வீட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்

 • இறப்பு நிகழ்ந்து 07 நாட்களுக்குள் கிராம அதிகாரிக்கு அறிவிக்கவும்.
 • கிராம அதிகாரியினால் இறப்பு பற்றிய அறிக்கை பிரதேச பதிவாளருக்கு அறிவிக்கப்படும்.
 • இறப்பு பதியப்படுவது பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளாரினால் ஆகும். பிரதிக்கினை பதிவாளரிடம் பெற்றுக்கொள்ள முடியும்.
 • தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்.
  • இறப்பு நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த நெருங்கிய உறவினர்
  • இறுதியாக நோய்வாய்பட்டிருந்த பொழுது பராமரித்த நெருங்கிய உறவினர்
  • அவ்வாறான உறவினர் இல்லாவிடில்
   • இறந்த நபர் வசித்த பதிவாளர் பிரிவினுள் வதிந்த இறந்த நபரின் உறவினர் ,
  • அவ்வாறான உறவினர் இல்லாவிடில்
   • இறப்பு நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த நபர்
   • இறப்பு நிகழ்ந்த வீட்டில் வசிப்போர்
  • மேற்கூறப்பட்ட நபர்கள் இல்லாவிடில்
   • பிரேதத்தை அடக்கம் செய்வதற்கு, தகனம் செய்வதற்கு அல்லது வேறு  விதத்தில் அது பற்றி இறுதியடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும் நபர்
 • இறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குள் இறப்பினை இலவசமாக பதிவு செய்துக்கொள்ள முடியும். இறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்கு பின் இறப்பினை பதிவுசெய்துக்கொள்ள முடிவதுடன் அதற்காக காலங்கடந்த இறப்பினை பதிவு செய்தல் விபரத்தினை பார்க்க.
 • தகவல் அளிப்பவருக்கு இலவசமாக இறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.

கிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்

 • இறப்பு பதியப்படுவது இறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளாரினால் ஆகும். இறப்பு நிகழ்ந்தது கிராமிய வைத்திய சாலையிலாயின், அப்பிரதேசத்தில் உள்ள பதிவாளருக்கு இறப்பினை பதிவுசெய்வதற்கு அறிவிக்கவும்.
 • இறப்பினை பதிவு செய்வதற்காக தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்.
  • இறப்பு நிகழ்ந்த நேரத்தில் அங்கிருந்த நபர்
  • இறப்பு நிகழ்ந்த நேரத்தில் பராமரித்த நபர்
  • வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி
 • இறப்பினை அறிவிப்பதற்கான பிரதிக்கினையினை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் பெற்றுக்கொள்ளவும்.
 • சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்,
  • சரியாக பூரணப்படுத்தப்பட்ட பிரதிக்கினை.
  • இறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு வைத்திய சாலையினால் வழங்கப்பட்ட அறிக்கை.
 • இறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குள் இறப்பினை இலவசமாக பதிவு செய்துக்கொள்ள முடியும்.
 • தகவல் அளிப்பவருக்கு இலவசமாக இறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.
 • மேலதிக தகவல்கள் தேவையாயின் அருகில் உள்ள பிதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரனை சந்திக்கவும்.

பொது வைத்திய சாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்

 • பிறப்பினை  பதிவு செய்வதற்காக பிறப்பு நிகழ்ந்த பொது வைத்திய சாலையில் உள்ள பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்யும் பதிவாளருக்கு அறிவிக்கவும்.
 • இறப்பினை பதிவு செய்வதற்காக தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்.
  • இறப்பு நிகழ்ந்த நேரத்தில் அங்கிருந்த நபர்
  • இறப்பு நிகழ்ந்த நேரத்தில் பராமரித்த நபர்
  • வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி
 • இறப்பினை அறிவிப்பதற்கான பிரதிக்கினையினை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் பெற்றுக்கொள்ளவும்.
 • சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்,
  • சரியாக பூரணப்படுத்தப்பட்ட பிரதிக்கினை
  • இறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு வைத்திய சாலையினால் வழங்கப்பட்ட அறிக்கை
 • இறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குள் இறப்பினை இலவசமாக பதிவு செய்துக்கொள்ள முடியும்.
 • தகவல் அளிப்பவருக்கு இலவசமாக இறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.

வெளிநாடொன்றில் நிகழ்ந்த இறப்பினை பதிவுசெய்தல்

 • மரணம் நிகழ்ந்த நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு/உயர் ஸ்தானிகருக்கு அறிவித்தல்.
 • மரணத்தை அறிவிக்க வேண்டிய நபர்கள்,
  • இறந்த நபரின் உறவினர்கள்
  • மரணத்தின்போது சமூகமளித்திருந்த நபர்
 • சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
  • இறந்த நபரின் கடவுச்சீட்டின் ஒரு பிரதி
  • அந்த நாட்டில் வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ்
  • இலங்கையில் தகனம்செய்வதாக இருந்தால் போக்குவரத்து செலவுகள்
  • வெளிவிவகார அமைச்சினால் வழங்கப்பட்ட கடிதம் (இலங்கையில் தகனம் செய்வதாக இருந்தால்)
 • இலங்கை தூதரால்/உயர் ஸ்தானிகரால் மரணம் பதிவுசெய்யப்படுகிறது. அத்துடன் அந்த நாட்டின் இலங்கை தூதரகத்தினால்/உயர் ஸ்தானிகர் அலுவலகத்தினால் பரிந்துரைக்கப்படுகின்ற கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
 • இலங்கை தூதரால்/உயர் ஸ்தானிகரால் தகவல் அளித்தவருக்கு இலவசமாக இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

தனியார் வைத்தியசாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்

 • இறப்பு பதியப்படுவது பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளாரினால் ஆகும். பிறப்பு நிகழ்ந்தது தனியார் வைத்திய சாலையிலாயின், அப்பிரதேசத்தில் உள்ள பதிவாளருக்கு இறப்பினை பதிவுசெய்வதற்கு அறிவிக்கவும்.
 • இறப்பினை பதிவு செய்வதற்காக தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்,
  • இறப்பு நிகழ்ந்த நேரத்தில் அங்கிருந்த நபர்
  • இறப்பு நிகழ்ந்த நேரத்தில் பராமரித்த நபர்
  • வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி
 • இறப்பினை அறிவிப்பதற்கான பிரதிக்கினையினை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் பெற்றுக்கொள்ளவும்.
 • சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்,
  • சரியாக பூரணப்படுத்தப்பட்ட பிரதிக்கினை.
  • இறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு வைத்திய சாலையினால் வழங்கப்பட்ட அறிக்கை.
 • இறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குள் இறப்பினை இலவசமாக பதிவு செய்துக்கொள்ள முடியும்.
 • தகவல் அளிப்பவருக்கு இலவசமாக இறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.
 • மேலதிக தகவல்கள் தேவையாயின் அருகில் உள்ள பிதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரனை சந்திக்கவும்.

பதிவுசெய்யப்பட்ட தோட்டத்தில் நிகழ்ந்த இறப்பை பதிவுசெய்தல்

 • இறப்பு நிகழந்து 24 மணித்தியாலங்களுக்குள் தோட்ட அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும்.
 • மரணத்தை அறிவிக்க வேண்டிய நபர்கள்,
  • இறந்த நபரின் உறவினர்கள்
  • மரணத்தின்போது சமூகமளித்திருந்த நபர்
  • இறப்பு நிகழ்ந்தபோது அந்த கட்டிடத்தில் தங்கியிருந்தவர்
  • தகனக் கிரியைகளின்போது ஈடுபட்ட நபர்களில் ஒருவர்
 • சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்,
  • இறந்த நபரின் மருத்துவ சான்றிதழ் ஏதேனும் இருந்தால்
  • இறந்த நபரின் சிகிச்சை நிலைய சான்றிதழ் ஏதேனும் இருந்தால்
 • இறப்பு பதிவுசெய்யப்படும். அத்துடன் விண்ணப்பம் தோட்ட அதிகாரியால் சான்றுப்படுத்தப்பட்டு மாவட்ட மருத்துவ அதிகாரி ஊடாக பிரதேச செயலகத்திற்கு அனுப்பப்படும்.
 • இறப்பு மாவட்ட பதிவாளரால் பதிவுசெய்யப்பட்டு மரண சான்றிதழ் தோட்ட அதிகாரிக்கு அனுப்பிவைக்கப்படும்.
 • தகவல் அளித்தவர் மரண சான்றிதழை தோட்ட அதிகாரியிடமிருந்து இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

பதிவுசெய்யப்படாத இறப்பு பதிவு

காலங்கடந்த இறப்பினை பதிவு செய்தல்

 • இறப்பு நிகழ்ந்து மூன்று மாதங்களுக்குள் பதிவு செய்யப்படா விடில் அவ்வாறான இறப்பினை பதிவு செய்துக் கொள்ள முடியும்.
 • அப்பிரதிக்கினை செய்யப்பட்டிருக்குமாயின் அதில் குறிப்பிடப்பட்ட இறப்பு நிகழ்ந்து 25 வருடத்திற்கு மேற்படாத காலங்களுக்குள்ளாயின் மட்டும் இறப்பு பதிவு செய்யப்பட முடியும்.
 • பிரதிக்கினையினை இறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிரதேசச் செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரிடம் சமர்ப்பிக்கவும்.
 • பிரதிக்கினையினை சமர்ப்பிக்க கூடிய நபர்,
  • இறப்பு நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த அல்லது இறந்த நபர் இறுதியாக நோய்வாய்ப்பட்டிருந்த போது அவரை பராமரித்த நெருங்கிய உறவினர்.
  • ஆர்வம் உள்ள வேறு நபர்
 • பிரதிக்கினையில் ஒட்டப்படவேண்டிய முத்திரை,
  • இறப்பு நிகழ்ந்து 12 மாதங்களுக்கு உள்ளாயின் - ரூபா 1.00
  • இறப்பு நிகழ்ந்து 12 மாதங்களுக்கு மேலாயின் - ரூபா 5.00

இறப்புச்சான்றிதழில் உட்புகுத்தப்பட்ட விபரங்களை திருத்தியமைத்தல்

 • பிரதிக்கினையினை இறப்பு நிகழ்ந்த இடத்தின் பிரதேசச் செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரிடம் சமர்ப்பிக்கவும்.
 • பிரதிக்கினையினை சமர்ப்பிப்பது கீழ் காணப்படும் நபர்களில் ஒருவரினால் ஆகும்.
  • சம்பவத்தினை பதிவு செய்வதற்காக தகவல் அளித்த நபர்
  • காரணம் பற்றிய உண்மையினை தெரிந்த நம்பிக்கையான நபர்
 • இறப்புச்சான்றிதழில் பதிவுசெய்யப்பட்ட திகதியினை தவிர ஏனைய அனைத்து  தகவல்களையும் திருத்திமைக்க முடியும்.
 • பிரதிக்கினைக்கு வழங்கப்படவேண்டிய முத்திரைக்கட்டணம் 5.00 ஆகும்.
 • பிரதிக்கினையுடன் பிரதிக்கனை மூலம் செய்யப்படும் விண்ணப்பத்தின் உறுதிதன்மையினை பேணுவதற்கான எழுத்து மூல சாட்சியங்களை சமர்ப்பிக்குக.

காணாமல் போனோரின் பதிவு

This page is under construction

மொழிபெயர்ப்பு மற்றும் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை பெறல்

இறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்

 • இறப்புச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ள முடிவது இறப்பு நிகழ்ந்த பிரதேசத்திற்குரிய பிரதேச செயலகத்தில் ஆகும்.
 • தேவையான விண்ணப்பப் படிவம் ஏதாவது ஒரு பிரதேச செயலக்தின் மாவட்ட பதிவக பிரிவில் பெற்றுக்கொள்ள முடியும்.
 • அறவிடப்படும் கட்டணங்கள்,
  • இறப்புச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட திகதி தெரியுமாயின் ரூபா.120.00
  • இறப்புச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட திகதி தெரியாவிடின்,
   • 03 மாதங்கட்கு உட்பட்ட ஆவண தேடுதலுக்காக ரூபா. 120.00
   • 02 வருடங்கட்கு உட்பட்ட ஆவண தேடுதலுக்காக ரூபா. 250.00
 • தேவையான கட்டணங்கள் முத்திரை மூலம் விண்ணப்பப் படிவத்தில் ஒட்டவும்.
 • பூரணப்படித்தப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் உரிய பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கவும்.
 • இறப்புச் சான்றிதழினை தபால் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் விலாசம் எழுதிய முத்திரை ஒட்டப்பட்ட தபாலுறையினை விண்ணப்ப படிவத்துடன் சமர்ப்பிக்கவும்.
 • இறப்பு பதியப்பட்டிருந்தால், இறப்புச் சான்றிதழி அனுப்பப்படிவதுடன் இறப்பு பதியப்படாதிருந்தால் அது பற்றி தெரிவித்து கடிதம் அனுப்பப்படும்.

இறப்புச்சான்றிதழை மொழிமாற்றம் செய்தல்

படிப்படியான வழிமுறைகள்:

 • படி 1: விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை பெறுதல் (மொழிபெயர்க்கப்பட்ட பிரதியின் விண்ணப்பம்)
 • படி 2: பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் இணைப்பு ஆவணங்களையும் சேர்த்து தலைமை பதிவாளர் திணைக்களத்திலுள்ள தலைமை கருமபீடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
 • படி 3: அதிகார பூர்வ மொழிப்பெயர்ப்பாளருக்கு ஆவணங்களை அனுப்புதல்
 • படி 4: மொழிபெயர்ப்புக்கான செயல்பாடு நடப்பதற்கு கிட்டதட்ட 3 நாட்களாகும்.
 • படி 5: மொழிப்பெயர்ப்பை அஞ்சல் மூலமாகவோ அல்லது அந்த நபரிடம் நேரடியாகவோ விண்ணப்பதாரருக்கு வழங்குதல்.

தகுதி:

உண்மையான இறப்புச்சான்றிதழ் பிரதிகளை மாற்றியமைக்க விரும்பும் விண்ணப்பதாரர் இந்த சேவையை பெற தகுதியானவர்களாவர்.

சமர்ப்பிக்கும் முறைகள்:

அனைத்து விண்ணப்பங்களும் தலைமைப்பதிவாளர் காரியாலத்தின் கரும்பீடத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பபடிவம்:

விண்ணப்பபடிவம் இறப்புச்சான்றிதழ் மொழி பெயர்ப்புக்குரிய விண்ணப்பம்.

காலக்கேடு:

 • செயல்முறை காலக்கோடு: 3 நாட்கள்
 • சமர்ப்பிக்க வேண்டிய காலக்கேடு: 
  • வேலை நாட்கள் - திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை
  • திறந்திருக்கும் நேரம் - மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை
  • விடுமுறை நாட்கள் - அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்
 • ஏற்றுக்கொள்ளக் கூடிய காலக்கேடு: தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்படும்.

சேவைத் தொடர்பான கட்டணங்கள்:

 • விண்ணப்பம் பெறுவதற்கான செலவீனம்: விண்ணப்பங்கள் கட்டணமின்றி இலவசமாக வழங்குதல்.
 • கட்டணம்: ஒரு சான்றிதழ் மற்றும் ஒரு மொழிக்கு ருபா 70.00
 • அபராதம்: அபராதங்கள் எதுவும் உள்ளடங்கவில்லை.
 • இதரக்கட்டணம்: இதரக்கட்டணங்கள் எதுவும் இல்லை.

தேவையான இணைப்பு ஆவணங்கள்:

உண்மையான மொழிபெயர்க்கப்பட வேண்டிய இறப்புச்சான்றிதழ்

சேவைக்கான பொறுப்புக் குழு:

மொழிப்பெயர்ப்பாளர்

சிறப்பு வரையறைகள்:

இந்த சேவையில் சிறப்பு வரையறைகள் எதுவும் இல்லை.

முகவரி

தலைமை பதிவாளர் திணைக்களம்

234/A3,
டென்சில் கொப்பேகடுவ மாவத்தை,
பத்தரமுல்ல,
இலங்கை.

தொடர்புகளுக்கு
+94 112 889 488 - 489

மின்னஞ்சல்
info@rgd.gov.lk