1864ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்திற்கு 159 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெருமைமிக்க வரலாறு உண்டு. எங்களுடைய தொலைநோக்கின் ஊடாக இலங்கையில் விவாகம், பிறப்பு, இறப்பு போன்ற அடிப்படை வாழ்க்கை நிகழ்வுகள் பற்றிய பதிவுகளின் சான்றுப்படுத்தப்பட்ட ஆவணங்களைப் பதிவுசெய்தல் என்பவற்றின் மூலம் பொதுமக்களின் சிவில் உரிமைகளைப் பாதுகாத்தல் என்பவை இத்திணைக்களத்தின் செயற்பாடுகாளாகும்.
குடியியல் பதிவுமுறைமையின் கீழ் விவாகம், பிறப்பு, இறப்பு என்பவை இந்த திணைக்களத்தின்மூலம் 1867ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படவில்லை குடியியல் பதிவுமுறைமை பொது மக்களுக்கு அவர்களின் வசதிக்காக விரைவான சேவையை வழங்குவதற்காக 1992ஆம் ஆண்டு மாவட்ட செயலக மட்டத்திற்குப் பன்முகப்படுத்தப்பட்டது.
1998ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க உரித்து பதிவு சட்டத்தின் கீழ்இந்த திணைக்களத்திற்கு உரித்துகளைப் பதிவுசெய்யும் அதிகாரமளிக்கப்பட்டது.