விவாகம் (பொது) பதிவு செய்தல்
- திறத்தார் இருவரும் முஸ்லிம்கள் அல்லாத விடத்து ஏனைய அனைவருக்கும் விவாகம் (பொது) பதிவு செய்தல் கட்ளைச் சட்டத்தின் கீழ் விவாகம் செய்ய முடியும்.
- விவாக அறிவித்தல் பிரதிகள் இரண்டில் எழுதி உறுதிப்படுத்தி பிரிவின் விவாக பதிவாளரிடம் சமர்ப்பிக்கவும்.
- அறிவித்திலினை உறுதிப்படுத்துவதற்கு தகுதி வாய்ந்த நபர்கள்;
- பிரிவின் விவாகப் பதிவாளர்கள்
- சமாதான நீதவான்
- பிரதேசத்தின் நொத்தாரிசுமார்
- மதகுருவானவர்
- விவாக அறிவித்தலினை சமர்ப்பிப்பதற்காக பூரணப்படுத்தப்பட வேண்டிய தேவைகள்
- திறத்தார் உரிய பிரிவில் வதிவு சம்பந்தமான தேவையினை பூர்த்தி செய்தல்
- விவாக அறிவித்தல் சமர்ப்பிக்கும் முன் முற்பட்ட 10 நாட்களுக்குள் திறத்தார் பிரிவில் வசித்தல்.
- விவாக அறிவித்தல் சமர்ப்பிக்கும் முன் முற்பட்ட 10 நாட்களுக்குள் திறத்தார் ஓரே பிரிவில் அல்லாது வெவ்வேறு பிரிவில் வசித்தல்.
- திறத்தாரில் ஒருவர் விவாக அறிவித்தல் கொடுக்கு முன் முற்பட்ட 10 நாட்களுக்குள் இலங்கைக்குள் வதியாது மற்றைய திறத்தார் 10 நாட்கள் இலங்கையில் வசித்தல்.
- இருவரில் ஒருவராவது விவாக அறிவித்தல் சமர்ப்பிக்கும் முன் முற்பட்ட 10 நாட்களுக்குள் இலங்கையில் வதியாது, ஒரு திறத்தார் 04 நாட்கள் இலங்கையில் வசித்தல்.
- திறத்தார் இருவரும் முந்திய பிறந்த தினத்தில் 18 வயதினை பூர்த்தி செய்திருத்தல்.
- அவர்கள் திருமணம் புரிவதற்கு தடை செய்யப்பட்ட உறவினை கொண்டிருக்கவில்லை என்பது,
- அச்சமயம் செல்லுப்படியாகும் விவாகத்தினை கொண்டிருக்கவில்லை என்பது.
- திறத்தார் உரிய பிரிவில் வதிவு சம்பந்தமான தேவையினை பூர்த்தி செய்தல்
- விவாகம் (பொது) பதிவு செய்வதற்காக அறிவித்தல் கொடுத்து 14 நாட்கள் செல்லுப்படியாக வேண்டும். அவ்வாறு 14 நாட்கள் கழியும் முன் விவாகம் (பொது) பதிவு செய்வதற்கு இயலும்.
- அலுவலகத்திற்கு வெளியில் விவாகத்தினை பதிவு செய்வதற்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
- விவாகத்தினை பதிவு செய்யும் போது பதிவாளருக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணங்கள்.
இல | கடமை | யாருக்கு செலுத்துவது | யார் செலுத்துவது | தொகை | கொடுப்பனவு வகை | |
1 | பதிவாளர் அலுவலகத்தில் அல்லது வேறு இடத்தில் விவாகம் செய்துகொள்வதை அறிவித்தல் | பதிவாளர் | விண்ணப்பதாரர் | 100.00 | காசு | |
2 | மேலதிக பதிவாளர் அலுவலகத்தில் அல்லது வேறு இடத்தில் விவாகம் செய்துகொள்வதை அறிவித்தல் | மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர் | விண்ணப்பதாரர் | 100.00 | காசு | |
3 | அறிவிக்கப்பட்ட திருமணத்திற்கு பதிவாளரின் சான்றிதழை வழங்குதல் | பதிவாளர் | திருமண தரப்பினர் | 100.00 | காசு | |
4 | அறிவிக்கப்பட்ட திருமணத்திற்கு பதிவாளரின் சான்றிதழை வழங்குதல் | மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர் | திருமண தரப்பினர் | 100.00 | காசு | |
5 | பதிவாளர் அலுவலகத்தில் மணச்சடங்கு நிறைவேற்றல் | பதிவாளர் | திருமண தரப்பினர் | 750.00 | காசு | |
6 | மேலதிக மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் அல்லது மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் மணச்சடங்கு நிறைவேற்றல் | மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர் | திருமண தரப்பினர் | 750.00 | காசு | |
7 | (1) அல்லது 38(2) பிரிவின் கீழ் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியில் மணச்சடங்கு நிறைவேற்றல் | பதிவாளர் |
|
750.00 | காசு | |
--- | --- | --- | காசு | |||
8 | 38(1) அல்லது 38(2) பிரிவின் கீழ் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியில் மணச்சடங்கு நிறைவேற்றல் | மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர் | அரசாங்கம் | 750.00 | காசு | |
9 | 27(3)ஆம் பிரிவின் கீழ் விசேட அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளுதல் | அரசாங்கம் | திருமண தரப்பினர் | 100.00 | காசு | |
10 | பதிவுசெய்யப்பட்ட பொது வணக்கஸ்தலத்தில் மணச்சடங்கு நிறைவேற்றல் | மாவட்ட பதிவாளர் | திருமண தரப்பினர் | 750.00 | காசு |
மதகுருவானவரினால் நடாத்தப்படும் விவாகம்
- கிருஸ்தவர்களின் விவாகம் தேவஸ்தானங்களுக்குள் நடாத்த வழி வகுக்கப்பட்டுள்ளது.
- விவாக அறிவித்தல் இரு பிரதிகளில் எழுதி உறுதிப்படுத்தி பிரிவின் விவாக பதிவாளரிடம் சமர்ப்பிக்கவும்.
- அறிவித்திலினை உறுதிப்படுத்துவதற்கு தகுதி வாய்ந்த நபர்கள்
- பிரிவின் விவாகப் பதிவாளர்கள்
- சமாதான நீதவான்
- பிரதேசத்தின் நொத்தாரிசுமார்
- மதகுருவானவர்
- விவாக அறிவித்தலினை சமர்ப்பிப்பதற்காக பூரணப்படுத்தப்பட வேண்டிய தேவைகள்
- திறத்தார் உரிய பிரிவில் வதிவு சம்பந்தமான தேவையினை பூர்த்தி செய்தல்
- விவாக அறிவித்தல் சமர்ப்பிக்கும் முன் முற்பட்ட 10 நாட்களுக்குள் திறத்தார் பிரிவில் வசித்தல்.
- விவாக அறிவித்தல் சமர்ப்பிக்கும் முன் முற்பட்ட 10 நாட்களுக்குள் திறத்தார் ஓரே பிரிவில் அல்லாது வெவ்வேறு பிரிவில் வசித்தல்.
- திறத்தாரில் ஒருவர் விவாக அறிவித்தல் கொடுக்கு முன் முற்பட்ட 10 நாட்களுக்குள் இலங்கைக்குள் வதியாது மற்றைய திறத்தார் 10 நாட்கள் இலங்கையில் வசித்தல்.
- இருவரில் ஒருவராவது விவாக அறிவித்தல் சமர்ப்பிக்கும் முன் முற்பட்ட 10 நாட்களுக்குள் இலங்கையில் வதியாது, ஒரு திறத்தார் 04 நாட்கள் இலங்கையில் வசித்தல்.
- திறத்தார் இருவரும் முந்திய பிறந்த தினத்தில் 18 வயதினை பூர்த்தி செய்திருத்தல்.
- அவர்கள் விவாகம் புரிவதற்கு தடை செய்யப்பட்ட உறவினை கொண்டிருக்கவில்லை என்பது
- அச்சமயம் செல்லுப்படியாகும் விவாகத்தினை கொண்டிருக்கவில்லை என்பது
- திறத்தார் உரிய பிரிவில் வதிவு சம்பந்தமான தேவையினை பூர்த்தி செய்தல்
- பதிவாளர் அல்லது மேலதிக மாவட்ட பதிவாளரிடம் “பதிவாளரின் சான்றிதழ்” இனை பெற்றுக் கொள்ளவும்.
- அவ் பதிவாளரின் சான்றிதழ் விவாகம் நிறைவேற்றப்படும் தேவஸ்தானத்தின் மதகுருவிடம் ஒப்படைக்குக. அத்துடன் இரத்துச்செய்யப்படாத ரூபா 25.0 பெறுமதியான முத்திரையினை வழங்குக.
கண்டியன் விவாகங்களை பதிவு செய்தல்
- படி 1: பதிவு விவாகத்திற்கு முன்பே விவாக பதிவாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
- படி 2: விண்ணப்பதாரர் விவாக பதிவாளரை சந்தித்தல்-விவாக பதிவாளர் விண்ணப்பதாரரை சந்தித்தல்.
- படி 3: விண்ணப்பதாரரின் வயது வரம்பை சரிபார்த்தல் (தேசிய அடையாள அட்டை அல்லது பிறந்தசான்றிதழ் கொடுத்தல்)
- படி 4: விண்ணப்பதாரர்கள் கைகளை மற்றும் விவாகத்திற்கான சத்தியபிராமனத்தை திரும்பக்கூறுதல் வேண்டும்.
- படி 5: பதிவாளர் விண்ணப்பதாரரின் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்வார்.
- படி 6: சாட்சியாளர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தில் கையொப்பம் இடுவார்கள்.
- படி 7: விவாக சான்றிதழ் விண்ணப்பதாரர் பெறுதல்.
தகுதி:
கீழ் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் படி விண்ணப்பதாரர்கள் இந்த சேவையைப் பெறலாம்,
- விண்ணப்பதாரரின் வயது பதினெட்டு அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் இருவரும் இஸ்லாமியராக இருக்ககூடாது.
- விண்ணப்பதாரர்கள் பாரம்பரிய கண்டியன் பிரிவினை சார்ந்தவராக இருக்க வேண்டும். (எடுத்துக்காட்டாக நுவரெலியா, மாத்தளை, கண்டி, அநுராதபுரம், பொலநறுவை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, மொனராகல, தெற்கு-வவுனியா)
சமர்ப்பிக்கும் முறைகள்:
விண்ணப்பதாரர் அந்த வட்டார விவாகப் பதிவாளரிடம் விவாகம் நடப்பதற்கான தகவலை முன்கூட்டியே தெரிவித்து விவாகத்தை பதிவு செய்வதற்கான முன் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
விண்ணப்பப்படிவம்:
காலக்கேடு:
- செயல்முறை காலக்கேடு: ஒரு நாளுக்குள்
- சமர்ப்பிக்க வேண்டிய காலக்கேடு: குறிப்பிட்ட காலக்கோடு இல்லை.
- ஏற்றுக்கொள்ள கூடிய காலக்கேடு: தொடர்ந்து ஏற்றுக் கொள்ளப்படும்.
சேவை தொடர்பான கட்டணங்கள்:
- செலவினத்துக்குரிய விண்ணப்பத்தை பெறுதல்: விண்ணப்பத்தை கட்டணம் இன்றி இலவலசமாக வழங்குதல்.
- கட்டணம்: சேவை கட்டணம் இன்றி இலவசமாக வழங்கப்படும்.
- அபராதம்: அபராதம் எதுவும் இல்லை.
- இதர கட்டணம்: இதர கட்டணம் எதுவும் இல்லை.
தேவையான இணைப்பு ஆவணங்கள்:
- பிறந்தசான்றிதழ் மற்றும் விண்ணப்பதாரரின் தேசிய அடையாள அட்டை.
சிறப்பு வரையறைகள்:
- இந்த சேவையில் சிறப்பு வரையறைகள் எதுவும் இல்லை.
விவாக சான்றிதழில் பிழைகளைத் திருத்துதல்
விவாக சான்றிதழில் பிழைகளைத் திருத்துதல் (பொது)
- பதிவின்போது நிகழ்ந்த பிழைகளைத் திருத்துவதற்கு விவாக தரப்பு நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க விடுக்க வேண்டும்.
- சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்,
- விவாக சான்றிதழ்
- குறித்த தகவல்களை நிரூபிப்பதற்கு ஆவணங்களைச் சமர்ப்பித்தல்
- விவாகம் செய்து கொண்ட தரப்பினர் குடியிருக்கின்ற பிரதேசத்திற்குரிய மாவட்ட நீதிமன்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விவாக சான்றிதழில் உள்ள பிழைகளைத் திருத்தல் (கண்டிய)
- பதிவின்போது நிகழ்ந்த பிழைகளைத் திருத்துவதற்கு விவாக தரப்பு கோரிக்கை விண்ணப்பிக்க முடியும்.
- விவாகம் பதிவுசெய்யப்பட்ட பிரதேசத்திற்கு உரிய பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
- சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்,
- விவாக சான்றிதழ்
- செய்த பிழையையும் திருத்த வேண்டிய தகவலையும் உள்ளடக்கிய சத்திய கடதாசி
- குறித்த தகவல்களை நிரூபிப்பதற்கான ஏனைய ஆவணங்கள்
மொழிபெயர்ப்பு மற்றும் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை பெறல்
விவாக சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்
- விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ள முடிவது விவாகம் நிகழ்ந்த பிரதேசத்திற்குரிய பிரதேச செயலகத்தில் ஆகும்.
- தேவையான விண்ணப்பப்படிவம் எந்தவொரு பிரதேச செயலக்தின் மாவட்ட பதிவக பிரிவில் பெற்றுக்கொள்ள முடியும்.
- அறவிடப்படும் கட்டணங்கள்
- விவாகச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட பிரிவு மற்றும் பதிவு திகதி தெரியுமாயின் ரூபா.120.00
- பதிவு செய்யப்பட்ட பிரிவு தெரியுமாயின் மற்றும் விவாகச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவுத்திகதி தெரியாவிடின்
- 03 மாதங்கட்கு உட்பட்ட ஆவண தேடுதலுக்காக ரூபா. 120.00
- 02 வருடங்கட்கு உட்பட்ட ஆவண தேடுதலுக்காக ரூபா. 250.00
- தேவையான கட்டணங்கள் முத்திரை மூலம் விண்ணப்பப் படிவத்தில் ஒட்டவும்.
- பூரணப்படித்தப்பட்ட விண்ணப்பப் படிவங்களைளை உரிய பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கவும்.
- விவாகச் சான்றிதழினை தபால் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் விலாசம் எழுதிய முத்திரை ஒட்டப்பட்ட தபாலுறையினை விண்ணப்ப படிவத்துடன் சமர்ப்பிக்கவும்.
விவாக சான்றிதழை மொழிமாற்றம் செய்தல்
படிப்படியான வழிமுறைகள்:
- படி 1: விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை பெறுதல் (மொழிபெயர்க்கப்பட்ட பிரதியின் விண்ணப்பம்)
- படி 2: பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் இணைப்பு ஆவணங்களையும் சேர்த்து தலைமை பதிவாளர் திணைக்களத்திலுள்ள தலைமை கருமபீடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
- படி 3: அதிகார பூர்வ மொழிப்பெயர்ப்பாளருக்கு ஆவணங்களை அனுப்புதல்.
- படி 4: மொழிபெயர்ப்புக்கான செயல்பாடு நடப்பதற்கு கிட்டதட்ட 3 நாட்களாகும்.
- படி 5: மொழிப்பெயர்ப்பை அஞ்சல் மூலமாகவோ அல்லது அந்த நபரிடம் நேரடியாகவோ விண்ணப்பதாரருக்கு வழங்குதல்.
தகுதி:
உண்மையான விவாக சான்றிதழ் பிரதிகளை மாற்றியமைக்க விரும்பும் விண்ணப்பதாரர் இந்த சேவையை பெற தகுதியானவர்களாவர்.
சமர்ப்பிக்கும் முறைகள்:
அனைத்து விண்ணப்பங்களும் தலைமைப்பதிவாளர் காரியாலத்தின் கரும்பீடத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பபடிவம்:
விண்ணப்பபடிவம் விவாக சான்றிதழ் மொழி பெயர்ப்புக்குரிய விண்ணப்பம்.
காலக்கேடு:
- செயல்முறை காலக்கோடு: 3 நாட்கள்
- சமர்ப்பிக்க வேண்டிய காலக்கேடு:
- வேலை நாட்கள் - திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
- திறந்திருக்கும் நேரம் - மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை
- விடுமுறை நாட்கள் -அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
- ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கேடு: தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்படும்.
சேவைத் தொடர்பான கட்டணங்கள்:
- விண்ணப்பம் பெறுவதற்கான செலவீனம்: விண்ணப்பங்கள் கட்டணமின்றி இலவசமாக வழங்குதல்.
- கட்டணம்: ஒரு சான்றிதழ் மற்றும் ஒரு மொழிக்கு ருபா 70.00
- அபராதம்: அபராதங்கள் எதுவும் உள்ளடங்கவில்லை.
- இதரக்கட்டணம்: இதரக்கட்டணங்கள் எதுவும் இல்லை.
தேவையான இணைப்பு ஆவணங்கள்:
உண்மையான மொழிபெயர்க்கப்பட வேண்டிய விவாக சான்றிதழ்
சேவைக்கான பொறுப்புக் குழு:
மொழிப்பெயர்ப்பாளர்
சிறப்பு வரையறைகள்:
இந்த சேவையில் சிறப்பு வரையறைகள் எதுவும் இல்லை.
பொது விவாக கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட விவாகத்தை இரத்துச்செய்தல்
இது நீதிமன்றத்தின் நடவடிக்கை. ஆலோசனைபெற சட்டத்தரணியொருவருடன் தொடர்புகொள்ளவும்.
கண்டியர் விவாகத்தை இரத்துச்செய்தல்
- விண்ணப்பங்களை பின்வருவோருக்கு சமர்ப்பிக்க வேண்டும்,
- விண்ணப்பதாரர் கண்டி மாகாணத்தில் வதிபவராக இருந்தால், விண்ணப்பதாரர் குடியிருக்கின்ற பிரதேசத்திற்கு உரிய பிரதேச செயலகத்தின் மாவட்ட பதிவாளருக்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் கண்டி மாகாணத்திற்கு வெளியில் வதிபவராக இருந்தால், விண்ணப்பதாரர் குடியிருக்கின்ற பிரதேசத்திற்கு உரிய பிரதேச செயலகத்தின் மாவட்ட பதிவாளருக்கு அல்லது விவாகம் பதிவுசெய்யப்பட்ட இடத்தில் உள்ள பதிவாளருக்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- விவாக இரத்தை அறிவித்து மாவட்ட பதிவாளரிடம் குறித்த விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்க.
- சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
- சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட வெளிப்படுத்தல்
- விவாக சான்றிதழ் (கண்டியர்)
- முறைப்பாட்டை நிரூபிப்பதற்கான ஏனைய ஆவணங்கள் இருந்தால்
- மாவட்ட பதிவாளர் இருதரப்பினரையும் விசாரணைக்காக அழைப்பார்.
- சமர்ப்பிக்கப்பட்ட விவாகம் தொடர்பான விண்ணப்பம் தொடர்பில் முடிவை வழங்குவார் அல்லது அத்தகைய விவாகம் தொடர்பில் முடிவை வழங்க மறுப்பார்.
- ஒரு தரப்பு அந்த முடிவில் திருப்தியடையாவிட்டால், 30 நாட்களுக்குள் மாவட்ட பதிவாளருக்கு விண்ணப்பிக்க முடியும்.
- மாவட்ட பதிவாளர் மாவட்ட நீதிமன்றத்திற்கு மேன்முறையீட்டை சமர்ப்பித்து மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் செயலாற்றுவார்.