பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்தல் மற்றும் பிரதிகளை வழங்குதல்

  • ாடளாவியரீதியில்உள்ள 334 பிரதேச செயலகங்களின் கீழ் அமைந்துள்ள ஒவ்வொரு பதிவாளர் பிரிவிலும் நியமிக்கப்பட்டுள்ள பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புப் பதிவாளர்களினால் இந்த ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
  • சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகள் பிரதேச செயலகங்களினால் விநியோகிக்கப்படுகின்றன.

அலுவலக நேரம்

  • பிரதேசசெயலகங்களில்அமைந்துள்ளமாவட்டபதிவாளர்பிரிவு கிழமை நாட்களில் மு.ப. 8.30 தொடக்கம் பி.ப. 3.45 வரை திறந்திருக்கும். (பணம் செலுத்துமிடங்கள் பி.ப. மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.)
    • சனி, ஞாயிறு மற்றும் அரச விடுமுறை தினங்களில் அன்றாட நடவடிக்கைகளுக்காக அலுவலகம் திறக்கப்படாது.
  • பிரிவுப்பதிவாளர்களின்அலுவலகநேரம்காலை மணி முதல் பிற்பகல் மணி வரையாகும்.

பிறப்பு பதிவுகள் மேற்கொள்ளப்படுவது குறித்த சம்பவம் நடைபெற்ற இடத்தினை அடிப்படையாகக் கொண்டாகும்.

வீட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்

1.   பிறப்பு நிகழ்ந்து 07 நாட்களுக்குள் கிராம உத்தியோகத்தருக்கு அறிவித்தல் வேண்டும்.

2,   ஒவ்வொரு பிறப்பு சம்பந்தமாகவும் அந்த பிறப்பு தொடர்பான படிவம் B23 இன் பிரகாரம் பூர்த்தி செய்யப்பட்ட அறிக்கையை கிராம உத்தியோகத்தரினால் பிறப்பு நிகழ்ந்த இடத்திற்குரிய பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளருக்கு அனுப்புதல் வேண்டும்..

3.   பிறப்பு நிகழ்ந்த இடத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளர் பிரிவின் பதிவாளரினால் பிறப்புகள் பதிவு செய்யப்படுகின்றன. (பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர்களின் பட்டியல்)

4,  முறையாக பூர்த்தி செய்யப்பட்ட பதிவு செய்தல் CR01 படிவத்தை பிறப்பு நிகழ்ந்த இடத்திற்குரிய பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் கையளித்தல் வேண்டும். குறித்த CR01 படிவத்தை பிறப்பு நிகழ்ந்த இடத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடமிருந்து அல்லது இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

5.   பிறப்பு தொடர்பாக அறிவிப்பதற்கு தகுதி பெற்ற நபர்கள்

  • தந்தை
  • தாய்
  • குழந்தை பிறக்கும் சந்தர்ப்பத்தில் அருகில் இருந்தவர்கள்
  • பாதுகாவலர்

6.   பிறப்பு தொடர்பாக அறிவிப்பதற்கு தகுதியான நபர்களால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

  • முறையாகபூர்த்திசெய்யப்பட்டபதிவுசெய்தல்CR01 படிவம்
  • பெற்றோரின் திருமணச் சான்றிதழின் புகைப்படப் பிரதி (இல்லையெனில் இலக்கம் 7 ஐப் பார்க்கவும்)
  • பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்களின் புகைப்படப் பிரதிகள்
  • தேசிய அடையாள அட்டையின் அசல் மற்றும் புகைப்படப் பிரதி

7.   பெற்றோர் திருமணமாகாதவர்களாக இருந்தால், தந்தையின் விபரங்களை உள்ளிடுவதற்காக பெற்றோர் இருவரும் பிறந்த இடத்திற்குரிய பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் செல்ல வேண்டும்.

8.   பிறந்த 03 மாதங்களுக்குள் பிறப்பினை இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம். பிறந்து 03 மாதங்களுக்குப் பின்னரும் பிறப்பி​னை பதிவு செய்து கொள்ள முடியுமென்பதோடு அதற்கு தாமதமான பிறப்பு பதிவு செய்தல் விபரங்களைப் பார்வையிடவும்.

9,   பிறப்பு பதிவு செய்யப்பட்டதன் பின்னர், தகவல் கொடுப்பவருக்கு பிறப்புச் சான்றிதழின் பிரதியொன்று இலவசமாக வழங்கப்படும்.

10. பிறந்த திததி மற்றும் இடம் ஆகியவை தாய்க்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையில் மாத்திரம் கூட (சில சமயங்களில் அதைவிடக் குறைவான தகவல்கள் அளிக்கப்பட்ட போதிலும்) பிறப்பினை பதிவு செய்ய முடியும். அங்கு வழங்கப்படும் தகவல்கள் தொடர்பான நிரல்கள் மாத்திரம் பூர்த்தி செய்யப்பட்டு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

 

*நீங்கள் குறித்த பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டவுடன், அதைவாசித்து பரீட்சித்ததன் பின்னர் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

(1951 ஆம் ஆண்டின் 17ம் இலக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.)

வைத்தியசாலையொன்றில் (அரசாங்க அல்லது தனியார்) நிகழும் பிறப்பினை பதிவு. செய்தல்

  • பிறப்புபதிவுசெய்யப்படுவது பிறப்புநிகழ்ந்தஇடத்திற்கான பிறப்புமற்றும்இறப்புபதிவாளரினால் ஆகும். (பிறப்புமற்றும்இறப்பு பதிவாளர்களின் பட்டியல்) பிறப்பு நிகழ்ந்தது ஒரு வைத்தியசாலையில் என்றால் குறித்த இடத்திற்காக நியமிக்கப்பட்ட அல்லதுவைத்தியசாலையில் நியமிக்கப்பட்டுள்ள பதிவாளருக்கு பிறப்பு பதிவு செய்வதற்காக அறிவிக்கப்படல் வேண்டும்.
  • பிறப்பினை பதிவு செய்வதற்காக அறிவித்தல் விடுப்பதற்கு தகுதிபெற்ற நபர்கள்,
    • தந்தை
    • தாய்
    • குழந்தை பிறந்த நேரத்தில் அருகிலிருந்த நபர்கள், குழந்தையை பொறுப்பேற்றவர்கள்
    • வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி
  • பெற்றோர்திருமணமாகாதவர்களாகஇருந்தால், தந்தையின் தகவலை உட்​சேர்ப்பதற்காக பெற்றோர் இருவரும், பிறப்பு நிகழ்ந்த வைத்தியசாலைக்குரிய பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளரிடம் செல்ல வேண்டும்.
  • பிறப்பினை அறிவிப்பதற்காக உரிய பதிவுசெய்தல் படிவம் CR01 இனை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்பதோடு இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • பிறப்பி​னை பதிவு செய்வதற்காக அறிவித்தல் விடுப்பதற்கு தகுதிபெற்ற நபர்களினால் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள ;
    • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட பதிவு செய்தல் படிவம் CR01
    • பிறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்தும் வகையில் வைத்தியசாலையினால் வழங்கப்படும் அறிக்கை
    • பெற்றோரின் திருமணச் சான்றிதழின் புகைப்படப் பிரதி
    • பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்களின் புகைப்படப் பிரதி
    • தேசிய அடையாள அட்டையின் அசல் மற்றும் புகைப்படப் பிரதி
  • அறிவித்தல் விடுப்பவருக்கு இலவசமாக பிறப்புச்சான்றிதழின் பிரதியொன்று வழங்கப்படும்.

*நீங்கள் குறித்த பிறப்புச் சான்றிதழைப் பெற்றவுடன், அதைவாசித்து பரீட்சித்ததன் பின்னர் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

(1951 ஆம் ஆண்டின் 17ம் இலக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.)

பதிவுசெய்யப்பட்ட தோட்டமொன்றில் நிகழும் பிறப்பினை பதிவு. செய்தல்

  • பிறந்த07 நாட்களுக்குள் பிறப்பைப் பதிவு செய்வதற்கான அறிவித்தலை வழங்குவதற்கு தகுதியுள்ள பின்வரும் நபர்களால் தோட்ட அதிகாரியிடம் (தோட்ட அதிகாரியொருவர் இல்லாத சந்தர்ப்பத்தில் அல்லது தோட்ட அதிகாரி அறிவித்தல் விடுக்கும் பொறுப்பை ஏற்கவில்லையாயின் பிறப்பு நிகழ்ந்த இடத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தரிடம்) தெரிவித்தல் வேண்டும்.
  • தோட்ட அதிகாரி இல்லாத சந்தர்ப்பத்தில் கிராம உத்தியோகத்தரிடம் பிறப்பு தொடர்பாக அறிவிப்பதாயின் வீட்டில் நிகழ்ந்த பிறப்பைப் பதிவு செய்தல் தொடர்பான விபரங்களைப் பார்வையிடவும்.
  • தகவல் கொடுப்பதற்குத் தகுதிபெற்ற நபர்கள்
    • தந்தை
    • தாய்
    • குழந்தை பிறக்கும் சந்தர்ப்பத்தில் அருகில் இருந்தவர்கள்
    • பாதுகாவலர்
  • தோட்ட அதிகாரியினால் தோட்டத்தின் பிறப்பு அறிக்கையை உறுதிப்படுத்தி பிறப்பினை பதிவு ​செய்யும் நபரினால் வழங்கப்படும் பதிவு ​செய்தல் CR01 படிவத்துடன்மாவட்ட வைத்திய அதிகாரி ஊடாக மாவட்டச் செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளருக்கு அனுப்பப்படும்.
  • மேலதிக மாவட்டப்பதிவாளர்பிறப்பைப்பதிவுசெய்து, பிறப்புச் சான்றிதழை சம்பந்தப்பட்ட தோட்ட அதிகாரிக்கு அனுப்பி வைப்பார்.
  • அறிவிப்பாளருக்கு தோட்ட அதிகாரியிடமிருந்து பிறப்புச் சான்றிதழை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

** நீங்கள் குறித்த பிறப்புச் சான்றிதழைப் பெற்றவுடன், அதைவாசித்து பரீட்சித்ததன் பின்னர் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

(1951 ஆம் ஆண்டின் 17ம் இலக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.)

வெளிநாடுகளில் நிகழும் பிறப்புகளை அந்தந்த நாட்டில் பதிவு செய்து கொள்ளல்

  • இலங்கைபெற்றோருக்கு (குறைந்தது ஒரு தரப்பினர் இலங்கையராக இருத்தல் வேண்டும்) வெளிநாட்டில்பிறந்த குழந்தைகளின் பிறப்புகளை வெளிநாட்டில் பதிவு செய்து கொள்ளலாம்
  • பிறப்புகள் பதிவு செய்யப்படுவது பிறப்பு நிகழ்ந்த நாட்டிலுள்ள இலங்கை தூதரகம் / இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திலேயாகும்
  • பிறப்பு அறிவிப்பிற்குத் தேவையான பிரகடனப் படிவத்தை இலங்கைத் தூதரகம் / இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
  • பிறப்பிளை பதிவதற்காக அறிவித்தல் வழங்குவதற்கு தகுதியான நபர்கள்,
    • தந்தை
    • தாய்
    • பாதுகாவலர்
  • சமர்ப்பிக்கவேண்டியஆவணங்கள், (அசல் மற்றும் நகல் பிரதிகளின் ஒரு தொகுதி சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.)
    • முறையாகப் பூர்த்திசெய்யப்பட்ட பிரகடனப் பத்திரம்
    • பிறப்பை உறுதிப்படுத்துவதற்குரிய ஆவணங்கள் (பிறப்பு நிகழ்ந்த வெளிநாட்டினால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் அல்லது வைத்தியசாலை அறிக்கை)
    • பெற்றோரின் திருமணச் சான்றிதழின் புகைப்படப் பிரதி
    • பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்களின் புகைப்படப் பிரதி
    • குழந்தை பிறக்கும் சந்தர்ப்பத்தில் பயன்படுத்திய கடவுச் சீட்டு மற்றும் விசா
    • தாய் மற்றும் தந்தை வெளிநாட்டின் குடியுரிமையைப் பெற்றிருந்தால் அச் சான்றிதழ்
  • அரசாங்கக் கட்டணமாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் விதிக்கப்பட்ட தொகையை அந்தந்த நாட்டின் செல்லுபடியாகும் நாணயத்தில் செலுத்தப்படல் வேண்டும்.

வெளிநாட்டில் நிகழ்ந்த பிறப்பி​னை இந்த நாட்டில் பதிவு செய்தல்

  • ஒருவருடகாலத்திற்குள் அரசாங்க கட்டணத்தைச் செலுத்திசம்பந்தப்பட்டநாட்டின்தூதரகம்/ உயர்ஸ்தானிகர் அலுவலகம்மூலம்பிறப்பைப்பதிவுசெய்து கொள்ளமுடியாவிட்டால், குறித்த பிறப்பை காலம் கடந்த பிறப்பு என பதிவு செய்வதற்காக பிறப்பு நிகழ்ந்த நாட்டின் தூதரகம்/ உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும். குறித்த ஆவணங்களை அனுமதிக்காக உரிய தூதரகத்தின் மூலம் மாளிகாவத்தை மத்திய ஆவணக் காப்பகத்திற்கு அனுப்பப்படும்.
  • சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள், (அசல் மற்றும் புகைப்படப் பிரதிகளின் ஒரு தொகுதி சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.)

தேவையான ஆவணங்கள்

  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட பிரகடப் பத்திரம்
  • பிறப்பை உறுதிப்படுத்துவதற்குரிய ஆவணங்கள் (பிறப்பு நிகழ்ந்த வெளிநாட்டினால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் அல்லது வைத்தியசாலை அறிக்கை)
  • பெற்றோரின் திருமணச் சான்றிதழ் (சான்றுப்படுத்திய பிரதி)
  • பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ் (சான்றுப்படுத்திய பிரதி)
  • குழந்தை பிறக்கும் சந்தர்ப்பத்தில் தாய் பயன்படுத்திய கடவுச் சீட்டு மற்றும் விசா
  • தாய் மற்றும்/அல்லது தந்தை வெளிநாட்டின் குடியுரிமையைப் பெற்றிருந்தால் அச் சான்றிதழ்
  • மேலும், குழந்தை பிறந்து ஒரு வருடம் நிறைவடைவதற்கு முன்னர் / நிறைவடைந்ததன் பின்னர் ஆகிய எச் சந்தர்ப்பத்திலும் சம்பந்தப்பட்ட தூதரகம்/ உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மூலம் பதிவு செய்யப்படவில்லையெனின், மாளிகாவத்தை மத்திய பதிவறையில்  ஆவணங்களை சமர்ப்பித்து பிறப்பினை பதிவு செய்து கொள்ளலாம்.
  • பிறப்பை அறிவிப்பிற்குத் தேவையான பிரகடனப் படிவத்தை மாளிகாவத்தை மத்தியப் பதிவறையின் கொன்சியூலர் பிரிவில் பெற்றுக் கொள்ளலாம்.
  • பிறப்பினை பதிவதற்காக அறிவித்தல் வழங்குவதற்கு தகுதியான நபர்கள்,
    • தந்தை
    • தாய்
    • பாதுகாவலர்
  • அதற்காக, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் தூதரகப் பிரிவில் பதிவுக் கட்டணமாக ரூ.13,755.00 தொகையைச் செலுத்தி பெற்றுக்கொண்ட பற்றுச் சீட்டை சமர்ப்பித்தல் வேண்டும்.

**அதற்குத் தேவையான தகவல்களைப் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் மத்திய பதிவறையின் பிரதிப் பதிவாளர் நாயகத்திடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். தொலைபேசி இல. +94 112 329 773 அல்லது +94 112 433 075 / 071 8255066

பதிவு செய்யப்படாத பிறப்பினை பதிவு செய்தல்

காலம் கடந்த பிறப்புகளை பதிவு செய்தல்

  • பிறப்பு நிகழ்ந்து மூன்றுமாதங்களுக்குள்பதிவுசெய்யப்படாவிட்டால், அத்தகைய பிறப்பை காலம் கடந்த பிறப்பாக பதிவு செய்து கொள்ளலாம். (8/2008 சுற்றறிக்கையைப் பார்க்கவும்.)
  • அதற்காக, பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு பதிவுச் சட்டத்தின் 24வது பிரிவின் கீழான ஒரு பிரகடனத்தைபிறப்பு நிகழ்ந்த இடத்தின் பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். (மூன்று மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை சமர்ப்பிக்கப்படும் பிரகடனப் பத்திரத்திற்கு, பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளரினால் அனுமதி வழங்கப்படலாம்.)
  • பிரகடனப் பத்திரத்தை சமர்ப்பிக்கத் தகுதியானவர்கள்,
    • பெற்றோரில் ஒருவர்
    • குழந்தையின் பாதுகாவலர்
    • ஆர்வமுள்ள எவரேனும் ஒருவர்
  • பிரகடனப்பத்திரத்திற்கான கட்டணம் ரூ. 60.00.
  • பிறந்த ஒரு வருடத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் பிரகடனப் பத்திரத்துடன் பின்வரும் ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
    • பெற்றோர்திருமணம்முடித்தவர்களாயின், அவர்களது திருமணச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி​யொன்று
    • பிறந்த நபரின் பிறந்த திகதி மற்றும் இடத்தை உறுதிப்படுத்தும் பின்வரும் ஆவணங்களில் ஒன்று
      • வைத்தியசாலை பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
      • கிராம உத்தியோகத்தரின் பிறப்பு பதிவு அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி (B
      • தோட்ட பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
      • குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தரின் சான்றிதழ்
  • மேலே குறிப்பிட்ட ஆவணங்கள் எதுவும் இல்லை என்றால், அதற்குப் பதிலாக பின்வரும் ஆவணங்களில் ஒன்று,
    • ஆரோக்கிய விருத்திப் பதிவேடு
    • ஞானஸ்நான சான்றிதழ்
    • பாடசாலை சேர்வு பதிவேட்டின் சான்றுப்படுத்திய பிரதி/ மாணவர் முன்னேற்ற அறிக்கை
    • தோட்ட நலன்புரி உத்தியோகத்தரின் அறிக்கை
    • பிறந்த திகதிக்கு அண்மித்து தயாரிக்கப்பட்ட சோதிடம் அல்லது ஜாதகக் குறிப்பு-
  • இந்த ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றால், தெரிந்த விபரங்களை உள்ளடக்கிய பிரகடனப் பத்திரம் மற்றும் உறுதிமொழிப் பத்திரம்
  • பிறந்து ஒரு வருடத்தின் பின்னர் சமர்ப்பிக்கப்படும் பிரகடனப் படிவத்துடன் பின்வரும் ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
    • பிறப்பு பதிவு செய்யப்படவில்லை என்பதற்கான சான்றிதழ் (வெற்று சான்றிதழ்)
    • பெற்றோர் திருமணம் முடித்தவர்களெனின் அவர்களது திருமணச் சான்றிதழின் சான்றுப்படுத்திய பிரதி
    • பிறந்த நபரின் பிறந்த திகதி மற்றும் இடத்தை உறுதிப்படுத்தும் பின்வரும் ஆவணங்களில் ஒன்று
      • வைத்தியசாலை பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்திய பிரதி
      • கிராம உத்தியோகத்தரின் பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்திய பிரதி  (B
      • தோட்ட பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்திய பிரதி
      • குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தரின் சான்றிதழ்
  • மேலே உள்ள ஆவணங்கள் எதுவும் இல்லை என்றால், அதற்குப் பதிலாக பின்வரும் ஆவணங்களில் ஒன்று,
    • ஆரோக்கிய விருத்திப் பதிவேடு
    • ஞானஸ்நான சான்றிதழ்,
    • பாடசாலை சேர்வு பதிவேட்டின் சான்றுப்படுத்திய பிரதி/ மாணவர் முன்னேற்ற அறிக்கை
    • தோட்ட நலன்புரி உத்தியோகத்தரின் அறிக்கை
    • பிறந்த திகதிக்கு அண்மித்து தயாரிக்கப்பட்ட சோதிடம் அல்லது ஜாதகக் குறிப்பு-

இந்த ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றால், தெரிந்த விபரங்களை உள்ளடக்கிய பிரகடனப் பத்திரம் மற்றும் உறுதிமொழிப் பத்திரம்

அனுமான வயது சான்றிதழ்களை வழங்குதல்

  • பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்வதற்கு சரியான தகவலை (வைத்தியசாலைபிறப்பு அறிக்கை/ கிராம உத்தியோகத்தர் அறிக்கை போன்ற பிறப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணம்) ழங்க முடியாத எந்தவொரு நபரும், பிறந்த இடத்திற்குரிய பிரதேச செயலகத்தில் அனுமான வயதுச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • தேவையான ஆவணங்கள்
    • பிரகடனப் பத்திரம்
    • ஆவண தேடல் முடிவுகள்
    • சத்தியக் கடதாசி மற்றும் அறிக்கைகள்
    • கிராம உத்தியோகத்தர் அறிக்கை
    • பிறப்பை நிரூபிக்கக்கூடிய தகவல்
    • பிறந்த திகதியை நிரூபிக்கக்கூடிய ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் அனுமான வயதுச் சான்றிதழில் பிறந்த திகதியை பதிவு செய்து கொள்ளலாம்.
  • இது சம்பந்தமாக மேலதிக விபரங்கள் தேவைப்படின், அருகிலுள்ள பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளரை தொடர்பு கொள்ளவும்

பிறப்புச் சான்றிதழில் உள்ளிடப்பட்ட விபரங்களைத் திருத்துதல்

  • பிறப்புபதிவு செய்தல்குறிப்பொன்றில்,
    • 01 வது நிரலின் விபரம் - பிறந்த திகதி மற்றும் பிறந்த இடம்
    • 02 வது நிரலில் எந்தவொரு பெயரும் உள்ளிடப்படாத சந்தர்ப்பத்தில், ஒரு பெயரை உள்ளிடுவதற்கு அல்லது பிறப்புச் சான்றிதழில் உள்ளிடப்பட்ட பெயரை பின்னர் மாற்றுவதற்கு
    • 03 வது நிரலின் விபரம் – ஆண்/பெண்
    • 04 வது நிரலின் விபரம் - தந்தையின் விபரங்களை (இனம் தவிர) திருத்துவதற்கு
    • 05 வது நிரலின் விபரம். – தாயின் அனைத்து விபரங்களையும்
    • 06 வது நிரலின் விபரம். – பெற்றோர் திருமணமானவர்கள்/ திருமணமாகாதவர்கள்
    • 07 வது நிரலின் விபரம். – பாட்டனின் விபரங்கள்
    • 09 வது நிரலின் விபரம். – அறிவிப்பாளரின் விபரங்கள்

ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

  • ​இது தொடர்பான பிரகடனப் பத்திரத்தை, பிறப்பு நிகழ்ந்த இடத்திற்குரிய பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
  • பிரகடனப் பத்திரத்தை சமர்ப்பிக்க முடியுமானவர்கள்,
    • பிறப்புக்குரிய நபர்
    • தந்தை அல்லது தாய்
    • சட்டப்பூர்வ பாதுகாவலர்
    • பிறப்புக் குறிப்பிலுள்ள ஏதேனும் விபரங்களில் திருப்தியடையாத நபரொருவர்
  • பிரகடனப் பத்திரத்திற்கான கட்டணம் ரூ. 60.00.
  • திருத்தப்பட வேண்டிய பிறப்புச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியொன்றை பிரகடனப் படிவத்துடன் கட்டாயம் இணைத்தல் வேண்டும். கோரிக்கையின் உண்மைத்தன்மையை நிரூபிப்பதற்கு எழுத்துப்பூர்வமான ஆதாரம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
  • பிரகடனப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ள உரிமைக் கோரலின் உண்மைத்தன்மையை நிரூபிப்பதற்கு பெற்றுக்கொள்ள முடியுமான சில எழுத்துப்பூர்வ ஆதாரங்கள் உங்கள் வசதிக்காக கீழே காட்டப்பட்டுள்ளன.
    • பெற்றோரின் திருமணச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
    • குழந்தைகளின் பெயர்கள்/ உடன்பிறப்புகளின் பெயர்கள்
    • தந்தை மற்றும் தாயின் பிறப்புச் சான்றிதழ்களின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகள்
    • பெற்றோரின் திருமணத்தைப் பதிவு செய்ததன் பின்னர் பிறந்த குழந்தையின் பிறப்புச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட  பிரதி
    • திருமணத்தைப் பதிவுசெய்த பின்னர் பிறந்த குழந்தைகள் இல்லாத நிலையில், சம்பந்தப்பட்ட குழந்தையின் மூத்த அல்லது இளைய குழந்தையின் பிறப்புச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
    • மருத்துவமனைகள், மகப்பேறு இல்லங்களில் உள்ள பதிவுகளின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி அல்லது மகப்பேற்று தாதியின் பதிவேட்டின் பிரதி.
    • மாணவர் ​​முன்னேற்ற அறிக்கை, பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்கும் பதிவேட்டின் பிரித்தெடுப்பு.
    • பிறப்புக்குரிய நபர் மற்றும் பெற்றோரின் பெயர்கள் அடங்கிய வாக்காளர் பட்டியலின் பிரதி

தந்தை மரணித்திருப்பின் அவரது இறப்புச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி

ஒரு குழந்தையை தத்தெடுத்தல்

  • தத்தெடுக்கும் குழந்தையின்வயது 14 வருடங்களுக்கு மேற்படாதிருத்தல் வேண்டும்.
  • விண்ணப்பதாரரினால் பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள்,
    • விண்ணப்பதாரரின் வயது 25 வயதுக்கு மேற்பட்டிருத்தல் வேண்டும்.
    • விண்ணப்பதாரருக்கும் சம்பந்தப்பட்ட குழந்தைக்கும் இடையிலான குறைந்தபட்ச வயது இடைவெளி 21 ஆண்டுகள் இருத்தல் வேண்டும்.
    • சம்பந்தப்பட்ட குழந்தை விண்ணப்பதாரரின் வழித்தோன்றல், விண்ணப்பதாரரின் சகோதரன்/ சகோதரியின் குழந்தை அல்லது அவர்களது வழித்தோன்றல் அல்லது அவர்களது மனைவியின் குழந்தையாக இருந்தால், மேற்குறிப்பிட்ட நிபந்தனை பொருந்தாது.
  • தத்தெடுக்கப்படும் குழந்தை 10 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் குழந்தையின் இணக்கப்பாடு அவசியமாகும்.
  • சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் தத்தெடுப்ப்பதற்கான கட்டளை வழங்கப்படுவது மாவட்ட நீதிமன்றத்தினாலாகும்.
  • குறித்த கட்டளையை (படிவம் இலக்கம் 4) அடிப்படையகக் கொண்டு தத்தெடுப்புச் சான்றிதழ் (படிவம் B, இதன் மூலம் தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் பிறப்பை மீண்டும் பதிவு செய்து கொள்ளலாம்.
  • பிறப்பை மீள்பதிவு செய்துகொள்வதற்காகப் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பித்தல் வேண்டும்.
    • பிறப்பை மீள் பதிவு செய்துகொள்வதற்கான விண்ணப்பம் (B
    • பெற்றோரின் திருமணச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
    • தாய் மற்றும் தந்தையின் பிறப்புச் சான்றிதழ்களின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
    • குழந்தைக்கு இதற்கு முன்னர் பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்திருந்தால், அந்தச் சான்றிதழ் அல்லது பதிவு செய்யப்படவில்லையாயின் வெற்று தேடுதல் முடிவுப் பத்திரம்
  • பிறப்பை மீள் பதிவு செய்வதற்கு, மேற்குறிப்பிட்ட தகவல்களுடன் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை, பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் குழந்தை பிறந்த இடத்திற்குரிய பிரதேச செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகள் மற்றும் மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளை பெற்றுக்கொள்ளல்.

சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகள் மற்றும் மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளை பெற்றுக்கொள்ளல்.

பிறப்புச் சான்றிதழ்களின் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளல்

  • பிறப்புச்சான்றிதழின்பிரதிகளை பிறந்தஇடத்தின்பிரதேசசெயலகத்தில்இருந்துபெற்றுக் கொள்ளப்படல்வேண்டும்.
    • குறித்த சான்றிதழ் தரவு அமைப்பில் இருந்தால், உங்களுக்கு அருகிலுள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலிருந்தும் அதன் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியைப் பெற்றுக் கொள்ளலாம்.
    • தரவுகள்உள்ளதாஎன்பதை உங்கள் அருகில் உள்ள பிரதேச செயலகத்தில் நீங்கள் பரிசோதித்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.)
  • தேவையான விண்ணப்பப் படிவத்தை எந்தவொரு பிரதேச செயலகத்திலும் உள்ள மாவட்ட பதிவாளர் பிரிவில் / இணையதளத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.
  • அறவிடப்படும் கட்டணம்,
    • பிறப்புச்சான்றிதழின்இலக்கம்மற்றும்பதிவுசெய்யப்பட்ட திகதி தெரிந்திருந்தால் - ஒரு பிரதிக்கான கட்டணம் ரூ.120.00.
    • பிறப்புச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவு செய்யப்பட்ட திகதி தெரியவில்லை எனின் (இரண்டு ஆண்டுகளுக்கு மேற்படாத ஆவணத் தேடல் அவசியமென்பதால்) - ஒரு பிரதிக்கான கட்டணம் ரூ.250.00.
  • உரிய கட்டணத்தை பிரதேச செயலகத்தில் அல்லது பதிவாளர் நாயகத்தின் இலங்கை வங்கியின் (புறக்கோட்டை கிளை) கணக்கு இலக்கம் 7039827 இற்கு செலுத்தி, வங்கியினால் வழங்கப்படும் பற்றுச் சீட்டு (Bank Slip) மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை உரிய பிரதேச செயலகத்தில் சமர்ப்பித்து சான்றுப்படுத்தப்பட்ட பிரதியைக் கோரலாம்.
  • பிறப்புச் சான்றிதழை தபால் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டியிருப்பின், சுய முகவரியிடப்பட்ட முத்திரையிடப்பட்ட கடிதவுறை, விண்ணப்பப் படிவம் மற்றும் மேற்குறித்தவாறு பணம் செலுத்திய பற்றுச் சீட்டு ஆகியவற்றுடன் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
  • பிறப்பு பதிவு செய்யப்பட்டிருந்தால், செலுத்தப்பட்ட தொகைக்கு ஏற்ப தொடர்புடைய பிறப்புச் சான்றிதழின் கோரப்பட்ட பிரதிகளின் எண்ணிக்கை வழங்கப்படும் என்பதோடு பிறப்பு பதிவு செய்யப்பட்டிருக்காவிடின் அது தொடர்பாக படிவம் B38 மூலம் தெரிவிக்கப்படும்.

** அத்தோடு https://online.ebmd.rgd.gov.lk இற்கு பிரவேசிப்பதன் மூலம் Online முறையின் மூலம் சான்றிதழ்களின் பிரதிகளைக் கோரவும் முடியும்.

பிறப்புச் சான்றிதழ்களின் மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளைப் பெற்றுக் கொள்ளல்

  • இந்தச்சேவையைப் பெற்றுக்கொள்ள முடியுமான மொழிபெயர்ப்பாளர்கள் பணிபுரியும் திணைக்களத்தின் கிளை அலுவலகங்கள் தொடர்பான விபரங்களை இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.. மொழிபெயர்ப்பாளர்கள் பணிபுரியும் அலுவலகங்கள்
  • பெற்றுக்கொள்ள முடியுமான மொழிபெயர்ப்புகள்
    • சிங்களம் – ஆங்கிலம்
    • ஆங்கிலம் – சிங்களம்
    • தமிழ் – ஆங்கிலம்
    • ஆங்கிலம் – தமிழ்
  • விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் நேரம் : வாரத்தின் அலுவலக நாட்களில் மு.ப. 9.00 மணி. – பி.ப. 2.30 (சனி, ஞாயிறு மற்றும் அரச விடுமுறை நாட்களில் திறக்கப்படாது.)
  • விண்ணப்பப் படிவத்தை மொழிபெயர்ப்பாளர்கள் பணிபுரியும் அலுவலகங்களிலிருற்தோ அல்லது இணையதளத்திலிருந்தோ பெற்றுக் கொள்ளலாம்.
  • சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்,
    • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
    • மொழிபெயர்க்கப்பட வேண்டிய ஆவணத்தின் அசல் பிரதி அல்லது பிரதேச செயலகத்திலிருந்து பெறப்பட்ட சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
    • தபால் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டுமெனின், மேற்குறித்த தேவைப்பாடுகளுக்கு மேலதிகமாக சுய முகவரியிடப்பட்ட முத்திரையிடப்பட்ட கடித உறை
  • மொழிபெயர்ப்பு கட்டணம்
    • ஒரு மொழிபெயர்ப்புப் பிரதிக்கு ரூ. 600.00.
    • எத்தனை மொழிபெயர்ப்புப் பிரதிகளையும் பெற்றுக்கொள்ளலாம்
  • கால எல்லை : 05 கடமை நாட்கள்.
  • தற்போது ஒரு நாள் சேவை இல்லை.

முகவரி

தலைமை பதிவாளர் திணைக்களம்

234/A3,
டென்சில் கொப்பேகடுவ மாவத்தை,
பத்தரமுல்ல,
இலங்கை.

தொடர்புகளுக்கு
+94 112 889 488 - 489

மின்னஞ்சல்
info@rgd.gov.lk