தொலைநோக்கு

பதிவுசெய்வதன்மூலம் பொதுமக்களுக்கு அவர்களுடைய உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்கு உதவுதல்.

செயற்பணி

எமது செயற்பணி அசையும் மற்றும் அசையா சொத்துக்ககள் சம்பந்தப்பட்ட சட்ட ஆவணங்களைப் பதிவுசெய்தல், இலங்கையின் உரித்துகளைப் பதிவுசெய்தல், விவாகம், பிறப்பு, இறப்பு என்பவற்றைப் பதிவுசெய்தல், பொதுமக்களின் முதன்மை மனை நிகழ்வுகளையும் அத்தகையை ஆவணங்களையும் பாதுகாத்தல், தேவைப்படும்போது அவற்றின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை வழங்குதல் மற்றும் இத்தகைய பணிகள் ஊடாக பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உதவிசெய்தல் என்பவையாகும்.

இலங்கை வாழ் மக்களின் பிறப்பு, விவாகம், இறப்பு என்பவற்றைப் பதிவுசெய்வதற்கும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட சட்ட ஆவணங்களைப் பதிவுசெய்தவற்கும் பதிவாளர் நாயகத்தின் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இத்திணைக்களம் காணி மற்றும் சிவில் பொறுப்புகளைப் பதிவுசெய்வதற்காக முதலில் 1864ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. உதாரணம்: 1867ஆம் ஆண்டில் பிறப்பு, விவாகம், இறப்பு என்பவற்றைப் பதிவுசெய்தல்.

சிவில் பதிவு நடவடிக்கைகள் பிரதேச செயலக மட்டத்திற்குப் பன்முகப்படுத்தப்பட்டன. அதற்கு அமைவாக 332 பிரதேச செயலகங்களிலும் மாவட்ட பதிவாளர் பிரிவு இயங்குகின்றது. மாவட்ட அடிப்படையில் காணி பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

செயற்பாட்டுக்காக நாட்டில் 45 காணி பதிவு அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

பதிவாளர் நாயகத்தின் திணைக்களம் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்குகின்றது.

திணைக்களத்தின் நோக்கம்

  • விவாகம், பிறப்பு, இறப்பு போன்ற முதனிலை மனை நிகழ்வுகளின் பதிவைப் பாதுகாத்தல்
  • அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான சட்ட ஆவணங்களைப் பதிவுசெய்தல்
  • அத்தகையை பதிவுகள் சம்பந்தப்பட்ட பதிவேடுகளைப் பாதுகாத்தல்
  • அத்தகைய பதிவேடுகளின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை வழங்குதல்