பிறப்பு, விவாகம், மரண சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுவது எப்படி?

தயவுசெய்து சம்பவம் நிகழ்ந்த மாவட்டத்தில் எந்தவொரு பிரதேச செயலகத்திற்கு விண்ணப்பிக்கவும். விண்ணப்ப படிவங்களை பிரதேச செயலகத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

விவாகத்தைப் பதிவுசெய்வது எப்படி?

அப்பிரிவின் விவாக பதிவாளரை அல்லது பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட செயலாளரைத் தொடர்புகொள்ளவும்.

இலங்கைக்கு வெளியில் நிகழ்ந்த பிறப்பை/ இறப்பைப் பதிவுசெய்வது எப்படி?

பெற்றோருடைய கடவுச் சீட்டுக்கள், மற்றும் குழந்தையின் வைத்தியசாலை அறிக்கை/குறித்த நாட்டில் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் என்பவற்றுடன் கொழும்பு 10, மாளிகாவத்த, திணைக்களத்தின் மத்திய பதிவேடுகள் கூடத்திற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மரணத்தைப் பதிவுசெய்வதற்கு ஆளடையாத்தையும் மரணத்திற்கான காரணத்தையும் நிரூபிக்கும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

சுவீகாரம் எடுத்த பிள்ளையை பதிவுசெய்வது எப்படி?

பெற்றோர்களுடைய பிறப்புச் சான்றிதழ்கள், விவாக சான்றிதழ், சுவீகார சான்றிதழ், ஏற்கனவே பிள்ளையின் பிறப்பு பதிவுசெய்யப்பட்டிருந்தால்  அந்த பிறப்புச் சான்றிதழ் என்பவற்றுடன் இல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்ல என்ற முகவரியில் உள்ள பதிவாளர் நாயகத்தின் தலைமை அலுவலகத்திற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

சுவீகார சான்றிதழைப் பெறுவது எப்படி?

2013.01.01ஆம் திகதிக்கு முன்னர் பதிவுசெய்யப்பட்ட பிறப்புக்கு இல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்ல என்ற முகவரியில் உள்ள பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்தின் மத்திய பதிவேடுகள் கூடத்திற்கும் 2013.01.01ஆம் திகதிக்குப் பின்னர் பதிவுசெய்யப்பட்ட பிறப்புக்கு இல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்ல. என்ற முகவரியில் உள்ள பதிவாளர் நாயகத்தின் தலைமை அலுவலகத்திற்கும்  விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

பிறப்பு, விவாகம், மரண பதிவு சான்றிதழ்களின் மொழிபெயர்ப்பைப் பெற்றுக்கொள்ளுவது எப்படி?

இல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்ல என்ற முகவரியில் உள்ள பதிவாளர் நாயகத்தின் தலைமை அலுவலகத்திற்கு அல்லது திணைக்கள இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மொழிபெயர்பபாளர்களுக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

பிறப்பு/இறப்பு சான்றிதழில் திருத்தங்களை மேற்கொள்ளுவது எப்படி?

சம்பவம் நிகழ்ந்த மாவட்டத்தில் உள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திற்கும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். மேலதிக விபரங்களைப் பெற பிரதேச செயலகத்தில் உள்ள மேலதிக மாவட்;ட பதிவாளரைச் சந்திக்கவும்.

ஒரு காணியைப் பதிவுசெய்வது எப்படி?

தயவுசெய்து காணி அமைந்துள்ள இடத்திற்குரிய காணி பதிவு அலுவலகத்திற்கு ஆவணத்தைச் சமர்ப்பிக்கவும். இணையத்தளத்தில் காணி பதிவு அலுவலகங்களின் அமைவிடம் தரப்பட்டுள்ளது.

ஓர் உரித்தைப் பதிவுசெய்வது எப்படி?

தயவுசெய்து காணி அமைந்துள்ள இடத்திற்குரிய காணி பதிவு அலுவலகத்திற்கு ஆவணத்தைச் சமர்ப்பிக்கவும். இணையத்தளத்தில் காணி பதிவு அலுவலகங்களின் அமைவிடம் தரப்பட்டுள்ளது.

அற்றோனி தத்துவத்தைப் பதிவுசெய்வது எப்படி?

சட்டத்தரணி உரித்தாகவுள்ள வலயத்தில் உள்ள வலய அலுவலகத்திற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். அத்துடன், நாடு முழுவதிலும் உள்ள சட்டத்தரணிகள் இல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்ல என்ற முகவரியில் உள்ள பதிவாளர் நாயகத்தின் தலைமை அலுவலகத்திற்கும்  விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

அற்றோனி தத்துவத்தின் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளுவது எப்படி?

அற்றோனி தத்துவம் பதிவுசெய்யப்பட்ட அலுவலகத்திற்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இலங்கைக்கு வெளியில் உள்ள தரப்பினரிடையே விவாகத்தைப் பதிவுசெய்வதற்கு நிரப்ப வேண்டிய விபரங்கள் யாவை?

இலங்கையில் விவாகம் செய்துகொள்ளுவதற்கு விவாக பதிவுபற்றி அறிவிப்பதற்கு முன்னர் குறைந்தபட்சம் நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருந்திருக்க வேண்டும்.

வயதை நிரூபிப்பதற்கு பிறப்புச் சான்றிதழ்கள், கடவுச்சீட்டுகள்/அடையாள அட்டைகள் என்பவற்றைக் கொண்டுவர வேண்டும். குடியியல் நிலையை நிருபிப்பதற்கான ஆவணங்கள். (விவாகம் செய்யவில்லை என்பதற்கு சான்றிதழ்(சத்தியகடதாசி) அல்லது விவாகரத்து சான்றிதழ், விதவையாக இருந்தால், வாழ்க்கைத் துணையின் மரண சான்றிதழ் மற்றும் உங்களுடைய முன்னைய விவாக சான்றிதழ்)

நீங்கள் தற்காலிகமாக தங்கியிருக்கும் பிரதேசத்தில் உள்ள விவாக பதிவாளருக்கு விவாக அறிவித்தலை வழங்க வேண்டும்.

இலங்கைக்கு வெளியில் உள்ள ஒரு நபர் பிறப்பு, விவாகம், மரண சான்றிதழ்களின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

1. பின்வரும் வழியில் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிக்கு விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்க xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

2. அறவிடப்படும் கட்டணம்,

பதிவேடுகளைத் தேடி ஒரு பிரதியை வழங்குவதற்கு £ 3.

நீங்கள் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளுக்கு திருப்பி அனுப்புகின்ற முத்திரை கட்டணத்துடன் பதிவாளர் நாயகத்தின் பெயருக்கு சர்வதேச காசு கட்டளைமூலம் அல்லது காசோலைமூலம் செலுத்த முடியும்.

*நிகழ்வு பதிவுசெய்யப்பட்டிருந்தால் சான்றிதழ் அனுப்பிவைக்கப்படும். பதிவுசெய்யப்படாவிட்டால் முடிவுபற்றிய கடிதம் அனுப்பிவைக்கப்படும். உங்களுக்கு சான்றிதழின் மொழிபெயர்ப்பு தேவைப்பட்டால் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கின்றபோது மொழிபெயர்ப்புக்கும் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.(விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.)

உங்களுக்கு சான்றிதழின் மொழிபெயர்ப்பு தேவைப்பட்டால் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கின்றபோது மொழிபெயர்ப்புக்கும் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.(விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.) xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

ஒவ்வொரு பிரதிக்கும் ரூபா. £5 அறவிடப்படும். மேற்குறிப்பிட்டுள்ளவாறு செலுத்த முடியும்.

உதவி பதிவாளர் நாயகம்,
மத்திய பதிவேடுகள் அறை,
மாளிகாவத்தை,
கொழும்பு 10,
இலங்கை.

முகவரி

தலைமை பதிவாளர் திணைக்களம்

234/A3,
டென்சில் கொப்பேகடுவ மாவத்தை,
பத்தரமுல்ல,
இலங்கை.

தொடர்புகளுக்கு
+94 112 889 488 - 489

மின்னஞ்சல்
info@rgd.gov.lk