வீட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்

 • பிறப்பு நிகழ்ந்து 07 நாட்களுக்குள் கிராம அதிகாரிக்கு அறிவிக்கவும்.
 • கிராம அதிகாரியினால் பிறப்பு பற்றிய அறிக்கை பிரதேச பதிவாளருக்கு அறிவிக்கப்படும்.
 • பிறப்பு பதியப்படுவது பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளாரினால் ஆகும்.
 • சரியாக பூரணப்படித்தப்பட்ட பிரதிக்கினை பிரதேசத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளருக்கு பெற்று தரவும். பிரதிக்கினை பதிவாளரிடம் பெற்றுக்கொள்ள முடியும்.
 • தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்,
  • தந்தை
  • தாய்
  • பிறப்பு நிகழ்ந்த பொழுது அருகில் இருந்த நபர்
  • பாதுகாவலர்
 • பிறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குள் பிறப்பினை இலவசமாக பதிவு செய்துக்கொள்ள முடியும். பிறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்கு பின் பிறப்பினை பதிவுசெய்துக்கொள்ள முடிவதுடன் அதற்காக காலங்கடந்த பிறப்பினை பதிவு செய்தல் விபரத்தினை பார்க்க.
 • தகவல் அளிப்பவருக்கு இலவசமாக பிறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.

கிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்

 • பிறப்பு பதியப்படுவது பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளாரினால் ஆகும். பிறப்பு நிகழ்ந்தது கிராமிய வைத்திய சாலையிலாயின், அப்பிரதேசத்தில் உள்ள பதிவாளருக்கு பிறப்பினை பதிவுசெய்வதற்கு அறிவிக்கவும்.
 • பிறப்பினை பதிவுசெய்வதற்கு தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்,
  • தந்தை
  • தாய்
  • பிள்ளை பிறந்த நேரம் அங்கு இருந்த நபர்
  • வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி
 • பிறப்பினை அறிவிப்பதற்கான பிரதிக்கினையினை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் பெற்றுக்கொள்ளவும்.
 • சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்,
  • சரியாக பூரணப்படுத்தப்பட்ட பிரதிக்கினை.
  • பிறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு வைத்திய சாலையினால் வழங்கப்பட்ட அறிக்கை.
 • பிறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குள் பிறப்பினை இலவசமாக பதிவு செய்துக்கொள்ள முடியும்.
 • தகவல் அளிப்பவருக்கு இலவசமாக பிறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.
 • மேலதிக தகவல்கள் தேவையாயின் அருகில் உள்ள பிதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரனை சந்திக்கவும்.

பொது வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்

 • பிறப்பினை பதிவு செய்வதற்காக பிறப்பு நிகழ்ந்த பொது வைத்திய சாலையில் உள்ள பிறப்பு மற்றும் இறப்பு பதிவுசெய்யும் பதிவாளருக்கு அறிவிக்கவும்.
 • பிறப்பினை பதிவுசெய்வதற்கு தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்,
  • தந்தை
  • தாய்
  • பிள்ளை பிறந்த நேரம் அங்கு இருந்த நபர்
  • வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி
 • பிறப்பினை அறிவிப்பதற்கான பிரதிக்கினையினை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் பெற்றுக் கொள்ளவும்.
 • சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்,
  • சரியாக பூரணப்படுத்தப்பட்ட பிரதிக்கினை.
  • பிறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு வைத்திய சாலையினால் வழங்கப்பட்ட அறிக்கை.
 • 03 மாத கால எல்லைக்குள் பிறப்பினை இலவசமாக பதிவுசெய்துக்கொள்ள முடியும்.
 • தகவல் அளிப்பவருக்கு இலவசமாக பிறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.
 • மேலதிக தகவல்கள் தேவையாயின் அருகில் உள்ள பிதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரனை சந்திக்கவும்.

தனியார் வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்

 • பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தில் பிறப்பு, இறப்பு பதிவாளரால் பிறப்பு பதிவுசெய்யப்படுகிறது.
 • பிறப்பு தனியார் வைத்தியசாலையில் நிகழ்ந்தால் அத்தகையை பிறப்பை அப்பிரதேச பதியவாளருக்கு அறிவித்தல்.
 • பிறப்பைப் பற்றிய தகவல்களை வழங்க பொருத்தமான நபர்கள்
  • தந்தை
  • தாய்
  • பிறப்பு நிகழ்ந்தபோது சமூகமளித்திருந்த நபர்
  • அந்த வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரி
 • பிறப்பை அறிவிப்பதற்காக பிறப்பு, இறப்பு பதிவாளரிடமிருந்து தகுந்த வெளிப்படுத்தல் படிவத்தைப் பெற்றுக்கொள்ளுதல்.
 • சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
  • சரியாகப் பூர்த்திசெய்யப்பட்ட வெளிப்படுத்தல்.
  • பிறப்பு நிகழ்ந்தததை நிரூபிப்பதற்கு வைத்தியசாலையிலிருந்து வழங்கப்பட்ட ஆவணம்.
 • பிறப்பு நிகழ்ந்து 3 மாதங்களுக்குள் பிறப்பை இலவசமாகப் பதிவுசெய்துகொள்ள முடியும்.
 • பிறப்புச் சான்றிதழ் பிரதியொன்று தகவல் அளிப்பவருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
 • மேலதிக தகவல்களுக்கு உங்கள் பிரதேசத்தின் பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட செயலாளரைச் சந்திக்கவும்.

பதிவுசெய்யப்பட்ட தோட்டத்தில் நிகழந்த பிறப்பை பதிவுசெய்தல்

 • பிறப்பு நிகழ்ந்து 07 நாட்களுக்குள் தோட்ட அதிகாரிக்கு அறிவித்தல்
 • தகவல் அளிக்க வேண்டிய நபர்கள்
  • தந்தை
  • தாய்
  • பிறப்பின்போது சமூகமளித்திருந்த ஒரு நபர்
 • தோட்ட அதிகாரி விண்ணப்பத்தை சான்றுப்படுத்தி மாவட்ட மருத்துவ அதிகாரி ஊடாக பிரதேச செயலாளர் ஊடாக அனுப்பிவைப்பார்.
 • மாவட்ட பதிவாளரால் பிறப்பு பதிவுசெய்யப்பட்டு பிறப்புச் சான்றிதழ் தோட்ட அதிகாரிக்கு அனுப்பிவைக்கப்படும்.
 • தகவல் அளித்தவர் தோட்ட அதிகாரியிடமிருந்து பிறப்புச் சான்றிதழை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

வெளிநாட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்

 • நிரந்தர இலங்கை பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளின் பிறப்பினை  பதிவுசெய்துக்கொள்ள முடியும்.
 • பிறப்பினை பதிவுசெய்வது பிறப்பு நிகழ்ந்த நாட்டில் உள்ள நிரந்தர இலங்கை தூதுவர்/ நிரந்தர இலங்கை  உயர் ஆணையகத்தில் ஆகும்.
 • பிறப்பினை பதிவுசெய்வதற்கு தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்,
  • தந்தை
  • தாய்
  • பிள்ளையின் பாதுகாவலர்
 • பிறப்பினை அறிவிப்பதற்கான பிரதிக்கினையினை நிரந்தர இலங்கை தூதுவர் / நிரந்தர இலங்கை  உயர் ஆணையகத்தில் பெற்றுக்கொள்ளவும்.
 • சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்,
  • சரியாக பூரணப்படுத்தப்பட்ட பிரதிக்கினை
  • பிறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு உரிய ஆவணங்கள்
 • 03 மாத கால எல்லைக்குள் பிறப்பினை இலவசமாக பதிவுசெய்துக்கொள்ள முடியும்.
 • தகவல் அளிப்பவருக்கு இலவசமாக பிறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.
 • வெளிநாட்டில் பிறப்பு நிகழ்ந்து, பிறப்பு பதிவுசெய்யப்படாத தற்பொழுது நிரந்தரமாக இலங்கைக்கு வந்திருக்கும் நபரின் பிறப்பினை பதிவு செய்துக்கொள்ள முடியும்.

அதற்காக தேவையான தகவல்கள் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் மத்திய பதிவேட்டறையின் உதவி பதிவாளர் நாயகம் அவர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும் தொலைலபேசி இலக்கம்: +94 112 329 773 or +94 112 433 075

பதிவுசெய்யப்படாத பிறப்பு பதிவு

காலங்கடந்த பிறப்பினை பதிவு செய்தல்

 • பிறப்பு நிகழ்ந்து 03 மாதங்கள் பிறப்பை பதிவுசெய்யாமலிருந்தால் அதை பதிவுசெய்யலாம்.
 • பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளருக்கு வெளிப்படுத்தலைச் சமர்ப்பிக்க வேண்டும்.
 • இதற்குத் தகுதியானவர்கள்
  • இதில் ஆர்வம்காட்டுகின்ற எவரேனும் ஒருவர்
  • பெற்றோர்களில் ஒருவர்.
 • அறவிடப்படும் கட்டணம் ரூ.50.00
 • பிறப்பு நிகழ்ந்ததிலிருந்துஒரு வருடத்திற்கு வெளிப்படுத்தலுடன் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • பெற்றோர் விவாகம் செய்திருந்தால் விவாக சான்றிதழ்
  • பிறந்த இடத்தையும் திகதியையும் நிரூபிப்பதற்கு பின்வரும் ஆவணங்களில் ஒன்று
   • வைத்தியசாலை பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
   • கிராம உத்தியோகத்தர் பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
   • தோட்ட பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
   • பொது சுகாதார அதிகாரியின் சான்றிதழ்
 • பிறப்பு நிகழ்ந்து ஒரு வருடத்தின் பின்னர் வெளிப்படுத்தலுடன் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • பெற்றோர் விவாகம் செய்திருந்தால் விவாக சான்றிதழ்
  • வெற்று பெறுபேற்று தாள்
  • பிறந்த இடத்தையும் திகதியையும் நிரூபிப்பதற்கு பின்வரும் ஆவணங்களில் ஒன்று
   • வைத்தியசாலை பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
   • கிராம உத்தியோகத்தர் பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
   • தோட்ட பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
   • சுகாதார மருத்துவ தாதியின் பிறப்பு பதிவேட்டின் பிரதி
  • மேற்குறிப்பிட்ட ஆவணங்களில் எதுவும் இல்லாத சந்தர்ப்பங்களில்,
   • சுகாதார அபிவிருத்தி பதிவேடு
   • ஞானஸ்னான சான்றிதழ்
   • பாடசாலை அனுமதி பதிவேட்டின்/மாணவர் அறிக்கையின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
   • தோட்ட நலனோம்பல் அதிகாரியின் அறிக்கை
   • பிறப்பு நிகழ்ந்த திகதியை ஒட்டி நேரம் கணிக்கப்பட்ட ஜாதக பதிவின் பிரதி
  • இந்த ஆவணங்களில் எதுவும் இல்லாவிட்டால், அறிந்த விடயங்களை வெளிப்படுத்தும் ஒரு சத்திய கடதாசி.

அனுமான வயதுச்சான்றிதழ் வழங்கல்

 • பிறப்பினை பதிவுசெய்ய முடியாத வயது 14ஐ விட குறைந்த பிள்ளைகள் சம்பந்தமாக அனுமான வயதுச் சான்றிதழ் வழங்கப்படும்.
 • அனுமான வயதுச்சான்றிதழ் வழங்கப்படுவது,
  • அரசின் அனுமதிப்பெற்ற பிள்ளை காப்பகத்தின் பிள்ளைகள்
  • அரசின் அனுமதிப்பெற்ற பிள்ளை காப்பகத்தின் பிள்ளைகள் அல்லாத வேறு தனியாரின் பாதுகாப்பில் உள்ள பிள்ளைகள்
 • அரசின் அனுமதிப்பெற்ற பிள்ளை காப்பகத்தின் பிள்ளைகள் பிரதிக்கினையுடன் சமர்ப்பிக்கப்படவேண்டிய ஆவணங்கள்
  • பிள்ளை காப்பகத்தின் நிருவாகியின் சத்தியக்கூற்று
  • அரசின் வைத்திய அலுவலர் மூலம் பிள்ளையின் வயதினை அனுமானித்து வழங்கப்பட்ட வைத்திய சான்றிதழ்
  • பிள்ளை சம்பந்தமான விபரத்தினை உள்ளடக்கிய வேறு ஆவணங்கள் (இருந்தால் மட்டும்)
 • அரசின் அனுமதிப்பெற்ற பிள்ளை காப்பகத்தின் பிள்ளைகள் அல்லாத வேறு தனியாரின் பாதுகாப்பில் உள்ள பிள்ளைகள் பிரதிக்கினையுடன் சமர்ப்பிக்கப்படவேண்டிய ஆவணங்கள்
  • பாதுகாவலரின் சத்தியக்கூற்று
  • பிள்ளை பாதுகாவலரின் பாதுகாப்பில் உள்ளார் என உறுதிப்படுத்தக்கூடிய
   • கிராம அலுவலரின் சான்றிதழ் அல்லது
   • சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு  அலுவலரின் சான்றிதழ் அல்லது
   • சமூக சேவைகள் திணைக்களத்தின் சான்றிதழ் அல்லது
   • பொலிஸ் பரிசோதகரினால் வழங்கப்பட்ட சான்றிதழ்
  • அரசின் வைத்திய அதிகாரியினால் பிள்ளையின் வயதினை அனுமானித்து வழங்கப்பட்ட வைத்திய சான்றிதழ்
  • சுகாதார வளர்ச்சி  குறிப்பின் பதிவேடு
  • பிள்ளை பாடசாலை செல்லுமாயின் பாடசாலையில் அனுமதித்த பதிவேட்டின் பிரதி
 • மேலதிக விபரங்கள் தேவைப்படின் அருகில் உள்ள பிரதேசச் செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரை சந்திக்கவும்.

பிறப்பு சான்றிதழில் உட்புகுத்தப்பட்ட விபரத்தினை திருத்தியமைத்தல்

 • பிறப்பு பதிவு செய்தல் குறிப்பு,
  • 01 வது கூட்டின் விபரம் (பிறந்த திகதி மற்றும் பிறந்த இடம்)
  • 03 வது கூட்டின் விபரம் (பால்)
  • 05 வது கூட்டின் விபரம் (தாயின் விபரங்கள் அனைத்தும்)(பிறப்பினை பதிவுசெய்ததன் பின் தாயின் பெயர் மாற்றப்பட்டிருந்தால், பெயர் மாற்றம் இந்த ஒதுக்கீட்டின் கீழ்செய்ய முடியாது)
  • 09 வது கூட்டின் விபரம் (தகவல் அளிப்பவரது விபரங்கள்) திருத்தப்பட முடியும்.
 • பிரதிக்கினை பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிரதேச செயலகத்தின மேலதிக மாவட்ட பதிவாளரிடம் சமர்ப்பிக்கவும்.
 • பிரதிக்கினையினை சமர்ப்பிப்பது
  • பிறப்புச்சான்றிதழுக்குரிய நபர்
  • தந்தை அல்லது தாய்
  • சட்டமுறையான பாதுகாவலர்
  • பிறப்புச் சான்றிதழில் உள்ள ஏதாவது விபரம் பற்றி அதிருப்தியடைந்த நபர்
 • பிரதிக்கினைக்கு வழங்கப்பட வேண்டிய முத்திரைக்கட்டணம் 5.00 ஆகும்.
 • பிரதிக்கனை திருத்த உத்தேசித்த பிறப்புச்சான்றிதழின் உறுதிப்படித்தப்பட்ட பிரதியினை கட்டாயம் இணைத்தல் வேண்டும். விண்ணப்பத்தின் உறுதிதன்மையினை பேணுவதற்காக  எழுத்து மூல சாட்சியங்ளை சமர்ப்பிக்க.
 • பிரதிக்கனை மூலம் செய்யப்படும் விண்ணப்பத்தின் உறுதிதன்மையினை பேணுவதற்கான எழுத்து மூல சாட்சியங்கள் சில கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன.,
  • பெற்றோரின் விவாகச் சான்றிதழ்
  • பிள்ளை பெயர்ப்பட்டியல்/ சகோதர பெயர்ப்பட்டியல்
  • தந்தை/ தாயின் பிறப்புச்சான்றிதழ்
  • பெற்றோரின் விவாகத்தினை பதிவுசெய்ததன் பின் பிறந்த பிள்ளையின் பிறப்புச்சான்றிதழ்
  • விவாகத்தினை பதிவு செய்ததன் பின் பிறந்த பிள்ளை அல்லாவிடில், விடயத்திற்குரிய பிள்ளைக்கு மூத்த அல்லது இளைய பிள்ளையின் பிறப்புச்சான்றிதழ்
  • வைத்தியசாலை, மகபேற்று இல்லம் என்பவற்றில் உள்ள குறிப்புகளின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி அல்லது மகபேற்று தாதியின் ஆவணத்தின் பிரதி.
  • மாணவர் அறிக்கை, பிள்ளையினை பாடசாலையில் அனுமதித்தல் ஆவணத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
  • விடயதாரி மற்றும் பெற்றோரின் பெயரினை உள்ளடக்கிய வாக்காளர் பெயர் பட்டியல்
  • தந்தை இறந்திருந்தால் அவரின் இறப்புச்சான்றிதழ்

மகவேற்பு செய்தல்

 • மகவேற்பு செய்யப்படும் பிள்ளையின் வயது 14 ற்கு அதிகமாதல் கூடாது.
 • விண்ணப்பதாரர் மூலம் பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள்
  • விண்ணப்பதாரரது வயது 25ற்கு அதிகமாயிருத்தல் வேண்டும்.
  • பிள்ளையினை மகவேற்பு செய்வதற்கு விண்ணப்பதாரர் மற்றும் உரிய பிள்ளைக்கிடையில் வயது வித்தியாசம் குறைந்தது 21 வயதாவது இருத்தல் வேண்டும்.
  • உரிய பிள்ளை விண்ணப்பதாரரின் பாதுகாவலில் இருந்தால் விண்ணப்பதாரரின் சகோதரரின் அல்லது சகோதரியின் அல்லது அவர்களின் பாதுகாப்பில் உள்ள பிள்ளையாயின் அல்லது அவர்களின் விவாக திறத்தாரின் பிள்ளையாயின் மேற்குறிப்பிட்ட நிலைமை உரியதல்ல.
 • மகவேற்பு செய்யப்படும் பிள்ளையின் வயது 10ஐ விட அதிகமாயின் பிள்ளையின் விருப்பம் அவசியமானது.
 • விவாக திறத்தாரின் மூலம் (கணவன் மற்றும் மனைவி) விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட முடியும்.
 • மகவேற்பு கட்டளையினை வழங்குவது மாவட்ட நீதிமன்றத்தினால் ஆகும்.
 • அக்கட்டளை பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் பதிவு செய்யப்படல் வேண்டும்.
 • மகவேற்பு செய்யப்படும் பிள்ளையின் பிறப்பினை மீள பதிவு செய்துக்கொள்ள முடியும்.
 • பிறப்பினை மீள பதிவு செய்துக்கொள்ள கீழ் குறிப்பிடப்படும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
  • பிறப்பினை மீள பதிவுசெய்துக்கொள்வதற்கான விண்ணப்பம்
  • மகவேற்பு செய்த பெற்றோரின் விவாகச் சான்றிதழ்
  • தாய் மற்றும் தந்தையின் விவாகச் சான்றிதழ்
  • மகவேற்புச் சான்றிதழ்
 • பிறப்பினை மீள பதிவு செய்து கொள்வதற்கான விண்ணப்பத்தினை பிள்ளையின் பிறந்த இடத்திற்குரிய பிரதேசத்திற்குரிய பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வலய அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

மொழிபெயர்ப்பு மற்றும் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை பெறல்

பிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்

 • பிறப்புச் சான்றிதழின் பிரதியினைபெற்றுக்கொள்ள முடிவது பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்திற்குரிய பிரதேச செயலகத்தில் ஆகும்.
 • தேவையான விண்ணப்பப்படிவம் எந்தவொரு பிரதேச செயலக்தின் மாவட்ட பதிவக பிரிவில் பெற்றுக்கொள்ள முடியும்.
 • அறவிடப்படும் கட்டணங்கள்,
  • பிறப்புச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட திகதி தெரியுமாயின் ரூபா.120.00
  • பிறப்புச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட திகதி தெரியாவிடின்,
   • 03 மாதங்கட்கு உட்பட்ட ஆவண தேடுதலுக்காக ரூபா. 120.00
   • 02 வருடங்கட்கு உட்பட்ட ஆவண தேடுதலுக்காக ரூபா. 250.00
 • தேவையான கட்டணங்கள் முத்திரை மூலம் விண்ணப்பப் படிவத்தில் ஒட்டவும்.
 • பூரணப்படித்தப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் உரிய பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கவும்.
 • பிறப்புச் சான்றிதழினை தபால் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் விலாசம் எழுதிய முத்திரை ஒட்டப்பட்ட தபாலுறையினை விண்ணப்ப படிவத்துடன் சமர்ப்பிக்கவும்.
 • பிறப்பு பதியப்பட்டிருந்தால், பிறப்புச் சான்றிதழின் பிரதி  அனுப்பப்படுவதுடன் பிறப்பு பதியப்படாதிருந்தால் அது பற்றி தெரிவித்து கடிதம்  அனுப்பப்படும்.

பிறப்புச்சான்றிதழை மொழிமாற்றம் செய்தல்

படிப்படியான வழிமுறைகள்:

படி 1: விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை பெறுதல் (மொழிபெயர்க்கப்பட்ட பிரதியின் விண்ணப்பம்)
படி 2: பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் இணைப்பு ஆவணங்களையும் சேர்த்து தலைமை பதிவாளர் திணைக்களத்திலுள்ள தலைமை கருமபீடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
படி 3: அதிகார பூர்வ மொழிப்பெயர்ப்பாளருக்கு ஆவணங்களை அனுப்புதல்
படி 4: மொழிபெயர்ப்புக்கான செயல்பாடு நடப்பதற்கு கிட்டதட்ட 3 நாட்களாகும்.
படி 5: மொழிப்பெயர்ப்பை அஞ்சல் மூலமாகவோ அல்லது அந்த நபரிடம் நேரடியாகவோ விண்ணப்பதாரருக்கு வழங்குதல்.

தகுதி:

உண்மையான பிறப்புச்சான்றிதழ் பிரதிகளை மாற்றியமைக்க விரும்பும் விண்ணப்பதாரர் இந்த சேவையை பெற தகுதியானவர்களாவர்.

சமர்ப்பிக்கும் முறைகள்:

அனைத்து விண்ணப்பங்களும் தலைமைப்பதிவாளர் காரியாலத்தின் கரும்பீடத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பபடிவம்:

விண்ணப்பபடிவம் பிறப்புச்சான்றிதழ் மொழி பெயர்ப்புக்குரிய விண்ணப்பம்.

காலக்கேடு:

செயல்முறை காலக்கோடு: 3 நாட்கள்

சமர்ப்பிக்க வேண்டிய காலக்கேடு: 

வேலை நாட்கள் - திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
திறந்திருக்கும் நேரம் - மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை
விடுமுறை நாட்கள் - அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்

ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கேடு: தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்படும்.

சேவைத் தொடர்பான கட்டணங்கள்:

 • விண்ணப்பம் பெறுவதற்கான செலவீனம்: விண்ணப்பங்கள் கட்டணமின்றி இலவசமாக வழங்குதல்.
 • கட்டணம்: ஒரு சான்றிதழ் மற்றும் ஒரு மொழிக்கு ருபா 70.00
 • அபராதம்: அபராதங்கள் எதுவும் உள்ளடங்கவில்லை.
 • இதரக்கட்டணம்: இதரக்கட்டணங்கள் எதுவும் இல்லை.


தேவையான இணைப்பு ஆவணங்கள்:

உண்மையான மொழிபெயர்க்கப்பட வேண்டிய பிறப்புச்சான்றிதழ்.

சேவைக்கான பொறுப்புக் குழு:

மொழிப்பெயர்ப்பாளர்

சிறப்பு வரையறைகள்:

இந்த சேவையில் சிறப்பு வரையறைகள் எதுவும் இல்லை.முகவரி

தலைமை பதிவாளர் திணைக்களம்

234/A3,
டென்சில் கொப்பேகடுவ மாவத்தை,
பத்தரமுல்ல,
இலங்கை.

தொடர்புகளுக்கு
+94 112 889 488 - 489

மின்னஞ்சல்
info@rgd.gov.lk