பொதுமக்களுக்கு பிறப்பு, விவாகம், மரண பதிவுகளின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை வழங்குதல் பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்தின் பிரதான செயற்பாடாகும். பொதுமக்கள் விண்ணப்பிக்கும்போது இச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. சரியான இலக்கம், திகதி, சம்பவம் நிகழ்ந்த காலம் போன்ற கட்டாய விபரங்கள் விண்ணப்பதாரருக்கு தெரியாதபோது எழுத்துறுமுறையில் தேடுவது மிகவும் கஷ;டமாகும். இத்தகைய கால விரயத்தை ஏற்படுத்துகின்ற தேடும் வேலைகளைத் தவிர்ப்பதற்காக ந - பிறப்பு விவாகம் இறப்பு கருத்திட்டம் அறிமுக்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான நோக்கம், தரவுதலத்தைப் பேணுதல், முறைமையின் ஊடாக சான்றிதழ்களை வழங்குதல் மற்றும் பிறப்பு, விவாகம், இறப்பு ஆகியவற்றின் பதிவுசெய்யப்பட்ட தகவல்களை ஏனைய அரச முகவர் நிலையங்களுடன் பகிர்ந்துகொள்ளுதல் என்பவையாகும். இவற்றைவிட விருத்திசெய்யப்பட்ட தரவுதலம், விரைவான தேடலை நடத்துதல், சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை விரைவாக வழங்குதல் மற்றும் பிரதேச மட்டத்தில் உள்ள அலுவலகங்களுக்கு தரவுத்தலங்களைப் புகுத்துவதன் மூலம் சான்றிதழ்களை விநியோகிக்கும் பணிகளைப் பன்முகப்படுத்துதல் போன்ற நன்மைகளும் கிட்டுகின்றது.

முகவரி

தலைமை பதிவாளர் திணைக்களம்

234/A3,
டென்சில் கொப்பேகடுவ மாவத்தை,
பத்தரமுல்ல,
இலங்கை.

தொடர்புகளுக்கு
+94 112 889 488 - 489

மின்னஞ்சல்
info@rgd.gov.lk