, shall possess the education qualifications and other qualifications referred below
Qualification
I. Education Qualifications
The Candidate shall have passed,
- At least six subjects including Mathematics, English, Sinhala or Tamil at the G.C.E(O/L) Examination is not more than Two sittings with credit passes for any three of those subjects and
- Three subjects (excluding the general test) at the G.C.E(A/L) Examination in one sitting
II. Other Qualifications
The Candidate Shall,
- be a Sri Lankan Citizen
- be not be less than 20 years and not more than 50 years of age to the closing date of application
- have an excellent character
- be of adequate physical and mental capacity to discharge the duties of the profession
- not be convicted of any criminal offence by a court of Law
The relevant procedure is published in the Government Gazette once the application is call for the examination.